நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், அக்டோபர் 27, 2015

சோறு தரும் சொர்க்கம்

இன்று பௌர்ணமி..

ஐப்பசி மாதத்தின் பௌர்ணமி..

சகல சிவாலயங்களிலும் - திருமூலஸ்தானத்தில்  விளங்கும் -
சிவலிங்கத் திருமேனிக்கு அன்னாபிஷேகம் நிகழும் நன்னாள்..

அன்னம் கொண்டு ஐயனை ஆராதித்து வணங்கும் திருநாள்..


சுத்தமான சோறு நல்லறிவின் வடிவம்..

சகல உயிர்களையும் படைத்தருளும் மூர்த்தியாகிய நான்முகப் பிரம்மனுக்கும் அவனது நாயகியாகிய நற்றமிழ்க் கலைவாணிக்கும்
அன்னமே வாகனம்..

அன்னம் என்ற சொல் -
நாம் உண்ணும் சோற்றையும் நீரில் இயங்கி நிலத்தில் வாழும் பறவையையும் குறிக்கும்..

இந்த அன்னப் பறவை பாலையும் நீரையும் பகுத்து உண்ணும் என்பது தொல்வழக்கு..

பால் - திரவ நிலை எனும் போது அதிலிருந்து நீரைப் பிரிப்பது எங்ஙனம்!..

பாலின் நிலைகளுள் உயர்ந்தது - நெய்!..

அதற்கு மேல் ஒன்றும் இல்லை..

அதன் உட்பொருள் - இருப்பதாக உணர்த்தி இல்லாத நிலையில் உயர்வடைவது!..

அந்த நிலையைக் குறிப்பால் உணர்த்துவது - அன்னம்!.. எனில் - சோறு!..

தமிழர் தம் வாழ்வின் எல்லா நிலைகளிலும் உடன் வருவது - அரிசி..

மங்கலகரமான அரிசி  இடம்பெறாத சடங்குகள் எதுவும் நம் வாழ்வில் கிடையாது..

வெளியுலகைக் காணும் முன்பே ஏழாம் மாதத்தில் -
கருவறையின் உள்ளிருக்கும் ஜீவனை வரவேற்கும் போது - அரிசி..

வையகத்திற்கு வந்து - வாழ்ந்த ஜீவன் விடைபெற்றுக் கொண்ட பின்,
சரீரத்தை வழியனுப்பும் போதும் - அரிசி!..

பல நிலைகளில் பக்குவமாகி நம்முடன் பயணிக்கும் அரிசி -
பக்குவத்தையே நமக்கு உணர்த்துகின்றது..

அரிசியின் பக்குவ நிலைகளில் உயர்ந்தது - சோறு!..

சோறு கண்ட இடம் சொர்க்கம்!.. - என்பர் தமிழில்..

அது சோம்பேறிகளுக்கு சொல்லப்பட்ட வார்த்தை அல்ல...

எவராயின் எத்தன்மையராயினும் -
அவர்தம் - பசித்த வயிற்றுக்கு உணவுதான் முதற்தெய்வம்.

உணவு என்பனவற்றுள்ளும் - முந்தியிருக்கும் பெருமையுடையது சோறு தான்...

அந்தச் சோறு சிவலிங்க வடிவமானது..
ஆம்.. சோற்றின் வடிவம் - சிவலிங்கம்!..

ஏர் முனையைப் போல் கூராயிருப்பன -  நெல்லும் அரிசியும்..

பலநிலைகளில் பக்குவமான பின் - உயிர்க்குலத்தின் உடன் பிறந்த பிணியாகிய  பசியை நீக்கும் போது அரிசி - சோறு எனும் தெய்வ நிலையை அடைகின்றது..


சோறு கொண்டு ஐயனை அபிஷேகிக்கும் போது -
உண்ணும் பொருட்கள் பலவற்றாலும் அலங்காரம் செய்வது வழக்கம்..

அந்தப் பெருமை அனைத்தும் - உணவுப்பொருட்களை உண்டாக்கித் தந்த
உழவர் பெருமக்களையே சேரும்..

அன்னத்தின் பெருமையையும்
அன்னாபிஷேகத்தின் சிறப்பையும்
உள்ளுணர்ந்து சிவவழிபாடு செய்வோம்..

இன்றைய பதிவினில் நேற்றைய தினம் -
திருமறைக்காடு எனும் வேதாரண்யத்தில் காலையில் நிகழ்ந்த திருக்குட முழுக்கு வைபவத்தையும் மாலையில் பஞ்சமூர்த்தி எழுந்தருளிய திருவுலாக் காட்சிகளையும் காணலாம்..

Facebook - ல் வழங்கிய திரு. வேங்கட சுப்ரமணியம் அவர்களுக்கும்
திரு. வசந்த குமார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி..

அன்னாபிஷேகம் பற்றிய முந்தைய பதிவை - இந்த இணைப்பில் காணுக..














தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய்
காண்டற்கரிய கடவுள் கண்டாய்
கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
மெய்ந்நெறி கண்டாய் விரதம் எல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே!.. (6/23)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.. 
* * *

18 கருத்துகள்:

  1. அன்னத்தின் சிறப்பினையும்
    அன்னஅபிடேகத்தின் பெருமையினையும் உணர்ந்தேன் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. படிப்படியாக விளக்கிய விதம் மிகவும் அருமை ஐயா...

    நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அன்பின் ஜி வழக்கம் போலவே விடயங்கள் படங்கள் அனைத்தும் சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. மிக அருமை! படங்களும் சிறப்பு ஐயா!
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அருமையான படங்களும் சிறப்பான அன்னாபிஷேக விளக்கமும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. ஆஹா நடக்கட்டும் நடக்கட்டும்,,,,, விடுமுறையும் பதிவிற்கு இல்லை,,,,,
    சோற்றின் மகிமையை இறையுடன் சேர்த்து அருமையாக சொல்லியுள்ளீர்,
    அழகிய படங்கள், அருமையான தொகுப்பு வாழ்த்துக்கள். தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      எழுத்துக்கு ஏதுங்க - விடுமுறை!...
      தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  7. அருமையான பகிர்வு. பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. எங்கள் பகுதியிலும் [தில்லி] சில வருடங்கள் முன்பு அன்னாபிஷேகத்தில் கலந்து கொண்டிருக்கிறேன். சிறப்பாக இருக்கும். அதுவும் நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் மேலதிக தகவலும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. பசித்திருப்பவன் முன் சோற்றின் வடிவில்தான் வரத் துணிவாராம் கடவுள். ஆண்டவனுக்குச் செய்யும் அன்னாபிஷேகம் பசிதிருப்பவன் வயிற்றில் முடிந்தால் மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      அன்னாபிஷேகத்தின் நோக்கம் அதுவே..
      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..