நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜனவரி 06, 2024

தமிழமுதம் 21

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 21
சனிக்கிழமை

 குறளமுதம்

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.. 106
**

ஸ்ரீ கோதை நாச்சியார்
அருளிச் செய்த
திருப்பாவை


ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய் ஊற்றம் உடையாய் பெரியாய்  உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய் மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடிபணியுமா போலே  போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து ஏலோர் எம்பாவாய்.. 21
**

 குடங்கள் நிறைந்து வழியும்படி பால் சுரக்கின்ற  பசுக்களை உடைய  நந்தகோபனின் திருமகனே!.. எழுந்தருள்வாயாக.. 

பக்தர்களைக் காத்தருள்பவனே.. அனைவராலும் அறியப்பட்டிருக்கும் பெருமையை உடையவனே..
பூமிக்கு ஒளியாகத் திகழ்பவனே.. எழுந்தருள்வாயாக!.. 

உனது வலிமையைக் கண்ட பகைவர்கள் - அச்சம் கொண்டு தங்கள் வலிமை இழந்து கதியற்றவராய் உனது மாளிகை வாசலுக்கு  வந்து உன் திருவடிகளில் விழுகின்றனர்.. 

அவர்களைப் போல உன்னைப் புகழ்ந்தபடி உனது திருமாளிகையின் வாசலுக்கு வந்துள்ளோம்..
எழுந்தருள்வாயாக!.. 
**

சிவதரிசனம்
தேவாரம்
திருப்பாட்டு


பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத் துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்
நல்லூர் அருட்துறையுள்
அத்தா உனக்கு ஆளாய் இனி
அல்லேன் எனலாமே.. 7/1/1
-: சுந்தரர் :-
**

போற்றித்
திருத்தாண்டகம்
(திருஆரூர்)


பிரமன்தன் சிரமரிந்த பெரியோய் போற்றி
பெண்ணுருவோடு ஆணுருவாய் நின்றாய் போற்றி
கரநான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி
காதலிப்பார்க்கு ஆற்ற எளியாய் போற்றி
அருமந்த தேவர்க்கு அரசே போற்றி
அன்றரக்கன் ஐந்நான்கு தோளும் தாளும்
சிரம்நெரித்த சேவடியாய் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.. 10
(திருநாவுக்கரசர்)
**

திருவாசகம்


 புன்புலால் யாக்கை புரைபுரை கனியப்
பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென்
என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட
ஈசனே மாசிலா மணியே
துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்காந்
தொடக்கெலாம் அறுத்தநற் சோதீ
இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே..10
-: மாணிக்கவாசகர் :-
**

தொகுப்பிற்குத் துணை

நாலாயிர திவ்யப்ரபந்தம்
பன்னிரு திருமுறை,
தருமபுரம் ஆதீனம்..
**

ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

5 கருத்துகள்:

  1. மார்கழியில் அருமையான பதிவு

    பதிலளிநீக்கு
  2. துப்பாயார் யாரென்று தேடிக்கொண்டிருக்கிறேன்!! படித்தேன், ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. தமிழமுதம் பருகி மகிழ்ந்தோம். தொடர்ந்து சந்திப்போம். எனது பதிவு- https://newsigaram.blogspot.com/2024/01/02.html

    பதிலளிநீக்கு
  4. பாடல்களை பாடி இறைவனை தரிசனம் செய்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் கண்கொள்ளா காட்சிகள். திருப்பாவையும், அதன் விளக்கமும் நன்றாக உள்ளது. தேவாரம், திருவாசகம் பாடி இறைவன் தரிசனத்தைப் பெற்றேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..