நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், நவம்பர் 07, 2024

தமிழ் மாலை 6

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 21
வியாழக்கிழமை

கந்த சஷ்டி
ஆறாம் நாள்
சூர சம்ஹாரப் பெருவிழா

ஸ்ரீ அருணகிரிநாதர
அருளிச்செய்த
திருப்பாடல்கள்


தலம் சேலம்

தனதன தானத் தனதன தானத் தனதன தானத் ...  தனதான

பரிவுறு நாரற் றழல்மதி வீசச் சிலைபொரு காலுற் ... றதனாலே

பனிபடு சோலைக் குயிலது கூவக் குழல்தனி யோசைத் ... தரலாலே

மருவியல் மாதுக் கிருகயல் சோரத் தனிமிக வாடித் ... தளராதே

மனமுற வாழத் திருமணி மார்பத் தருள்முரு காவுற் ... றணைவாயே..

கிரிதனில் வேல்விட் டிருதொளை யாகத் தொடுகும ராமுத் ... தமிழோனே

கிளரொளி நாதர்க் கொருமக னாகித் திருவளர் சேலத் ... தமர்வோனே

பொருகிரி சூரக் கிளையது மாளத் தனிமயி லேறித் ... திரிவோனே

புகர்முக வேழக் கணபதி யாருக் கிளையவி நோதப் ... பெருமாளே..
-: திருப்புகழ் :-

சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்பும் அவன்
கால்பட் டழிந்தது இங்கு என்தலை மேல் அயன் கையெழுத்தே.. 40
-: கந்தரலங்காரம் :-

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே..51
-: கந்தரநுபூதி :-
நன்றி கௌமாரம்

முருகா முருகா
முருகா முருகா

ஓம்  சிவாய நம ஓம்
***

10 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ஓம் ஸ்ரீராம்.. நாளைக்குப் பாரணை...... ஆஆஆஆ நான் சாப்பிடப்போகிறேன் நாளைக்கு ஹா ஹா ஹா...

      நீக்கு
    2. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. இந்த நாளைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.. அரோகரா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகா முருகா..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி அதிரா

      நீக்கு
  3. "மாமைலோன் வேல்பட்டழிந்தது வேலையுஞ் சூரனும் வெப்பும்.....

    சூரஹம்ஹாரநாளில் அவனருளை வேண்டுகிறோம் ஓம் முருகா சரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி மாதேவி

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..