நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
திருக்கோடிக்கா
சோழ நாட்டில்
காவிரிக்கு வடகரைத் தலம்
இறைவன்
ஸ்ரீ கோடிகா நாதர்
அம்பிகை
ஸ்ரீ திரிபுர சுந்தரி
தல விருட்சம் - பிரம்பு
தீர்த்தம் - காவிரி.
கும்பகோணத்திலிருந்து காவிரி வடகரையில் மயிலாடுதுறைக்குச் செல்லும் சாலையில்
அமைந்துள்ள தலம்
திருக்கோடிக்கா..
ஞானசம்பந்தப் பெருமான்
அப்பர் ஸ்வாமிகள்
ஆகியோரால்
திருப்பதிகம் பெற்ற திருத்தலம்..
இத்திருத்தலத்தில்
ஸ்ரீ திரிபுரசுந்தரி
ஆகிய அம்பிகை
புரட்டாசி மாதத்தின்
இரண்டாம்
சனிக்கிழமையன்று
ஸ்ரீ வேங்கடேசப் பெருமாளாகத்
தரிசனம் தருகின்றாள்..
முன்பொரு சமயம்
துர்வாச மகரிஷி முதலானோர்
இத்தலத்தில் அவசர கதியில் வழிபாடுகளை நிறைவு செய்தபோது
ஏனென்று வினவினாள்
அம்பிகை..
புரட்டாசி மாதத்தின்
இரண்டாம் சனிக்கிழமை
ஆகிய அன்று திருமலையில் வேங்கடவன் தரிசனத்தை
விழையும் விவரத்தைக்
கூறியிருக்கின்றனர்
மகரிஷிகள்..
அதைக் கேட்ட அம்பிகை
" நான் கோவிந்த ஸ்வரூபிணி
என்பதை மறந்தீரோ!.. "
- என்று புன்னகைத்து
தானே - வேங்கடவனாக
திருக்காட்சி நல்கினாள்..
அந்த வைபவம் இன்றும் சிறப்பாக
நிகழ்கின்றது..
அந்தத் திருக்காட்சிகள்
இன்றைய பதிவில்..
வைபவத்தை
அழகிய படங்களாக
வலையேற்றிய
திரு. அகில் மற்றும்
அன்பர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி..
***
ஸ்ரீ கோடிகா நாதனின்
தரிசனத்தைத் தொடர்ந்து
அம்பிகையின்
அழகு தரிசனம்..
இன்றுநன்று நாளைநன்று
என்று நின்ற விச்சையால்
பொன்றுகின்ற வாழ்க்கையைப்
போகவிட்டுப் போதுமின்
மின்றயங்கு சோதியான்
வெண்மதி விரிபுனல்
கொன்றை துன்று சென்னியான்
கோடிகாவு சேர்மினே.. (2/99)
-: திருஞானசம்பந்தர் :-
வண்டாடு பூங்குழலாள் பாகன் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் கண்டாய்
பண்டாடு பழவினைநோய் தீர்ப்பான் கண்டாய்
பரலோக நெறிகாட்டும் பரமன் கண்டாய்
செண்டாடி அவுணர்புரஞ் செற்றான் கண்டாய்
திருவாரூர்த் திருமூலட் டானன் கண்டாய்
கொண்டாடும் அடியவர்தம் மனத்தான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே..(6/081)
-: திருநாவுக்கரசர் :-
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ
அம்பிகையே வேங்கடவனாக காட்சியளித்த அற்புதம். கோவிந்த ஸ்வரூபிணி... தரிசனம் கிடைக்கச் செய்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
ஆஹா! முற்றிலும் புதிய தகவல். இன்று வரை கேட்டதில்லை. கோவிந்த ஸ்வரூபிணியின் தரிசனமும் கிடைத்தது. நன்றி.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா..
நீக்குஅருமை...
பதிலளிநீக்குமகிழ்ச்சி.. நன்றி..
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. திரிபுரசுந்தரி அம்பிகையை கோவிந்தனாக காட்சி தந்தருளும் அழகிய தரிசனத்தை கண்டு கொண்டேன். சங்கர நாராயணனாக சிவபெருமான் சங்கர நயினார் கோவிலில் அருள்வது போல், தமையனின் வடிவில் அம்பாளும் காட்சி தரும் அழகிய தரிசனம் கற்பூர ஒளியில் இன்று கிடைத்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குஅம்பிகையின் தரிசனம் நன்று ஜி.
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
ஆஹா! அற்புதம்! கோவிந்த ஸ்வரூபிணியின் காண கிடைக்காத காட்சி உங்கள் தயவால் கிடைத்தது. நன்றி!
பதிலளிநீக்குகோயில் போய் இருக்கிறேன், ஆனால் இந்த தகவல் தெரியாது. அன்னை கோவிந்தனாக காட்சி அளிப்பது அருமை.
பதிலளிநீக்குதரிசனம் செய்து கொண்டேன்.
நன்றி.
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குஇதற்கு முன் சென்ற ஆண்டுகளில் கூட இந்நிகழ்வு பற்றிச் சொல்லியிருக்குன்றேன்.
வாழ்க வையகம்..
இது வரை கேள்விப்படாத தகவல் கோவிந்த ஸ்வரூபிணி துரை அண்ணா. அட என்று சொல்ல வைத்தது
பதிலளிநீக்குமிக்க நன்றி துரை அண்ணா
கீதா
அன்பின் சகோ.
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
திருக்கோடிகா சென்றிருக்கிறேன் ஆனால் கோவிந்த ஸ்வரூபிணி என்றதும் உடனே நினைவுக்கு வரவில்லை. பதிவு வாசித்ததும்தான் புரிந்தது எதனால் இப்பெயர் என்று.
பதிலளிநீக்குமிக்க நன்றி துரை சார்
துளசிதரன்
அன்பின் துளசிதரன்..
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..