நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜனவரி 31, 2024

உயிரே உணவே 2

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 17
புதன் கிழமை

முந்தைய பதிவு

பகுதி 2
சுத்தம் சுகாதாரம்


இன்று நவீன விவசாயத்தில் இரசாயன உரங்கள் கொண்டு காய்கள் பலவும் விளைவிக்கப்பட்டு விற்பனைக்கு வருவதால் கல் உப்பு கரைக்கப்பட்ட நீரில் காய்களை நன்கு கழுவி எடுத்த பின்னர் தான் பயன்படுத்த வேண்டும்..

சமையல் அறையை இயன்றவரை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.. 

எலி மற்றும் பூச்சிகளின் தொல்லை இல்லாதிருக்க வேண்டும்.. 

சமையல் அறை இயற்கை வெளிச்சம் நிறைந்ததாகவும் காற்றோட்டமாகவும் இருத்தல் அவசியம்..

சமையல் பாத்திரங்களின் சுத்தத்தைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை.. 


இருப்பினும் -
பாத்திரங்கள் கழுவுவதற்கு என - சந்தைப்படுத்தப்படும் இரசாயனங்கள் ஆபத்தானவை.. கலவைகளில் (Dish washing liquids) மிகுந்த கவனம் தேவை..


துரு படிந்த கத்திகள், செம்பு, அலுமினியப் பாத்திரங்களை ஒதுக்கி விடவும்..

மண்பாண்டச் சமையல் நல்லது என்றாலும் இன்றைய சூழலில் அவரவர் விருப்பம்..

சிறு தானியங்களை  கவனத்துடன் சுத்தம் செய்ய வேண்டும்..

கீரை வகைகளை
மிகவும் கவனத்துடன் சுத்தம் செய்வது நல்லது.. 

கீரை வகைகளில் வேறு வித சிறு செடிகளும் கலந்திருக்கக் கூடும்.. எனவே மிகவும் கவனத்துடன் சுத்தம் செய்ய வேண்டும்.. தவிர - சிறு சிறு பூச்சி புழுக்களும் கீரைகளில் இருக்கக் கூடும்..

வாழைப் பூவில் (கண்ணாடி) இழை  நரம்பு, வாழைத் தண்டில் நார், இஞ்சியின் தோல் இவற்றை நீக்குவதில் கவனம் தேவை..

காய்களைக் கழுவுவதற்கு சுத்தமான தண்ணீரைத் தான் பயன்படுத்த வேண்டும்..

தானியங்களையும் கவனமுடன் சுத்தம் செய்து நல்ல தண்ணீரில் தான் கழுவி எடுக்க வேண்டும்..

மிளகாய் மல்லி பருப்பு வகைகளை  மொத்தமாக வாங்கி சுத்தம் செய்து வீட்டில் சேமித்துக் கொள்வது நல்ல பழக்கம்..

இவற்றை கவனமுடன் சுத்தம் செய்து காற்று புகாத உலர்ந்த பாத்திரங்களில் சேமித்துக் கொள்ளவது நலம்..

வீட்டில் நெல்லை அவித்து அரிசியாக அரைத்தெடுக்கும் வழக்கம் முற்றாகவே தொலைந்து போயிற்று.. 

இந்நிலையில்
வீட்டு அரிசி எனில் இரண்டு முறை கழுவி எடுத்தால் போதும்.. வெளியிடத்து அரிசி என்றால் அதிக கவனம் தேவை..

இயன்றவரை -
நெய் எண்ணெய் இவற்றில் வெளி தயாரிப்புகளை விட்டு நீங்கினாலே வீட்டில் ஆரோக்கியம் நிலவும்..

அருகில் உள்ள கிராமங்களைத் தொடர்பு கொண்டு இயன்றவரை எள்,  கடலை இவற்றை நாமே முன்னின்று வாங்கி செக்கில் ஆட்டி எண்ணெய் எடுத்துக் கொன்வதே சாலச் சிறந்தது..

இன்றைய உணவு வர்த்தகத்தில் எவர் மீதும் எதற்காகவும் நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதே நம்முடைய கலாச்சாரத்தையும்  உடல் நலனையும் மீட்டெடுப்பதற்கான ஒரே வழி..

மேலும் குறிப்புகள்
அவ்வப்போது
வெளிவர இருக்கின்றன..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்..

நாளும் வாழ்க
நன்றென வளர்க..
***

8 கருத்துகள்:

  1. காற்றோட்டமான சமையலறை...  இந்த அபார்ட்மெண்ட் யுகத்தில் சற்று சிரமம்தான்!  நல்லவை இவை என்று தெரிந்தாலும் பெரும்பாலும் பின்பற்றுவதில்லை.  அவசர யுகம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிற்சில பிரச்னைகள் இருக்கலாம்.. ஆனாலும் நல்லது தானே..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. உணவும் , சுத்தமும் நல்ல தகவல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. நல்ல செய்திகளுடன் நல்ல பகிர்வு. சுத்தம் சோறு போடும் என்பது முன்னோர்கள் சொன்ன பழமொழி. அது போல் சமையலறை சுத்தமாக இருந்தால் உணவுகளும் ருசியாக நம் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காமல் இருக்கும். படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// சமையலறை சுத்தமாக இருந்தால் உணவுகளும் ருசியாக நம் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காமல் இருக்கும். ///

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  4. சுத்தம் , சுகாதாரம் கட்டுரை அருமை.
    நல்ல குறிப்புகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
      நலம் வாழ்க..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..