நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், பிப்ரவரி 10, 2026

வீரட்டம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
தை 
 செவ்வாய்க்கிழமை

திருக்கண்டியூர்
வீரட்டம்

ஸ்ரீ  மங்களாம்பிகை  உடனாகிய வீரட்டானேசுவரர்  திருக்கோயில்

அகந்தையுடன் இருந்த ஸ்ரீபிரம்ம தேவன் தண்டிக்கப்பட்ட தலம்...

ஸ்ரீ பைரவர் தோற்றமுற்ற திருத்தலம்..

மேற்கு நோக்கிய திருக்கோயில்..

இக்கோயிலின் எதிர்த் திசையில் தான் திவ்ய தேசம்...

ஸ்ரீ பிரம்ம தேவனும் சரஸ்வதியும் தனி சந்நிதியில் விளங்குவது சிறப்பு.











மூலஸ்தானத்தைச் சுற்றியிருக்கின்ற உள்நாழி கண்டறியப்பட்டு கண்ணாடிப் பலகைகளால் மூடப்பட்டுள்ளது



வெளித் திருச்சுற்றில் 
ஸ்ரீ பத்ர காளியம்மன் சந்நிதி


 தஞ்சை -  திருவையாறு வழித்தடத்தில் 7 கிமீ தொலைவு...

ஓம் நம சிவாய
***

6 கருத்துகள்:

  1. படங்கள் அருமை. ஓம் சிவாய நம.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. திருக்கண்டியூர் வீரட்டம் கோவில் படங்கள் அற்புதமாக உள்ளது. இக்கோவிலைப்பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். கோவிலைப் பற்றிய விபரங்களை தெரிந்து கொண்டேன்.

    கோபுர தரிசனம், கொடிமர தரிசனம், விமான தரிசனம் அனைத்தும் நன்றாக கிடைத்தது. ஸ்ரீ மங்களாம்பிகை உடனாகிய வீரட்டானேசுவரரை தரிசித்துக் கொண்டேன்.

    மூலஸ்தானத்தைச் சுற்றியிருக்கின்ற உள்நாழி கண்ணாடி பலகைகள் படம் அழகாக இருக்கிறது. உள்நாழி என்றால்..!

    பத்திரகாளியம்மன் சன்னதியும் அழகு. இக்கோவில் தகவல்கள் சிறப்பு. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உள்நாழி என்பது
      வெளிப்புறத்தில்
      கருவறையைச் சுற்றி அமைக்கப்பட்ட தொட்டி போன்ற அமைப்பு..

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      நன்றியம்மா

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      /உள்நாழி என்பது
      வெளிப்புறத்தில்
      கருவறையைச் சுற்றி அமைக்கப்பட்ட தொட்டி போன்ற அமைப்பு../

      நினைத்தேன். ஆயினும் விபரமாக தெரிந்து கொள்ளலாமே என கேட்டேன்.தாங்களும் பொறுமையாக உடனே பதில் தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. தங்களுக்கு என்று ஒரு பதிவே தயாராகி விட்டது...

      புன்னை நல்லூரில் படம் எடுத்ததும் வெளியிட வேண்டும்...

      மகிழ்ச்சி
      நன்றியம்மா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..