நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, டிசம்பர் 15, 2023

திருப்புகழ்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 29
வெள்ளிக்கிழமை

இன்றைய திருப்புகழ்
திருத்தணிகை
 

தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன ... தனதான

அரகர சிவனரி அயனிவர் பரவிமு 
னறுமுக சரவண ... பவனேயென்

றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயில் 
அனலென எழவிடு ... மதிவீரா

பரிபுர கமலம தடியிணை யடியவர் 
உளமதி லுறவருள் ... முருகேசா

பகவதி வரைமகள் உமைதர வருக 
பரமன திருசெவி ... களிகூர

உரைசெயு மொருமொழி பிரணவ 
முடிவதை உரைதரு குருபர ... வுயர்வாய

உலகம நலகில வுயிர்களுள் மிமையவ
ரவர்களு முறுவர ... முனிவோரும்

பரவிமு னநுதின மனமகிழ் வுறவணி
பணிதிகழ் தணிகையி ... லுறைவோனே

பகர்தரு குறமகள் தருவமை வநிதையு
மிருபுடை யுறவரு ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-

 

பாவங்களைத் தீர்க்கின்ற 
சிவபெருமான் திருமால் பிரம்மா 
ஆகிய மும்மூர்த்திகளும்

உனது முன்பாக போற்றி செய்து
 அறுமுகனே சரவணபவனே 
 என்று  நாள்தோறும் துதிக்க

சூரர்கள் அழியுமாறு
அக்னி போன்ற 
வேலாயுதம் தனை விடுத்த 
வீர மூர்த்தியே..

வீரச் சிலம்புகளுடன் தாமரை மலர் 
போன்று விளங்குகின்ற
 திருவடிகள் அடியார்களின்
உள்ளத்தில் பொருந்தும்படி
அருள்புரிகின்ற முருகப் பெருமானே..

மலையரசன் மகளாகத் தோன்றிய 
பகவதி உமாதேவியின்  
அருளால் வந்த குகனே,

சிவபெருமானின் செவிகள் மகிழும்படி
ஒப்பற்ற பிரணவப் பொருளினை
உபதேசித்த  குருபரனே

உயர்ந்த இவ்வுலகில் 
சிறப்புற்று வாழ்கின்ற
எண்ணற்ற உயிர்களும்
விண்ணுலக தேவர்களும்
பெருந்தவமுடைய முனிவர்களும்
உன்னை வணங்கித் துதி செய்து 
 நாள்தோறும் மகிழ்ச்சி அடையுமாறு 

அழகியதும் வாசுகி எனும் 
நாகம் வழிபட்டதுமாகிய
திருத்தணிகைத் தலத்தில் வாழ்பவனே..

தினை வனத்தில் வளர்ந்த  
வள்ளியம்மையும்
கற்பகத்தருவின் கீழ் வளர்ந்த
தேவகுஞ்சரியும்
இருபுறம் திகழ்கின்ற பெருமாளே..
**
 

முருகா முருகா 
முருகா முருகா

ஓம் நம சிவாய 
சிவாய திருச்சிற்றம்பலம்
***

8 கருத்துகள்:

  1. திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்...எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. திருத்தணிகை தலத்தின் திருப்புகழும் அதன் பொருளும் சிறப்பு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  3. திருத்தணி திருப்புகழ் படித்து முருகனை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..