நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜனவரி 17, 2024

காணும் பொங்கல்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை மாதத்தின்
மூன்றாம் நாள் 
புதன் கிழமை




கிராமங்களில் 
கோலம் கும்மி கோலாட்டம் என -
காணும் பொங்கல் தனிச் சிறப்புடன் 
நிகழ்வது வழக்கம்..

நமது தளத்திலும்
கிளித்தோப்பு எனும் இலுப்பைத் தோப்பில்
குமரிப் பெண்களின் கோலாகலக் கும்மி 
கேட்கின்றது..


தந்தான தன தந்தான தன 
தந்தான தன தந்தானா...

காவேரிக் கரை கழனி ஓரமா
காத்து இருக்கிறான் செல்லக் கண்ணு..

காத்து இருக்குற வேளையில இந்த 
சேதியச் சொன்னவன் செல்லக் கண்ணு..

காத்தோட காத்தா சொல்லுறதுன்னு 
காதுல சொன்னவன் செல்லக் கண்ணு..

காத்தோட காத்தா சொல்லுறதுன்னு 
காதல சொன்னவன் செல்லக் கண்ணு..

அது என்னா ன்னு தான்
சொல்லுங்களேன்!..

காலுக்குக் கொலுசு தாறாங்களாம்..
கைக்கு வளயல் தர்றாங்களாம்....

கண்ணுக்கு மையி தர்றாங்களாம்..
காதுக்குத் தொங்கல் தர்றாங்களாம்..

நெறஞ்ச மஞ்சளும் குங்குமத்தோட 
நெத்திக்கு சுட்டி தர்றாங்களாம்..

கட்டிக்கக் கூறை தர்றாங்களாம்..
கஞ்சிக்கு அரிசி தர்றாங்களாம்..

கார்த்திகச் சம்பா குதிரு நெறச்சு
காலம் பூரா தர்றாங்களாம்...

தந்தனத் தானா தானா.. ன்னு 
வீட்டுக்கு வெளக்கு ஏத்தணுமாம்...

வெத்தல பாக்கு மடிச்சுக் கொடுத்து
வெவரம் கொஞ்சம் பேசணுமாம்.. 

தந்தான தன தந்தான தன 
தந்தான தன தந்தானா...

கூடிக் களிக்கிற கூடத்துல ஒரு 
தொட்டிலும் இறுக்கிக் கட்டணுமாம்..

தூங்குற புள்ளக்கி தாலாட்டு..
அத நானே பாடி வைக்கணுமாம்..

என்ன ன்னு சொல்லுவேன் 
ஏது ன்னு சொல்லுவேன்..

எங்க அப்பனுக்குக் கூட தெரியாதே..
எங்க அண்ணேன் காதுல சொல்லிடணும்..  

ஏரிக்கரைப் புள்ள எழுந்து வாங்க
சின்னக்கிளி நெஞ்சு தவிக்கிது..

எழுந்து இங்கே வாற போது  தம்பியத் 
துணைக்குக் கூட்டி  வாங்க..

இங்க ரெண்டு கிளி காத்துக் கிடக்கு.
எல்லாம் நல்லதா நடக்கட்டும்..

தையில பேச்சு தகஞ்சதுன்னா 
மாசியில் மேளம் முழங்கட்டும்..

தந்தான தன தந்தான தன 
தந்தான தன தந்தானா..
**

காணும் பொங்கலுடன்
கனவுகளும் நிறைவேறட்டும்..

 நல்வாழ்த்துகளுடன்
வாழ்க நலம்..
**

ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

4 கருத்துகள்:

  1. மாசியில் மேளம் முழங்கட்டும்...  அல்லது பங்குனியில் கூட முழங்கட்டும்...  தந்தான தன தந்தான தன...  அருமை.  ரசித்தேன்.  காணும் பொங்கல் தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இளம் பெண்களின் சந்தோஷ கும்மி படங்கள், அழகான பாடல் வரிகள் அனைத்தும் மிக அருமை.

    /தையில பேச்சு தகஞ்சதுன்னா மாசியிலே மேளம் முழங்கட்டும்./

    அழகான வரிகள். நல்லதே நடக்கட்டும். நன்மை யாவும் கிடைக்கட்டும். இளம் பெண்களின் கனவுகளும் நனவுகளாக பலிக்கட்டும். வாழ்க வளமுடன்.

    காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன் .

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் காணும் பொங்கல் வாழ்த்துகள்.

    அழகிய படங்கள் மகிழ்ச்சி தருகின்றன.

    அனைவர் வாழ்வும் வளம் பெறட்டும்.

    பதிலளிநீக்கு
  4. காணும் பொங்கல் பதிவும் படங்களும் அருமை.
    கவிதை நன்றாக இருக்கிறது. தைபிறந்தால் வழி பிறக்கும் என்று சொன்னது மெய்தான்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..