நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜனவரி 22, 2024

தேவாரத்தில்..

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை மாதம்
எட்டாம் நாள்
திங்கட்கிழமை


ஸ்ரீராம வருக
ஜெயராம வருக


திரு இராமேச்சுரம்
ஸ்ரீ ராமேஸ்வரம்

இறைவன்
ஸ்ரீ ராமநாதர்
அம்பிகை
ஸ்ரீ பர்வதவர்த்தனி

தீர்த்தம்
அக்னி தீர்த்தம்
தலவிருட்சம்
கொன்றை
 
திருஞானசம்பந்தர் 
அருளிச்செய்த
மூன்றாம் திருமுறை
திருப்பதிக எண் 10


அலைவளர் தண்மதி யோடு அயலே அடக்கிஉமை
முலைவளர் பாகமுயங்க வல்ல முதல்வன் முனி
இலைவளர் தாழைகள் விம்மு கானல் இராமேச்சுரம்
தலைவளர் கோலநன் மாலையன் தான் இருந்தாட்சியே.. 1

தேவியை வவ்விய தென்னிலங்கைத் தச மா முகன்
பூவியலும் முடி பொன்று வித்த பழி போயற
ஏவியலுஞ்சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம்
மேவிய சிந்தையினார்கள் தம் மேல்வினை வீடுமே.. 2

மானன நோக்கியை தேவிதன் னையொரு மாயையால்
கானதில் வவ்விய காரரக்கன் உயிர் செற்றவன்
ஈனமிலாப் புகழ் அண்ணல் செய்த இராமேச்சுரம்
ஞானமும் நன்பொருள்  ஆகிநின்றதொரு நன்மையே.. 3

பகலவன் மீது இயங் காமைக்காத்த பதியோன் தனை
இகலழிவித்தவன் ஏத்து கோயில் இராமேச்சுரம்
புகலியுள் ஞானசம் பந்தன்சொன்ன தமிழ் புந்தியால்
அகலிடம் எங்குநின்று ஏத்தவல் லார்க்கில்லை அல்லலே.. 3/10/11
**


திருநாவுக்கரசர் 
அருளிச்செய்த
நான்காம் திருமுறை
திருப்பதிக எண் 61


முற்றின நாள்கள் என்று முடிப்பதே காரணமாய்
உற்றவன் போர்களாலே உணர்விலா அரக்கர் தம்மைச்
செற்ற மால் செய்த கோயில் திருஇராமேச்சுரத்தைப்
பற்றிநீ பரவு நெஞ்சே படர்சடை ஈசன் பாலே.. 2

கடலிடை மலைகள் தம்மால் அடைத்து மால் கருமம்  முற்றித்
திடலிடைச் செய்த கோயில் திருஇராமேச்சுரத்தைத்
தொடலிடை வைத்து நாவிற் சுழல்கின்றேன் தூய்மை யின்றி
உடலிடை நின்றும் பேரா ஐவர் ஆட்டுண்டு நானே.. 3

குன்றுபோல் தோள் உடைய குணமிலா அரக்கர் தம்மைக்
கொன்று போர் ஆழி அம் மால் வேட்கையாற் செய்த கோயில்
நன்றுபோல் நெஞ்சமே நீ நன்மையை அறிதி யாயில்
சென்றுநீ தொழுதுய் கண்டாய் திருஇராமேச்சுரம்மே.. 4

கோடிமா தவங்கள் செய்து குன்றினார் தம்மை எல்லாம்
வீடவே சக்கரத்தால் எறிந்துபின் அன்பு கொண்டு
தேடி மால் செய்த கோயில் திருஇராமேச்சுரத்தை
நாடிவாழ் நெஞ்சமே நீ நன்னெறி ஆகுமன்றே.. 4/61/9

வரைகளொத்தே உயர்ந்த மணிமுடியரக்கர் கோனை
விரையமுற்றற ஒடுக்கி மீண்டுமால் செய்த கோயில்
திரைகள்முத்தால் வணங்குந் திரு இராமேச்சுரத்தை
உரைகள் பத்தாலுரைப்பார் உள்குவார் அன்பினாலே..
4/61/11
**
தொகுப்பில் துணை
பன்னிரு திருமுறை
தருமபுர ஆதீனம்
** 

ஸ்ரீ ராம ஜெய ராம
ஸ்ரீ ராம ஜெய ராம..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

3 கருத்துகள்:

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..