நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மார்ச் 04, 2026

தரிசனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
மாசி
 புதன்கிழமை

கும்பகோணம்
மாசிப் பெருந்திருவிழா


மக்கள் திரள் கலைந்திருந்தது.. ஆயினும்  சீரான அழகுடன் மகாமகக் குளக்கரை..

மாசி மகத்தன்று மதியப் போதில் தீர்த்தவாரி வைபவம் முடிந்திருக்க நான் பிற்பகல் 3:45 மணியளவில் மகாமகக்குளத்தில் இறங்கி தீர்த்தத்தைத் தலையில் தெளித்துக் கொண்டு பரவசம் அடைந்தேன்..

நூற்றுக்கணக்கான மக்கள் நீராடிக் கொண்டு இருக்க என்னைப் போலவும் பற்பலர்...

குளத்திலிருந்து கரையேறி மேற்கு நோக்கி விளங்குகின்ற ஸ்ரீ அமிர்தவல்லி உடனாகிய அபிமுகேஸ்வரர் கோயிலில் சிவதரிசனம்.

ஒரு ஓரத்தில் செருப்பை விட்டு விட்டு திருக்குளத்தை வலம் வரத் தொடங்கினேன்...

கூட்டமாக இருந்தாலும் நெரிசல் இல்லை..

திரு உலா முடிந்த நிலயில் விஸ்வநாதர் அபிமுகேசர் தேர்களும் சப்பரங்களும் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தன..







ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணத்திற்காக 
மேற்குப் படித்துறையில் பெண்கள் கூடியிருந்தனர்..



வழியில் ஸ்ரீ விசாலாட்சி சமேத விஸ்வநாதப் பெருமான் தரிசனம்..











எவ்வித இடையூறும் இன்றி மகாமகக் குளத்தினை வலம் வந்து நிறைவு செய்தேன்..








மாலை ஆறு மணிக்கு மேல் திருக்குளத்தில் தீர்த்த ஆரத்தி...

மக்கள் மீண்டும் திரண்டு கொண்டிருந்தனர்.... 

தீர்த்த ஆரத்தியைத் தரிசிக்க ஆசை.. 

இருந்தாலும்
தொடர்ந்து நடந்ததனால் 
களைப்பு மேலிட்டது.. 

பேருந்து நிலைய நெரிசலை நினைத்தபடி ஸ்டேஷனுக்குச் சென்று ரயில் மூலம்  இரவு 8:00 மணியளவில்
தஞ்சைக்குத் திரும்பினேன்...

இயன்ற அளவில் தங்களுக்காக காட்சிப்படுத்தியுள்ளேன்...

காணொளி
வழங்கியோர்
சித்தர் வழிபாட்டுக்குழு

அவர் தமக்கு நன்றி


எல்லாம் ஈசன் செயல்
 
ஓம் நம சிவாய
***

10 கருத்துகள்:

  1. "மகாமக திருநாளில் மங்கலம் பொங்கும்.  மாசிமகத் திருநாளில் உண்மை விளங்கும்.  நவநதிகள் தூய்மை பெரும் நல்ல நாள் அது.  நன்மை எல்லாம் உலகில்பெற நமக்கு வாய்த்தது..."

    பதிலளிநீக்கு
  2. சென்ற வருடம் மகாமகக் குள அனுபவம் பெற்றேன்.  படங்கள் பகிர்ந்திருந்தேன். கொஞ்சம் தூய்மையற்று இருந்தது நீர் அப்போது.  இப்போது எப்படி இருக்கிறது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. நீரைக் குறை சொல்லுவது பாவம்...

      நீர் வரத்து இல்லாத குளம்... மகாமகத்திற்கு முன்னால் பெரிய அளவில் சுத்தம் செய்யப்படும்..

      நீக்கு
  3. குளத்தில் இறங்கி தலையில் நீர் தெளித்துக்கொண்டு, அருகிலுள்ள இரண்டு கோவில்கள் தரிசித்து, குளத்துக்கு எதிரே இருந்த ஹோட்டல் ஒன்றில் உணவுண்டோம். பெயர் நினைவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒன்றிரண்டைத் தவிர மற்ற அனைத்தும் தரமில்லாதவை...

      நீக்கு
  4. மகாமக நாளில் வீதி உலா. சிறப்பு. எனக்கும் கும்பகோணம் பகுதிகளுக்குச் சென்று வர எண்ணம் உண்டு. பார்க்கலாம் - சனி, ஞாயிறு கிழமைகள் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்பதால் முதலில் உள்ளூர் ஆலயங்கள் சென்று கொண்டிருக்கிறேன்.

    உங்கள் தயவில் மகாமக விழா தரிசனம் கிடைத்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை.இறைவன் அமர்ந்திருந்த தேர்களின் படங்கள், மகாமக குளத்தின் படங்கள் அனைத்தும் மிகச்சிறப்பாக உள்ளது. உங்கள் தயவால் நானும் மகாமகம் திருவிழாவின் தரிசனங்களை பெற்றேன்.

    ரிஷப வாகனத்தில் ஈஸ்வரர், குதிரை வாகனத்தில் அம்பாள், மூஞ்சூறு வாகனத்தில், பிள்ளையார், தம்பதி சகிதமாக சுப்பிரமணியர் அனைவரையும் தரிசித்துக் கொண்டேன்.

    காணொளியும் கண்டேன். மக்கள் அனைவரும் பக்தி பெருக்கில் உற்சாகமாக இருக்கின்றனர். இங்கெல்லாம் போகும் வாய்ப்புக்கள் இதுவரை நான் பெற்றதில்லை. உங்கள் பதிவுகளில் தரிசித்து பெரும் மகிழ்ச்சி அடைவதுடன் சரி. உங்களின் இந்தப் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் இறைவன் செயல்..

      தங்களது மகிழ்ச்சியே
      எனது மகிழ்ச்சி..

      நன்றியம்மா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..