நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூலை 03, 2026

தமிழமுது

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
ஆனி
 வெள்ளிக்கிழமை


இன்று
திருநாவுக்கரசர் தேவாரம்

தீர்த்தனைச் சிவனைச் சிவ லோகனை
மூர்த்தியை முத
  லாய ஒருவனைப்
பார்த்த னுக்கு அருள்
  செய்த சிற்றம்பலக்
கூத்தனைக் கொடி
  யேன் மறந்து உய்வனோ.. 5/2/2

பாசங்களின் நீங்கி நின்று தன்னை அடைந்தார்க்கு அவற்றை நீக்கியருளும் தூயவனை  சிவபெருமானை சிவலோகனை ஞான உருவினனை  உலகத் தோற்றத்திற்கு முன்
மூலமாய் நின்றவனை  பார்த்தனுக்கு வேடனாய்த் தோன்றி பாசுபதம் ஈந்து அருள் செய்த சிற்றம்பலக் கூத்தனைக் கொடியேனாகிய நான் மறந்து உய்வடைவேனோ ? ..

 நன்றி
பன்னிரு திருமுறை

ஓம் நம சிவாய
***

6 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    நலமா? பதிவு அருமை. இன்றைய பதிவில் திருநாவுக்கரசர் அருளிய தேவாரப்பாடலை பாடி, பொருளை உணர்ந்து கொண்டேன். இறைவனை தொழுது வழிபட்டும் கொண்டேன். இறைவன் அனைவருக்கும் நல்லதையே நடத்தித் தர வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொண்டேன் 🙏 பகிர்வுக்கு மிக்க நன்றி.ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய 🙏.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றியம்மா

      நீக்கு
  2. "தீர்த்தனை சிவனை சிவலோகனை....." கரம் கூப்பி வணங்குவோம்.

    ஓம் சிவாய நமக.

    பதிலளிநீக்கு
  3. ஓம் நமச் சிவாய.... நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..