நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜனவரி 20, 2024

கிருத்திகை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை  6
சனிக்கிழமை

இன்று 
தை கிருத்திகை..


ஸ்ரீ அருணகிரிநாதர் அருளிச்செய்த
கந்தர் அலங்காரத்தின் சில பாடல்கள்..


பேற்றைத் தவம் சற்று மில்லாத என்னை ப்ரபஞ்சம் என்னும்
சேற்றைக் கழிய வழிவிட்டவா செஞ்சடா அடவிமேல்
ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே.. 1


தாவடி யோட்டு மயிலிலுந் தேவர் தலையிலும் என்
பாவடி ஏட்டிலும் பட்டதன்றோ படி மாவலிபால்
மூவடி கேட்டன்று மூதண்ட கூட முகடுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமான் மருகன் தன் சிற்றடியே.. 15


மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதாரையும் அங்கு வாழவைப்போன் வெய்ய வாரணம்போல்
கைதான் இருபதுடையான் தலைப் பத்தும் கத்தரிக்க
எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே.. 22


பால் என்பதுமொழி பஞ்சென்பது பதம் பாவையற்கண்
சேல் என்பதாகத் திரிகின்ற நீசெந்திலோன் திருக்கை
வேல் என்கிலை கொற்ற மயூரம் என்கிலை வெட்சித் தண்டைக் 
கால் என்கிலை மனமே எங்ஙனே முத்தி காண்பதுவே... 30


நாளென் செயும்வினை தான் என் செயும் எனை நாடிவந்த
கோள் என் செயும் கொடுங் கூற்று என் செயும் குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளுங் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.. 38


சேல் பட்டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால் பட்டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல் பட்டழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
கால் பட்டழிந்தது இங்கு என்தலை மேலயன் கையெழுத்தே.. 40
**
வெற்றி வேல் போற்றி
வீரவேல் போற்றி..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

14 கருத்துகள்:

  1. உடல் நலக் குறைவு.. கடுமையான சளி,இருமல்..

    இருந்தும்
    பதிவுகள் தொடர்கின்றன..

    நன்றி
    வணக்கம்

    பதிலளிநீக்கு
  2. முருகா வடிவேலா அனைவரையும் காத்தருள்வாய்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பினுக்கு நெஞ்சார்ந்த நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. நலம் பெற வேண்டுகிறேன் ஜி

    ஓம் நம சிவாய வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  4. உடல் நலம் இல்லாத போதும் பகிர்வுகளா தரும் உங்களுக்கு நன்றி.

    அழகன் முருகன் படங்கள் பாமாலை சிறப்பு.

    வேல் முருகன் உங்கள் நலனைக் காக்கட்டும். விரைவில் நலமடைய வேண்டுகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பினுக்கு நெஞ்சார்ந்த நன்றி மாதேவி..

      நீக்கு
  5. இறைவன் அருளால்விரைவில் நலமடைய வாழ்த்துகள்,
    வாழ்க வளமுடன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின்
      வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு
  6. கந்தர் அலங்கார பாடல்களை பாடி முருகனை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  7. பதிவு நன்று. உடல் நலம் கவனிக்கவும். உடல் நலம் பதிவுகளை விட முக்கியம். கவனமாக இருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பினுக்கு நெஞ்சார்ந்த நன்றி வெங்கட்..

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்களின் வாயிலாக அழகான முருகனை தரிசனம் செய்து கொண்டேன். கந்தர் அலங்கார பாடல்கள் அனைத்தும் அருமை. பாடல்களை பக்தியோடு பாடி மகிழ்ந்தேன்.

    தங்கள் உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள். விரைவில் தங்களின் சளி இருமல் தீர்ந்து எப்போதும் போல், தாங்கள் நலமடைய முருகனை வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..