நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜனவரி 13, 2024

தமிழமுதம் 28

 


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 28 
சனிக்கிழமை

 குறளமுதம்

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் 
செல்வர்க்கே செல்வம் தகைத்து.. 125
**

ஸ்ரீ கோதை நாச்சியார்
அருளிச் செய்த
திருப்பாவை


கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்  அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து  உன்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம் குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது  அறியாத பிள்ளைகளோம் அன்பினால்  உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.. 28
**


பசுக்களைக் காட்டில் மேய்த்து, அங்கு ஒன்று கூடி உண்டு மகிழ்வதைத் தவிர்த்து, வேறு எதுவும் தெரியாத நாங்கள்,   உன்னை எங்கள் குலத்தவனாகப் பெற்ற பெரும் புண்ணியத்தை உடையவர்களாகின்றோம்.. 


யாதொரு குறைவும் இல்லாத கோவிந்தனே..  உன்னுடன் எங்களுக்கு ஏற்பட்ட உறவு யாராலும் அழிக்க முடியாதது. 

அற்ப அறிவுடைய சிறுமியரான நாங்கள், உன்னிடம் கொண்டுள்ள  அன்பினால் உன்னை சிறு பெயர்களால் கூவி அழைத்தமைக்கு கோபித்துக் கொள்ளாமல், நாங்கள் வேண்டி நிற்கும் பொருள்களைத் தந்து அருள்வாயாக..
**

சிவதரிசனம்
தேவாரம்
திருப்பாட்டு


தளிசாலைகள் தவமாவது
தம்மைப்பெறில் அன்றே
குளியீர் உளங் குருக்கேத்திரங்
கோதாவிரி குமரி
தெளியீர்உளஞ் சீபர்ப்பதம்
தெற்குவடக் காகக்
கிளிவாழைஒண் கனிகீறியுண்
கேதாரம் எனீரே.. 6

நாவின்மிசை அரையன்னொடு
தமிழ்ஞானசம் பந்தன்
யாவர்சிவ னடியார்களுக்கு
அடியானடித் தொண்டன்
தேவன்திருக் கேதாரத்தை
ஊரன் உரை செய்த
பாவின்தமிழ் வல்லார்பர
லோகத்திருப் பாரே.. 7/78/10
-: சுந்தரர் :-
**

தரிசனத்
திருத்தாண்டகம்
(திருமறைக்காடு - வேதாரண்யம்)


வேலைசேர் நஞ்சம் மிடற்றான் கண்டாய்
விண்தடவு பூங்கயிலை வெற்பன் கண்டாய்
ஆலைசேர் வேள்வி யழித்தான் கண்டாய்
அமரர்கள் தாமேத்தும் அண்ணல் கண்டாய்
பால்நெய்சேர் ஆனஞ்சும் ஆடி கண்டாய்
பருப்பதத்தான் கண்டாய் பரவை மேனி
மாலையோர் கூறுடைய மைந்தன் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.. 7

அம்மை பயக்கும் அமிர்து கண்டாய்
அந்தேன் தெளிகண்டாய் ஆக்கஞ் செய்திட்
டிம்மை பயக்கும் இறைவன் கண்டாய்
என்னெஞ்சே யுன்னில் இனியான் கண்டாய்
மெய்ம்மையே ஞான விளக்குக் கண்டாய்
வெண்காடன் கண்டாய் வினைகள் போக
மம்ம ரறுக்கும் மருந்து கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே..8
-: திருநாவுக்கரசர் :-
**

திருவாசகம்
அருட்பத்து


மெய்யனே விகிர்தா மேருவே வில்லா
மேவலர் புரங்கள்மூன் றெரித்த
கையனே காலாற் காலனைக் காய்ந்த
கடுந்தழற் பிழம்பன்ன மேனிச்
செய்யனே செல்வத் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
ஐயனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே..7

முத்தனே முதல்வா முக்கணா முனிவா
மொட்டறா மலர்பறித் திறைஞ்சிப்
பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப்
பரகதி கொடுத்தருள் செய்யும்
சித்தனே செல்வத் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே.. 8
-: மாணிக்கவாசகர் :-
**

தொகுப்பிற்குத் துணை

நாலாயிர திவ்யப்ரபந்தம்
பன்னிரு திருமுறை,
தருமபுரம் ஆதீனம்..
**

ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

4 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    நல்லதொரு பதிவு. திருப்பாவை, தேவார, திருவெம்பாவை பாசுரங்களுடன் படங்கள் அனைத்தும் அருமை.

    "குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தனே... எங்களுக்கும் உன்னருளால் குறை ஒன்றும் இல்லை. யாவரும் நலமாக வாழ அருள் புரிவாயாக!!" என பிரார்த்தனை செய்து கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. திருப்பாவை கண்டோம்.

    நாராயணா போற்றி.

    சிவாய நம ஓம்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல தேர்வு பன்னிரு திருமுறை பாடல்கள். திருக்கேதாரம் படம் அருமை. பாடல்களை பாடி தரிசனம் செய்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..