நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, நவம்பர் 10, 2024

சதயத் திருநாள் 1

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 24
ஞாயிற்றுக்கிழமை

மாமன்னர்
ராஜராஜ சோழரின்
பிறந்த நாள்


வட்டெழுத்துக்களாக இருந்த தமிழுக்கு  வரி வரிவம் கொடுத்துத் தமிழை மேம்படுத்திய தமிழின் நாயகன் 
மாமன்னர் ராஜராஜ சோழர்..


தில்லையின் நிலவறைக்குள் ஆதரவற்றுக் கிடந்த   திருப்பதிகங்களை மீட்டெடுத்துடன் திருநாரையூர் நம்பியாண்டார் நம்பிகள் மூலமாகத் தொகுத்தளித்து சிவபாதசேகரன் எனும் சிறப்பு பெற்ற பெருமகன்..

நால்வகைப் படையொடு கடற்படையும் நடாத்திய வெற்றித் திருமகன்..

குடவோலை மூலமாக நல்லவர்களைத் தேர்ந்தெடுத்து ஊர் நிர்வாகத்தை அவர்களைக் கொண்டு நடத்திய   ஜனநாயகன்..

மாமன்னரது திறம் கூறுகின்ற மெய்க்கீர்த்தி..  

" ஸ்வஸ்திஸ்ரீ் திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் கலமறுத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசு கொள் ஸ்ரீ்கோவி ராஜராஜ கேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்."
 (நன்றி: விக்கி)




மாமன்னர்
திருவடிகள் போற்றி

 ஓம் சிவாய நம ஓம் 
***

5 கருத்துகள்:

  1. சதயத் திருநாள். நன்று. கொண்டாடுவோம்.


    அதே சமயம் கேட்பாரற்று கிடைக்கும் அந்த மாமன்னனின் நினைவிடத்தையும் செப்பனிட்டு ஒரு மணிமண்டபம் போல அமைக்க குரல் கொடுப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் இல்லை என்கின்றார்களே..

      தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. சதையப் பெருவிழா நடத்தப்படுவது மகிழ்ச்சி வாழ்த்துகள்.
    சரித்திர நாயகர்களும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் அழியாது பாதுகாப்பது அனைவரின் கடமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை..

      தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி மாதேவி..

      நீக்கு
  3. சதயத்துக்கெனவும் ஒரு திருநாள் இருப்பது இப்போதான் தெரியும் எனக்கு.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..