நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜனவரி 02, 2024

தமிழமுதம் 17

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 17
செவ்வாய்க்கிழமை

 குறளமுதம்

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.. 102
**

ஸ்ரீ கோதை நாச்சியார்
அருளிச் செய்த
திருப்பாவை


அம்பரமே தண்ணீரே சோறே அறஞ் செய்யும்  எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே  எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த  உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய் 
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா  உம்பியும் நீயும் உகந்தேலோர் எம்பாவாய்.. 17
**

உடுத்திக் கொள்ளத் துணியுடன்  தண்ணீரும் சோறும்  தானமாக அளிக்கும் எம்பெருமான் நந்தகோபாலரே எழுந்திடுவீர்.. 

தழைக்கின்ற  பெண்களுக்கு எல்லாம் கொழுந்து போன்றவளே..
எங்கள் குலவிளக்கே எம்பெருமாட்டி யசோதையே எழுந்திடுவாய்.. 

வானத்தை ஊடறுத்து ஓங்கி உலகங்கள் எல்லாவற்றையும் அளந்தவனே.. தேவர்களின் தலைவனே எழுந்திடுவாய்..

செம்பொற்கழலை அணிந்திருக்கும் செல்வனே பலதேவா.. 

உன் தம்பியும் நீயும் விழித்து எழுவீர்களாக!..
** 

திருப்பாசுரம்


அடிமூன்றில் இவ்வுலகம்  அன்று அளந்தாய் போலும்
அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் படிநின்ற
நீரோத மேனி நெடுமாலே  நின்னடியை
யார் ஓத வல்லார் அறிந்து?.. 2186
-: பூதத்தாழ்வார் :-
**

சிவதரிசனம்
தேவாரம்
திருக்கடைக்காப்பு


செம்பொ னார்தரு வேங்கையும் ஞாழலுஞ் செருந்தி செண்பகம் ஆனைக்
கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை குருந்தலர் பரந்துந்தி
அம்பொன் நேர்வரு காவிரி வடகரை மாந்துறை உறைகின்ற
எம்பிரான் இமையோர்தொழு பைங்கழல் ஏத்துதல் செய்வோமே.. 2/110/1
-: திருஞானசம்பந்தர் :-
**

போற்றித்
திருத்தாண்டகம்
(திரு ஆரூர்)


சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி
பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி
புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி
அங்கமலத் தயனோடு மாலுங் காணா
அனலுருவா நின்பாதம் போற்றி போற்றி
செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.. 6
-: திருநாவுக்கரசர் :-
**

திருவாசகம்
 

அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்டு
அளவிலா ஆனந்தம் அருளிப்
பிறவிவே ரறுத்தென் குடிமுழு தாண்ட
பிஞ்ஞகா பெரியஎம் பொருளே
திறவிலே கண்ட காட்சியே அடியேன்
செல்வமே சிவபெரு மானே
இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.. 6
-: மாணிக்கவாசகர் :-
**

தொகுப்பிற்குத் துணை

நாலாயிர திவ்யப்ரபந்தம்
பன்னிரு திருமுறை,
தருமபுரம் ஆதீனம்..
**

ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

6 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அன்பின் வருகையும் வாழ்த்தும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம் ..

      நீக்கு
  2. படங்கள் தேர்வு அருமை. பாடல்களை பாடி இறைவனை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் வாழ்த்தும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  3. தமிழமுதம் படங்கள் அருமை

    துரை அண்ணா, இன்றைய பூதத்தாழ்வாரின் பாசுரம், அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி - திருப்பாவை நாள் அன்று வந்திருக்கலாமோ!?

    கீதா

    பதிலளிநீக்கு
  4. திருப்பாசுரம்..

    இது வேறொரு வரிசை.. முன்பே தொகுத்து வைத்தது..

    தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
    நன்றி சகோ..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..