நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, நவம்பர் 08, 2024

திருப்புகழ்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 22
வெள்ளிக்கிழமை


எட்டு திருத்தலங்களை உள்ளடக்கிய
திருப்பாடல்


வேதாள பூதமொடு காளிகா ளாத்ரிகளும் வெகுளுறு பசாச கணமும்

வெங்கழு குடன்கொடி பருந்து செம் புவனத்தில் வெம்பசி ஒழிக்க வந்தே

ஆதார கமடமும் கணபண வியாளமும் அடக்கிய தடக்கிரி எலாம்

அலைய நடமிடு நெடுந் தானவர் நிணத் தசை  அருந்திப் புரந்த வைவேல்..

தாதார் மலர்ச் சுனை பழநி மலை சோலை மலை தனிப் பரங்குன்றே ரகம்

தணிகை செந்தூ ரிடைக் கழியா வினன்குடி தடங்கடல் இலங்கை அதனில்

போதார் பொழிற் கதிர் காமத் தலத்தினைப் புகழும்  அவரவர் நாவினிற்

புந்தியில மர்ந்தவன் கந்தன் முருகன் குகன் புங்கவன் செங்கை வேலே...
-: வேல் விருத்தம் :-
நன்றி கௌமாரம்


வீரவேல் தாரை வேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் -  வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் துளைத்த வேல் உண்டே துணை..
-; தனிப்பாடல் :-
ஃஃ
 காணொளியில்
கந்தன் தரிசனம்

தஞ்சை பூச்சந்தை
திருமுருகன் உலா


சிக்கல் 
சிங்கார வேலவன்
தரிசனம்


திரு ஐயாற்றில் நிகழ்ந்த
கந்த சஷ்டி வழிபாடு









திருச்செந்தூரில்
பச்சை சாற்றி
தீப ஆராதனை


 நன்றி நன்றி..  

வேல் வேல்
சக்திவேல்
வேல் வேல்
வெற்றிவேல்

முருகா முருகா
முருகா முருகா

ஓம்  சிவாய நம ஓம்
***

8 கருத்துகள்:

  1. சிக்கல், திருச்செந்தூர், திருவையாறு முருகனை தரிசிக்க வாய்ப்பு கிட்டியது.

    முருகன் திருவருள் முன்னின்று காக்கட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிக்கல் சிங்கார வேலனையும் திருச்செந்தில் நாதனையும் தரிசனம் சாதாரண நாள்களில் தரிசனம் செய்துள்ளேன்..

      திரு ஐயாறும் தஞ்சையும் சொல்லவே வேண்டாம்.

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. வேல்விருத்தம் மிக அருமையாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நெல்லை அவர்களுக்கு
      நன்றி

      நீக்கு
  3. எட்டுத் திருத்தலங்களை அடக்கிய பாடல் கதிர்காமக் கந்தனையும் பாடலில் அமைத்திருப்பது படிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

    பூச்சந்தை, சிக்கல் ,திரு ஐயாறு,திருச்செந்தூர் முருகனையும் தரிசித்து மகிழ்ந்தோம்.

    அழகிய படங்களும் காணொளியும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி மாதேவி

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை.எட்டு திருத்தங்களை உள்ளடக்கிய பாடல்களை பாடி மகிழ்ந்தேன்.

    கந்தன் அலங்கார படங்களும். தீபாரதனை படங்களும் நன்றாக உள்ளது.

    காணொளிகள் அருமை. சிக்கல் சிங்கார வேலர் காணொளியும், திருச்செந்தூர் பச்சை சாற்றி உற்சவ படங்களும் கண்கள் குளிர கண்டேன். நல்லதொரு தரிசன பகிர்வை எங்களுக்கு தந்தமைக்கு உங்களுக்கு என் அன்பான நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

    நன்றி

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..