நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 20
புதன் கிழமை
கந்தசஷ்டி
ஐந்தாம் நாள்
ஸ்ரீ அருணகிரிநாதர
அருளிச்செய்த
திருப்பாடல்கள்
தலம் கருவூர்
தனதானத் தனதான
தனதானத் ... தனதான
மதியால்வித் தகனாகி
மனதாலுத் ... தமனாகிப்
பதிவாகிச் சிவஞான
பரயோகத் ... தருள்வாயே
நிதியேநித் தியமேயென்
நினைவேநற் ... பொருளானோய்
கதியேசொற் பரவேளே
கருவூரிற் ... பெருமாளே..
-: திருப்புகழ் :-
நாள் என் செயும்வினை தான் என் செயும் எனை நாடிவந்த
கோள் என் செயுங்கொடுங் கூற்று என் செயும் குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.. 38
-: கந்தரலங்காரம் :-
முருகா முருகா
முருகா முருகா
ஓம் சிவாய நம ஓம்
***
சிவமைந்தன் நம்மைக் காக்க பிரார்த்திப்போம்.
பதிலளிநீக்குமுருகா
நீக்குமுருகா
தங்கள்
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்..
தஞ்சை பூச்சந்தை முருகா சரணம்.
பதிலளிநீக்குதிருச்செந்தூர் தங்கரதம் அற்புதமான தரிசனம் கண்டு வணங்கினோம்.
"நாள் என்செய்யும் ...." எனக்கு முன்னே வந்து தோன்றிடினே"
அவனருள் காத்திடும்போது அனைத்தும் துரும்பு.
முருகா உன்பாதம் பணிகிறோம் அனைவர் நலனுக்கும் அருள் செய்.
அனைவரது நலனுக்கும் அருள் செய். அப்பனே..
நீக்குதங்கள்
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி மாதேவி..
படங்கள் அழகு. அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி வெங்கட்..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. கந்த சஷ்டி ஐந்தாம் நாள் பதிவாகிய கந்தரலங்கார பாடல்களும், தஞ்சை பூச்சந்தை வள்ளி தேவசேனா சமேத முருகன் தரிசன படங்களும் அருமை.
திருச்செந்தூரில் தங்க ரதத்தில் முருகனையும் கண்டு பிரார்த்தித்துக் கொண்டேன். மனமுருக கந்தனை கண்டு வணங்கி கொண்டேன். அனைவருக்கும் இறைவன் நல்லதை தரட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அனைவருக்கும் இறைவன் நல்லதைத் தரட்டும்..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்