நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜனவரி 25, 2024

தைப்பூசம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை  11
வியாழக்கிழமை
தைப்பூச நன்னாள்


 வள்ளல் பெருமான் அருளிச்செய்த  கந்தன் சரணப் பத்து..
( சில கண்ணிகள்)
நன்றி 
திரு அருட்பா


அருளார் அமுதே சரணம் சரணம்
அழகா அமலா சரணம் சரணம்
பொருளா எனைஆள் புனிதா சரணம்
பொன்னே மணியே சரணம் சரணம்
மருள்வார்க் கரியாய் சரணம் சரணம்
மயில்வா கனனே சரணம் சரணம்
கருணா லயனே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம் 1

பண்ணேர் மறையின் பயனே சரணம்
பதியே பரமே சரணம் சரணம்
விண்ணேர் ஒளியே வெளியே சரணம்
வெளியின் விளைவே சரணம் சரணம்
உண்ணேர் உயிரே உணர்வே சரணம்
உருவே அருவே உறவே சரணம்
கண்ணே மணியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம் 2

முடியா முதலே சரணம் சரணம்
முருகா குமரா சரணம் சரணம்
வடிவேல் அரசே சரணம் சரணம்
மயிலூர் மணியே சரணம் சரணம்
அடியார்க் கெளியாய் சரணம் சரணம்
அரியாய் பெரியாய் சரணம் சரணம்
கடியாக் கதியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்..  3

பூவே மணமே சரணம் சரணம்
பொருளே அருளே சரணம் சரணம்
கோவே குகனே சரணம் சரணம்
குருவே திருவே சரணம் சரணம்
தேவே தெளிவே சரணம் சரணம்
சிவசண் முகனே சரணம் சரணம்
காவேர் தருவே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.. 4

 நடவும் தனிமா மயிலோய் சரணம்
நல்லார் புகழும் வல்லோய் சரணம்
திடமும் திருவும் தருவோய் சரணம்
தேவர்க் கரியாய் சரணம் சரணம்
தடவண் புயனே சரணம் சரணம்
தனிமா முதலே சரணம் சரணம்
கடவுள் மணியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம் 
.. 5
**

வெற்றிவேல் போற்றி
வீரவேல் போற்றி..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

6 கருத்துகள்:

  1. முருகா சரணம்...  கந்தா சரணம்....  சரவணபவகுகா சரணம்...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. அழகன் முருகனின் படங்கள் அழகு.

    வள்ளலார் பெருமான் அருளிச்செய்த கந்தன் சரணப் பத்தை படித்து கந்தபெருமானை வணங்கி கொண்டேன்.

    கந்தா சரணம். கடம்பா சரணம். கார்த்திகை பாலா சரணம். கதிர் வேலா சரணம். 🙏.

    நல்லதொரு பக்திப் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. தைப்பூசம்… இந்த சிறப்பான நாளில் நல்லதே நடக்கட்டும். இன்றைக்கு கொள்ளிடக் கரையில் இருக்கும் முருகன் கோவிலில் சிறப்பு கொண்டாட்டங்கள் உண்டு. மதியம் இரண்டு மணிக்கு காவடி… சென்று பார்க்க நினைத்திருக்கிறேன். அது மட்டுமன்றி சமயபுரம் மாரியம்மன் இன்று திருவரங்கம் வரும் நாள் - மாலையில் கொள்ளிடக் கரைக்கு வருவார்….

    பதிலளிநீக்கு
  4. தைப்பூச நன்னாளில் முருகன் பகிர்வு அருமை.
    படித்து வணங்கினோம்.

    பழநி, திருச்செந்தூர் விரதம் இருந்து வழிபடும் பக்தர்கள் கூட்டங்களையும் இவ்வேளை நினைத்துக் கொண்டோம்.

    முருகா சரணம். கார்த்திகேயா சரணம்.

    பதிலளிநீக்கு
  5. தைப்பூச பகிர்வு அருமை. வள்ளல் பெருமான் அருளிய பாடலை பாடி முருகனை வணங்கி கொண்டேன். இன்று தொலைக்காட்சியில் வடலூர் தைப்பூச திருவிழா பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  6. முருகனின் தரிசனம் கிடைத்தது நன்றி ஜி

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..