நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மே 01, 2026

நிறைநிலா


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
சித்திரை நிறைநிலா
 வெள்ளிக்கிழமை

அன்பின் நல்வாழ்த்துகள்


திருப்புகழ்
கதிர்காமம்

தனதனன தான தனதனன தான
     தனதனன தானத் ... தனதான

திருமகளு லாவு மிருபுயமு ராரி
     திருமருக நாமப் ... பெருமாள்காண்

செகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
     தெரிதருகு மாரப் ... பெருமாள்காண்

மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு
     மரகதம யூரப் ... பெருமாள்காண்

மணிதரளம் வீசி யணியருவி சூழ
     மருவுகதிர் காமப் ... பெருமாள்காண்

அருவரைகள் நீறு படஅசுரர் மாள
     அமர்பொருத வீரப் ... பெருமாள்காண்

அரவுபிறை வாரி விரவுசடை வேணி
     அமலர்குரு நாதப் ... பெருமாள்காண்

இருவினையி லாத தருவினைவி டாத
     இமையவர்கு லேசப் ... பெருமாள்காண்

இலகுசிலை வேடர் கொடியினதி பார
     இருதனவி நோதப் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-

 நன்றி கௌமாரம்


முருகா முருகா
முருகா முருகா
***

புதன், ஏப்ரல் 29, 2026

தேரோட்டம்

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
சித்திரை 16
புதன்கிழமை


சித்திரை 14 (27/4) திங்களன்று தஞ்சை பெரியகோயிலின் திருத்தேரோட்டம் 
பல்லாயிரக்கணக்கான மக்கள் வரவேற்க கோலாகலமாக நிகழ்ந்தது...


வெயிலின் தாக்கத்தை அனுசரித்து சற்று முன்னதாகவே  திட்டமிடப்பட்டது...

அதன்படியே வடம் பிடிக்கப் பெற்று
திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக நிகழ்ந்து தேர் நிலைக்கு வந்தது...

ராஜ வீதிகள் நான்கிலும் சிறப்பான முறையில் நீர் மற்றும் மோர் சித்ரான்னங்கள் வழங்கப்பட்டன..

தஞ்சை தேரோட்டத்தின் படக்காட்சிகள்..

இவை அனைத்தும் ஸ்ரீ மணிகர்ணிகேஸ்வரர் திருக்கோயிலின் அருகில் எடுக்கப்பட்டவை..




















கூட்ட நெரிசலில் தேர் இழுக்கப்பட்ட அழகைக் காண முடியவில்லை...

கோயிலின் அருகே நிறுத்தப்பட்டிருந்த அழகு தான் இவ் வருடம்..

தேர்த்திருவிழாவின் நெரிசல் இயல்பானது... அதனுள் நுழைந்து வந்ததே பெரிய விஷயம்..

இயன்றவரை காட்சிப்படுத்தியுள்ளேன்...

எல்லாம் அம்மையப்பன் அருள்...

ஓம் நம சிவாய
***

செவ்வாய், ஏப்ரல் 28, 2026

காக்க காக்க..

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
சித்திரை
செவ்வாய்க்கிழமை 



இப்போதெல்லாம் கைத்தல பேசியில் எதுவும் வாசிக்க முடிவதில்லை..
தட்டச்சு செய்வதும் சிரமமாக உள்ளது...

பல பிரச்னைகள்..

சற்று நேரம் வெளியே சென்று காலார நடந்து வரலாம் எனில் - 

(வீட்டைச் சுற்றிலும் இருக்கின்ற  சாலைகள் தலை கீழாகப் புரண்டு கிடப்பதால் நெடுஞ்சாலை ஓரம் தான் நடப்பதற்கு...

ஆனாலும், நான் 
நடப்பதில்லை..
முழங்காலில் வலி காரணம்.. )

அங்கே -
சுய கட்டுப்பாடு இல்லாத மனிதர்களே அதிகம்...

உரிய ஒழுங்கு இல்லாமல்  வாகனங்களை இயக்குபவர்களும் 

ஒரே வழித்தடத்தில் நேருக்கு நேர் படு வேகமாக வருபவர்களும் தான் அதிகம்....

சாலை சந்திப்புகளின் நடுவே அமைக்கப்பட்டுள்ள  வட்ட வடிவ ஒழுங்கை மீறி குறுக்காகப் பாய்ந்து செல்கின்ற மனித ஜந்துகளே அதிகம்...

சாலை சந்திப்புகளில் பொது மக்கள் குறுக்காகச் செல்வதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டிருக்கும் வெள்ளைப் பட்டைகளை மதிக்காத வாகன ஓட்டிகளும்  அதிகம்...

சாலை விதிகள் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாமல்  மனம் போன போக்கில்,  வாகனங்கள் இயக்கப்படுவதே நிதர்சனம்...

இன்னும் எவ்வளவோ இதைப் பற்றிச் சொல்லலாம்..

சுதந்திர நாட்டின் பொது வாழ்வில் எவரையும் குறை சொல்வது நோக்கம் அல்ல..

சாலைப் போக்குவரத்தில்
பிறரால் நமக்கு இடையூறு  ஏற்படுவதன் காரணமாக மனதில் எழுகின்ற ஆதங்கமே இது..

நகர்ப்புறச் சாலைகளும் கிராமத்துத் தெருக்களும் ஒன்றாகவே மிளிர்கின்றன... எங்கெங்கும்  கவனக் குறைவான ஆபத்தான வாகன இயக்கமே...
வாகனங்கள் அலறி அடித்துக் கொண்டு  செல்கின்ற நிலையே உள்ளது.

இதனைக் கட்டுப்படுத்த, ஆங்காங்கு போக்குவரத்து
காவலர்களை நியமித்து  சாலை போக்குவரத்தை  ஒழுங்குபடுத்துவது அவசியம்.

ஆனால், எங்கெங்கும் ஒழுங்கீனமே நிறைந்து இருக்க - இதெல்லாம் நடக்கின்ற காரியமா?...

இறைவன் தான்  காப்பாற்ற வேண்டும்..

வாழ்க நலம்
***

திங்கள், ஏப்ரல் 27, 2026

கேழ்வரகுக் கூழ்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
சித்திரை
 திங்கட்கிழமை




கேழ்வரகு கூழ் 

அற்புதமான உணவு. 
பித்தத்தால் ஏற்படும் உடல் வெப்பத்தைக் கேழ்வரகு கட்டுப்படுத்தும். இதில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து இருப்பதால், ரத்தச் சோகையைக் கட்டுப் படுத்துகிறது.

கேழ்வரகு  கஞ்சியினால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுகின்றது.   உடலுக்கு ஊட்டம் கிடைக்கின்றது. 
காய்ச்சலில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மூட்டுகளில் வலி ஏற்படலாம்..  இது குறைவதற்கு கேழ்வரகு கூழ் ஏற்றது. 


சிறு குழந்தைகளுக்கு  நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்...

தெரு ஓரத்துத் தயாரிப்புகளை விட நாமே கூழ் செய்து கொள்வது முதன்மையாகும்..

செய்முறை


அரை டம்ளர் கேழ்வரகு மாவினை எடுத்து அளவாகத் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்...

உத்தேசமாக மூன்று குவளை (450 ml) தண்ணீரும்
சிறிது கல் உப்பும்  சேர்த்து கொதிக்க வைத்து நன்றாக வெந்ததும் இறக்கி விடவும். 

இனிப்புக்கு, பனை வெல்லத்தைக் காய்ச்சி - வடிகட்டி ஊற்றி அதனுடன் சிறிதளவு தேங்காய்த் துருவலும் இரண்டு ஏலக்காயும் சேர்த்துக் கொள்ளலாம்..

உப்புக்கஞ்சி எனில் மோர், சின்ன வெங்காயம், உப்பு, சிறிது இஞ்சி , புதினா, கொத்த மல்லி தழை சேர்த்தும்  தயாரிக்கலாம்..

கேழ்வரகு கூழ் ஓரளவுக்கு நீர்க்க இருப்பது சிறப்பு..

அவ்வப்போது கையளவு
முருங்கைக் கீரை சேர்த்தும் கூழ் தயாரிக்கலாம்..

நமது நலம் 
நமது கையில்..
***

ஞாயிறு, ஏப்ரல் 26, 2026

காளியாட்டம்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
சித்திரை
ஞாயிற்றுக்கிழமை


கும்பகோணம் 
ஸ்ரீ சுந்தர மகா காளியம்மன் கோயிலில் நிகழ்வுற்ற காளியாட்ட வைபவத்தின் சில காட்சிகள்...








நன்றி நன்றி

திருமதி கமலா ஹரிஹரன் அவர்களுக்காக...


ஆடி வரும் காளியம்மா
ஆறுதல் மொழிவாய்

அவரவர் தம் குறைகள் தீர
அருள்மழை பொழிவாய்..

தேடி வரும் காளி உந்தன்
திருவடியைப் போற்றி

பாடி வரும் ஏழை மனம்
திருவிளக்கை ஏற்றி!...

ஓம் சக்தி ஓம்
***

சனி, ஏப்ரல் 25, 2026

கருடசேவை

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
சித்திரை
 சனிக்கிழமை


தஞ்சையின் வெண்ணாற்றங்கரை திவ்ய தேசங்களில் ஒன்றாக - 

மாமணிக் கோயில் எனத் திகழும் ஸ்ரீ நீலமேகப் பெருமாள் கோயிலில்  அக்ஷய திருதியை வைபவத்தை முன்னிட்டு கருடசேவை நிகழ்ந்தது..  

மற்றும் அன்னப் படையல் பூஜைகளும்  சிறப்பாக நடைபெற்றன..


இத்தலத்தில்  ஶ்ரீ நீலமேகப் பெருமாள்  கருட வாகனத்தில் ஆண்டாள் சமேதராக பக்தர்களுக்கு காட்சி தருவது தனிச் சிறப்பாகும்.  

திரளான பக்தர்கள் பெருமாள் தரிசனம் செய்தார்கள்..

 படங்களுக்கு நன்றி

ஓம் நமோ நாராயணாய
***

வெள்ளி, ஏப்ரல் 24, 2026

திருப்புகழ்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
சித்திரை
 வெள்ளிக்கிழமை

திருப்புகழ்
சுவாமிமலை


தனன தனதன தனன தனதன
     தனன தனதன ... தனதான

குமர குருபர முருக சரவண
     குகசண் முககரி ... பிறகான

குழக சிவசுத சிவய நமவென
     குரவ னருள்குரு ... மணியேயென்

றமுத இமையவர் திமிர்த மிடுகட
     லதென அநுதின ... முனையோதும்

அமலை அடியவர் கொடிய வினைகொடு
     மபய மிடுகுர ... லறியாயோ

திமிர எழுகட லுலக முறிபட
     திசைகள் பொடிபட ... வருசூரர்

சிகர முடியுடல் புவியில் விழவுயிர்
     திறைகொ டமர்பொரு ... மயில்வீரா

நமனை யுயிர்கொளு மழலி னிணைகழல்
     நதிகொள் சடையினர் ... குருநாதா

நளின குருமலை மருவி யமர்தரு
     நவிலு மறைபுகழ் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
 
நன்றி
கௌமாரம்


முருகா முருகா
முருகா முருகா
***

வியாழன், ஏப்ரல் 23, 2026

ஸ்ரீ சாஸ்தா

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
சித்திரை
 வியாழக்கிழமை

 நன்றி ஐயப்ப மலர்


சிவாலயங்களை நோக்கியுள்ள
ஸ்ரீ சாஸ்தா கோயில்கள்

ஶ்ரீ பரசுராமர் ஸ்தாபித்த 
குளத்துப்புழை, 
ஆரியங்காவு, 
அச்சன்கோவில், 
சபரிமலை..
 
இந்த நான்கு சாஸ்தா கோயில்களும் பூகோள ரீதியாக தமிழ்நாட்டில் உள்ள நான்கு சிவாலயங்களை நோக்கி சாந்நித்யம் கொண்டிருப்பது  வியப்புக்குரிய செய்தி.

குளத்துப்புழை பாலகன் 
பாவநாசம் சிவனை நோக்கியும், 

ஆரியங்காவு ஐயன் 
திருக்குற்றால நாதரை நோக்கியும், 

அச்சன்கோயில் அரசு
ஸ்ரீ சங்கர நாராயணரை நோக்கியும், 

சபரிகிரி வாசன் 
சதுரகிரி ஸ்ரீ சுந்தர மகாலிங்கத்தை நோக்கியும் சந்நிதி கொண்டு இருக்கிறார்கள்.

இதில் கூறப்பட்டுள்ள சிவாலயங்கள் பழைமையானவை என்றால்,  அந்த அளவுக்குப்
பழைமையானவை  சாஸ்தாவின் சந்நிதிகள்... 

இது போன்ற பூகோள  அமைப்பு, வேறு எங்கும் காணப்படவில்லை. 

இத்தகைய அமைப்பு என்பது ஆழமான ஆகம, யோக, தத்துவ ரகசியங்களைக் கொண்டது. 

இந்த நான்கு சாஸ்தா கோயில்களில் நாம் மேற்கொள்ளும் வழிபாடு என்பது,  முடிவில் அது  சிவானுபவத்தில் நம்மை லயம் அடையச் செய்யும் பயணமாக அமைகிறது.

மலையாள தேசத்தை ஸ்தாபித்த பரசுராமர் தமது தவத்திற்குக் காவலாக சாஸ்தாவை நான்கு கோவில்களில் ஸ்தாபிக்கிறார் என்று அறிகின்றோம். 

அவை பூமியின் சக்தி கேந்திரங்களாக, சக்தி நாளங்களாக, (energy grid)  அடர்ந்த மலைத் தொடர்களில்  அமைந்துள்ளன. 

மலைத்தொடர் = முதுகெலும்பு
கோவில்கள் = சக்கரங்கள்
நோக்கும் திசை = சக்தி ஓட்டம் 

இந்த அமைப்பு சொல்லும் மிகப் பெரிய ரகசியம் ஐயனின் வழியில் சென்று சிவம் என்ற இலக்கை அடைவது தான்!..

ஐயனின் துளசி மாலை அணிவது, விரதம் மேற்கொள்வது, அன்னதானம் செய்வது, இருமுடி தாங்குவது
மலை ஏற்றம், பதினெட்டாம் படி தரிசனம்,  நெய் அபிஷேக சமர்ப்பணம் மற்றும் சரணாகதி

இவை யாவும் எதைக் குறிக்கின்றன?..


இவை - 
உடல் → மனம் → ஆத்ம சுத்தி ->> தத்துவமசி

- என்பதனைக் குறித்த பயணம்...

அந்த அளவில் பயணம் தொடர்கின்றது...

சரணம் ஐயப்பா
***

புதன், ஏப்ரல் 22, 2026

அநுக்கிரகம்

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
சித்திரை
 புதன்கிழமை


இறைவன் வருவான் அவன்
என்றும் நல்வழி தருவான்...

கடந்த வாரத்தில் ஒருநாள்  -  

தற்போதைய உடல் நலக் குறைவு சிரமங்களைக் குறித்து மிகவும் வருத்தமுற்று இருந்த போது சித்தர் வழிபாட்டுக் குழுவில் இருந்து வந்த திருப்பாடல்..

ஆலந்தான் உகந்தமுது செய் தானை
ஆதியை அமரர் தொழு தேத்தும்
சீலந்தான் பெரிதும் உடை யானைச்
சிந்திப்பார் அவர் சிந்தையு ளானை
ஏல வார்குழ லாள்உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பன்எம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே..7/61/1
-: சுந்தரர் :-

ஓம் நம சிவாய
***

செவ்வாய், ஏப்ரல் 21, 2026

முருகா சரணம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
பங்குனி
 செவ்வாய்க்கிழமை

மனித உடலில்
குருதிக்கு அதிபதி செவ்வாய்..
செவ்வாய்க்கு அதிபதி ஸ்ரீமுருகப்பெருமான்


வயதானோர் தம் பிரச்னைகளுள் ஒன்று இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறைவது...

சரி... இதனை எப்படி எதிர் கொள்வது?!..


முருகா காப்பாற்று!... - என்று செவ்வேள் குமரனைச் சரணடைந்து செவ்வாய்க்கிழமை களில் விரதம் இருப்பது...

வாரத்தில் இரண்டு நாட்கள் உணவுடன்
முருங்கைக் கீரை ரசம் அருந்துவது.. 

அத்திப் பழம் சாப்பிடுவது..
இதனுடன் 
சுட வைத்த பால்
பனங்கற்கண்டு  அவரவர் விருப்பம்..

சமையலில் சுண்டைக்காய் சேர்த்துக் கொள்வது..

அவ்வப்பொழுது
பேரீச்சம் பழங்கள் தின்பது..

வாரத்தில் இரண்டு நாட்கள்
பீட்ரூட் சாறு அருந்துவது..

வாரத்தில் மூன்று நாட்கள்
முளை கட்டிய பாசிப்பயறு எடுத்துக் கொள்வது.

மாதுளம் பழம் கருப்பு திராட்சை இவற்றை அவ்வப்பொழுது சாப்பிடுவது...

இவற்றால் 
இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் பெருகி பிரச்னை தீர்கின்றது என்பது வைத்தியக் குறிப்புகள்...

தக்க மருத்துவரது ஆலோசனையும் மேற்பார்வையும் அவசியம் தேவை...


(இயற்கை வழி குறிப்புகளில் இருந்து)

வாழ்க நலம்
***

திங்கள், ஏப்ரல் 20, 2026

பொன்மகள்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
சித்திரை
 திங்கட்கிழமை

இன்று
அக்ஷய திருதியை

அன்பின் நல்வாழ்த்துகள்..


தஞ்சையை அடுத்த திருச்சோற்றுத்துறை தலத்தில்
நல்ல உள்ளம் கொண்ட
 ஏழை ஒருவருக்கு
அட்சய பாத்திரம் கிடைத்த நாள்...

வறியோர்க்கு ஒன்றை ஈவதே ஈகை

பொன்மகளே வருக - பொருள்
 கோடியாய்த் தருக..

எளியோர்க்கு
 உதவுவோம்...

ஓம் மஹாலக்ஷ்ம்யை நம :
***

சனி, ஏப்ரல் 18, 2026

அநுகூலம்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
சித்திரை
 சனிக்கிழமை

இறைவன் வருவான் அவன்
என்றும் நல்வழி தருவான்...

கடந்த வாரம்  - சனிக் கிழமையன்று (4/4) உத்திரச் சேர்த்தி பதிவுகளை ஒழுங்கு செய்து விட்டு - 

(உத்திரச் சேர்த்தி பதிவுகளுக்கு பலரையும் எதிர்பார்த்திருந்த நிலையில் ஏமாற்றம தான்)

 கும்பகோணத்தில் வசிக்கின்ற என் தம்பியிடம் இருந்தும் அபுதாபியில் இருக்கின்ற என் நண்பரிடம் இருந்தும் வந்திருந்த முகமன் படங்களைப் பிரித்தேன்...

இருவரிடம் இருந்தும்
வந்திருந்த ஒரே தகவல்...


இது நல்ல செய்தி!.. 

அநுகூலம் தான்
அநுக்ரகம் தான்

ஓம் ஹரி ஓம்
***

வெள்ளி, ஏப்ரல் 17, 2026

திருப்புகழ்

  

நாடும் வீடும்
நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
பங்குனி
 வெள்ளிக்கிழமை


திருப்புகழ்
கதிர்காமம்

தனதனன தான தனதனன தான
     தனதனன தானத் ... தனதான

திருமகள் உலாவு மிருபுயமு ராரி
     திருமருக நாமப் ... பெருமாள்காண்

செகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
     தெரிதருகு மாரப் ... பெருமாள்காண்

மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு
     மரகதம யூரப் ... பெருமாள்காண்

மணிதரளம் வீசி யணியருவி சூழ
     மருவுகதிர் காமப் ... பெருமாள்காண்

அருவரைகள் நீறு படஅசுரர் மாள
     அமர்பொருத வீரப் ... பெருமாள்காண்

அரவுபிறை வாரி விரவுசடை வேணி
     அமலர்குரு நாதப் ... பெருமாள்காண்

இருவினையி லாத தருவினைவி டாத
     இமையவர்கு லேசப் ... பெருமாள்காண்

இலகுசிலை வேடர் கொடியினதி பார
     இருதனவி நோதப் ... பெருமாளே..
 -: அருணகிரிநாதர் :-

 நன்றி
கௌமாரம்

முருகா முருகா
முருகா முருகா
***