நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 26
செவ்வாய்க்கிழமை
முத்தம்மாள் சத்திரம்
தஞ்சையை அடுத்திருக்கும் (20 கிமீ) ஒரத்தநாட்டில் அமைந்துள்ள பழைமையான
தங்கும் விடுதி..
எவ்வித கட்டணமும் இன்றி வழிச் செல்வோர் தங்கி உணவருந்தி ஓய்வெடுப்பதற்கான சிறு மாளிகை..
இன்றைக்கு
பாதுகாக்கப்பட்ட வேண்டிய நிலையில் உள்ளது ..
இதன் தொன்மையினால் பாரம்பரிய நினைவுச் சின்னமாகவும் அறிவிக்கப்பட உள்ளதாக செய்திகள்..
தஞ்சை வளநாட்டை ஆட்சி செய்த மராட்டிய மன்னர்கள் கிபி.1743 முதல் 1837 வரை பெரியதும் சிறியதுமாக அன்ன சத்திரங்களை தஞ்சாவூரில் இருந்து தனுஷ்கோடி வரை அமைத்தனர்.
இவற்றில் தஞ்சாவூரில் காஞ்சி வீடு சத்திரம், சிரேயஸ் சத்திரம், சூரக்கோட்டையில் சைதாம்பாள்புரம் சத்திரம், ராசகுமார பாயி சத்திரம், ஒரத்தநாட்டில் முத்தம்மாள் சத்திரம்
பட்டுக்கோட்டை காசங்குளச் சத்திரம், மணமேல்குடி திரௌபதாம்பாள்புரம் சத்திரம், மீமிசலில் ராசகுமாரம்பாள் சத்திரம்..
சேதுபாவாசத்திரம் என்றே பிரசித்தமான ஊர் ஒன்றும் உள்ளது
ராமேசுவரத்தில் ராமேசுவரம் சத் திரம்..
மேலும் தனுஷ்கோடியில் சேதுக்கரை சத்திரம் என, காலத்தில் எஞ்சியதாக வழி
நெடுகிலும் சத்திரங்கள் முக்கியமானவை..
இவை தவிர நீடாமங்கலத்தில் யமுனாம்பாள் சத்திரம் என்றும் ஒன்று உள்ளது..
கீழே
யமுனாம்பாள் சத்திரத்தின் இன்றைய நிலையைக் காட்டுகின்ற படங்கள் :
நன்றி இணையம்..
ஒரத்தநாடு முத்தம்மாள் சத்திரம் 1800 - ல் இரண்டாம் சரபோஜி மன்னரால் கட்டப்பட்டது ..
காசியிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் பக்தர்களும், வழிப் போக்கர்களும் இங்கே தங்கி உணவு உண்டு ஓய்வெடுத்து பிறகு பயணத்தைத் தொடர்ந்திருக்கின்றனர்..
இப்படி வழிச் செல்வோருக்குத்
தேவையான உணவு உறைவிட வசதியுடன் கூடியதாக இந்தச் சத்திரங்கள் இருந்திருக்கின்றன...
இப்படி வழிச் செல்வோருக்கான சத்திரங்கள் தமிழகத்தில் வேறெங்கும் இல்லை..
தஞ்சாவூர் இராமேஸ்வரம், பட்டுக்கோட்டை தனுஷ்கோடி வழித்தடத்தில் மட்டுமே அமைந்துள்ளன..
அந்தக் காலத்தில் கனவான்களும் தனவான்களும் இத்தகைய சத்திரங்களுக்கு விளைச்சல் உள்ள நிலங்களை நன்கொடையாக அளித்திருக்கின்றனர்...
பிள்ளைப் பேறு அற்றோர் இத்தகைய சத்திரங்களுக்கு தமது செல்வங்களை எழுதி வைத்து புண்ணியம் தேடிக் கொண்ட வரலாறுகளும் இருக்கின்றன..
மன்னர்களின் காலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதும் சத்திரங்களுக்கான திரண்ட செல்வங்கள் கேட்பதற்கு நாதி இல்லாமல் அந்நியர்களின் கைகளுக்குள்
போயின..
இந்நிலையில் பின்னாட்களில்
எஞ்சியுள்ள சத்திரங்களைப் பராமரிக்க சத்திரம் நிர்வாகம் என்று உருவாக்கப்பட்ட அமைப்பு இன்றும்
தஞ்சை மாவட்டத்தில் இயங்கி வருகின்றது..
ஒரத்தநாடு
முத்தம்மாள் சத்திரம் சுதை வேலைப்பாடுகன் கருங்கல் சிற்பங்களுடன்
அழகான அமைப்புடையது..
யானைகள் விளங்கும் தோரண வாயில், குதிரை பூட்டிய தேர் போன்ற சக்கர வாயில், முன் மண்டபம், தூண்கள் தாங்கி நிற்கும் பெரிய பெரிய முற்றங்களும் சிவ ஆலயமும், மேல் தளத்தில் அழகிய வேலைப் பாடுகளுடன் கூடிய மரத் தூண்களும் திகழ்கின்றன.
நீர் நிறைந்த கிணறு ஒன்றும் பழைமை மாறாமல் சத்திரத்தினுள் உள்ளது என்கின்றனர்..
சரபோஜி மன்னருக்குப் பிறகு
இதைக் கைப்பற்றிய ஆங்கிலேயர் பள்ளிக்கூடமாக நடத்தினர்.. அதைத் தொடர்ந்து மாணவர் விடுதியாகவும் பயன் படுத்தப்பட்டது.
கலைநயத்துடன் கூடிய முத்தம்மாள் சத்திரம் தற்போது
பழுதடைந்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது..
முத்தம்மாள் சத்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன..
இச் சத்திரத்தை எத்தனையோ முறை வெளியில் இருந்து பார்த்திருக்கின்றேன்..
இப்போது உள்ளே சென்று பார்ப்பதற்கு ஆவல் உண்டாகின்றது.. கால் வலி சற்று குணமானதும் இங்கே செல்வதற்கு உத்தேசம்..
தர்மம் நிகழ்ந்த இடங்கள் கோயிலுக்குச் சமம்.
இந்த சத்திரங்களைக் கண்ணால் காண்பதுவும் புண்ணியம்..
காலம் தனது கையில் என்ன விதமான கட்டளையை வைத்திருக்கின்றதோ!..
தெரியவில்லை!.
அறம் வாழ்க
அறம் வளர்த்த
அரசர் புகழ் வாழ்க..
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
பல சத்திரங்கள் எப்படி தனியார் சொத்தாக மாறியது, பிற மதங்களின் பிடியில் வந்தது என்பவை ஆச்சர்யம்தான். கையில் பட்டா இல்லையென்றால் தங்கள் சொத்து என வக்ஃப் போர்டு அரசின் துணையோடு எடுத்துக்கொள்கிறது. மயிலை பேயாழ்வார் திருத்தலமே தங்களோடு சொத்து என்கிறது. எல்லாம் ஜனநாயகத்தால் விளைந்த தீமை. காந்தி காங்கிரசின் அநியாயங்கள்.
பதிலளிநீக்கு/// மயிலை பேயாழ்வார் திருத்தலமே தங்களோடு சொத்து என்கிறது. எல்லாம் ஜனநாயகத்தால் விளைந்த தீமை. காந்தி காங்கிரசின் அநியாயங்கள்.///
நீக்குஉண்மை உண்மை..
திருச்சி மாவட்டம் திருச்செந்துறை கிராமத்தின் கதை தான்...
வாழ்க ஜனநாயகம்..
மகிழ்ச்சி நன்றி...
சத்திரம் பற்றிய தகவல்கள் மிகச் சிறப்பு.
பதிலளிநீக்குதுரை அண்ணா எங்கள் ஊரில் சத்திரம் உண்டு. பழைய காலத்துத் தூண்கள், கூரை என்று மிக அழகாக இருக்கும். வழி வழியாக வந்திருக்கும் குடும்பம் என்று சொல்லப்படும் அந்த வீட்டு மாமாவை மாஸ்டர் என்று சொல்வதுண்டு சமையல் நிபுணர். அதில் நமக்கு வேண்டிய குடும்பம் இருந்தது என்பதோடு அவர்களைக் குறிப்பிடும் போது எல்லோரது பெயருக்கு முன்னும் சத்திரம் என்ற சொல்லைச் சேர்த்துதான் குறிப்பிடுவோம். சத்திரத்தின் பின் வாசல் குளத்துப் படிகளுக்குச் செல்லும் அங்கு பூந்தோட்டம் இருந்தது. குளத்தில் குளிக்க வசதியாக இருக்கும். அவர்கள் எங்கள் நட்பு என்பதால் சில நாட்கள் அந்தக் குளத்துப் படிகளில் குளித்ததுண்டு. சில சமயம் மற்ற படித்துறைகள் ஃப்ரீயாக இல்லை என்றால் சத்திரத்து படித்துறைக்குப் போய்டலாம் என்று நாங்கள் சென்று குளித்து உள்ளே துணி மாற்றிக் கொள்ளவும் வசதியாக இருக்கும் என்பதால்,
என் பழைய நினைவுகளை மீட்டது.
மதுரையில் கூட சத்திரம் பஸ் ஸ்டான்ட் என்று சொல்வதுண்டே அங்கும் சத்திரங்கள் இருந்த நினைவு
கீதா
மேலதிக செய்திகளுடன் கருத்துரை...
நீக்கு/// மதுரையில் கூட சத்திரம் பஸ் ஸ்டான்ட் என்று சொல்வதுண்டே.. ///
மதுரையில் ராணி மங்கம்மாள் சத்திரம்...
சத்திரம் பஸ் ஸ்டான்ட்.. இது திருச்சியில்...
தங்களது
வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..
ஆமாம் திருச்சி சத்திரம் பஸ் ஸ்டான்ட்...டக்கென்று மதுரை என்று வந்துவிட்டது....என்னவோ தெரியலை நேற்று மதுரை மனதுள் நிறைய வந்து சென்றது என்பதாலோ என்னவோ
நீக்குகீதா
மகிழ்ச்சி
நீக்குநன்றி சகோ
என் சிறு வயதில் என்னை பாட்டி திருப்பதிக்கு அழைத்துச் சென்ற போது கூட அங்கு சத்திரத்தில் தங்கினோம். பெயர் எதுவும் நினைவில்லை இப்போது
பதிலளிநீக்குபெரும்பாலான கோயில்கள் அருகில் சத்திரங்கள் இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது துரை அண்ணா
கீதா
நீக்கு/// பெரும்பாலான கோயில்கள் அருகில் சத்திரங்கள் இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது.. ///
ஒன்றிரண்டு எங்காவது இருக்கலாம்..
மற்றவை சூறையாடப் பட்டு விட்டன
மகிழ்ச்சி..
நன்றி சகோ
இதில் எந்த சத்திரமும் இன்னமும் தொடர்ந்து செயல்படவில்லை என்றே நினைக்கிறேன். உண்மையிலேயே பெரிய விஷயம், அந்தக் காலத்தில் இந்த சத்திரங்கள் எல்லாம்.
பதிலளிநீக்குஉண்மையிலேயே பெரிய விஷயம், அந்தக் காலத்தில் இந்த சத்திரங்கள் எல்லாம்.
நீக்குஉண்மை தான்..
தங்களது
வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
இதற்கு அளிக்கப்பட்ட நிலங்கள், சொத்துகள் என்ன, எங்கே யாரிடம் இருக்கின்றன என்று விசாரிக்க வேண்டும். நாம் அறியாத திருட்டுகள் ஏகப்பட்டது இருக்கும் போல...
பதிலளிநீக்குபின்னாட்களில்
நீக்குஎஞ்சியுள்ள சத்திரங்களைப் பராமரிக்க சத்திரம் நிர்வாகம் என்று உருவாக்கப்பட்ட அமைப்பு இன்றும்
தஞ்சை மாவட்டத்தில் இயங்கி வருகின்றது.
பதிவில் சொல்லி இருக்கின்றேனே...
மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்
படித்தேன்.
நீக்குஎனில், இன்னமும் இலவச தங்குமிடம், இலவச உணவு என்று சத்திரம் இயங்குகிறதா?
நல்ல நிலையில் இருக்கின்ற கட்டிடங்களில் மாணவர் விடுதிகளும் கல்விக் கூடங்களும் நடத்தப்படுகின்றது..
நீக்குமகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்..
அரசர்காலங்களில் ஏற்படுத்திய சத்திரங்கள் யாத்திரீக மக்கள் பலருக்கும் பெருமளவில் உதவியாக இருந்திருப்பது உங்கள் இன்றைய விரிவான பகிர்வின் மூலம் அறிகிறோம்.
பதிலளிநீக்குஇங்கும் சில கோவில்களை அண்டி சத்திரங்கள் பலவும் அமைக்கப்பட்டு ஆதரவற்றோர், யாத்திரிகர்கள் என பலரும் இருந்ததை கண்டிருக்கிறோம். காலமாற்றங்களில் பலவும் காணாமல் போய்விட்டன என்பது உண்மையே.
மீண்டும் சத்திரங்களை புதுப்பித்து செயல்படுத்தினால் யாத்திரிகர்கள் ஆதரவற்றோருக்கும் உதவியாக இருக்கும்.
இப்போதைய கால கட்டத்திற்கு சத்திரங்கள் ஒத்து வருமா
நீக்குதெரியவில்லை..
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
நன்றி மாதேவி..