நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், டிசம்பர் 13, 2023

தோள் பாரம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 27
 புதன் கிழமை

கருங்குன்றுகளைப் போன்ற யானைகள் தென் திசையில் இருந்து  பெரும் பெரும் பாறைகளை இழுத்து வந்து கொண்டிருக்க -

அந்தப்  பாறைகள்
கல் தச்சர்களது உளிகளின் கூர்மையினால் தம்முள் உறங்கிக் கிடந்த அற்புதங்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.. 

மும்முரமான பணிகளுக்கு இடையேயும்
பெருந் தச்சரான குஞ்சர மல்லரது திறமையைக் கண்டு ஏனைய பணியாட்கள் அதிசயித்துக் கொண்டிருந்தனர்..

ஒருபுறத்தில்,
நிலைக் கப்பிகளின் நுட்பத்தில் அங்குலம் அங்குலமாக கற்கள் மேலேற - ஸ்ரீ விமானம் வான் நோக்கி உயர்ந்து  கொண்டிருந்தது..

அவ்வேளையில் பாலகன் ஒருவன் காவு தடியின் இருபுறமும் கற்களைக் கட்டிக் கொண்டு சரிவான சாரத்தில் ஏறி நடக்க -   அதைக் கண்ணுற்ற சிலருக்கு வியப்பு..

நாற்பது ஐம்பது மல்லர்கள் கூடிச் செய்ய வேண்டிய கடினமான வேலையை சிறுவன் ஒருவன் மட்டும் தன்னந்தனியனாகச் செய்வதாவது!?..

வியப்பு மேலிட ஆரவாரக் கூச்சல் விண்ணை எட்டியது..

" யார்.. யாரது.. யாரப்பா நீ!?.. "

இதனால் திடுக்கிட்ட பெருந்தச்சர்கள் திரும்பிப் பார்த்தனர்.. 

கற்பாறைகளுடன் முண்டியடித்துக் 
கொண்டிருந்த யானைகளும் திரும்பிப் பார்த்தன..

பெரு மகிழ்ச்சியுடன் ஓங்காரமாகப் பிளிறின..

தோள் பாரம் கட்டியிருந்த சிறுவன் திரும்பினான்.. 

பால் வடியும் முகத்தில் புன்னகை அரும்பிய நேரத்தில் ஐந்து திருக்கரங்களுடன் சிவ களிறாகக் காட்சியளித்து மறைந்தான்..

" பிள்ளையார்..  பாரங்கட்டிப் பிள்ளையார்!.. தோள் பாரங்கட்டிப் பிள்ளையார்!.. "

ஆரவாரித்த மக்கள் தண்டனிட்டு வணங்கினர்..

இந்த அதிசயத்தை மாமன்னரிடம் தெரிவித்து விடவேண்டும் என்று அனைவரும் நினைத்துக் கொண்ட வேளையில் - அங்கே
கண்ட காட்சியானது அவர்களது கண்ணில் இருந்தும்  கருத்தில் இருந்தும் மறைந்து கொண்டிருந்தது..
***






அரைகுறை ராஜகோபுரம்

ஆக,
தோள் பாரங் கட்டிப் பிள்ளையார் - என்பதே,
தொப்பாரங்கட்டிப் பிள்ளையார் என்று மருவி இருக்கின்றது..

" நல்லாத் தான் கதை உடுறீங்க!.. "

" யாருங்க? இது இந்தச் சம்பவம் பொது வெளியில் அறியப்படாதது என்பதை உணர்ந்து கொள்க.. "

இங்கே சித்தர் வழிபாட்டில் உணரப்பட்டதாகும் இது..

எல்லாவற்றுக்கும் பிள்ளையாரே துணை!..

ஸ்ரீ ராஜராஜேஸ்வரப் பெருங்கோயிலை நோக்கியவாறு
பிள்ளையார்.. 

மேற்கு நோக்கி இருக்கும்
இந்தக் கோயிலின் வாசலில் இருந்தே நாணயக்கார செட்டித் தெரு தொடங்குகின்றது..

உயரமான இடத்தில் இருக்கும் இக்கோயிலின் வடக்குப் பக்கத்தில் - கருங்கல் கட்டுமானத்தில் ராஜகோபுரம் ஒன்று அரைகுறையாக நிற்கின்றது.. 

அதில் பெரிய கோயிலின் சிற்பங்களை ஒத்ததாக சில சிற்பங்கள் காணப்படுகின்றன..

பூட்டப்பட்டிருக்கின்ற கோயில் திறக்கப்படும் நேரம் சரியாகத் தெரியவில்லை..

அதிர்ஷ்ட வசமாக அன்று காலைப் பொழுதில் கதவுகள் திறந்திருக்க - 
மேலே படிகளேறிச் சென்றபோது பெண் ஒருவர் துப்புரவு செய்து கொண்டிருந்தார்.. 

அவரிடம் விசாரித்ததற்கு - " ஐயரு வர்ற நேரந்தாங்க கோயில் தெறந்திருக்கும்.."

ஐயர் எப்போ வருவா ர்?.. "

" அது தெரியாது.. இப்போ பூட்டப் போறேன்.. " - என்றார் ஆர்வம் ஏதுமின்றி..

எதிர்புறத்தில் பிரியாணிக் கடை மட்டும் காலைப் பொழுதிலேயே திறக்கப்பட்டிருக்க - வேறு சில கடைகள் பூட்டிக் கிடந்தன..

ஏதும் விவரக் குறிப்புகள் எழுதி வைக்கப்படாத நிலையில் யாரிடம்  கேட்பது?..

மறுமுறை தான் கோயிலின் அர்ச்சகரைப் பற்றி விசாரிக்க வேண்டும்..

வலம் செய்து வணங்கி விட்டு சில படங்களுடன் திரும்பினேன்..

மீண்டும் ஒரு நல்ல பொழுதினை - தோள்பாரம் கட்டிய பிள்ளையார் அருள்வாராக!..
**

ஓம் நம சிவாய 
சிவாய திருச்சிற்றம்பலம்
***

6 கருத்துகள்:

  1. அடடா...   கவனிக்கப்படாமலே போகிறது ஒரு திருக்கோவில்.  உள்ளே என்னென்ன இருக்கோ, என்னென்ன களவு போனதோ.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாருக்குத் தெரியும் அதெல்லாம்?..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. நிறைய கோவில்களுக்கு ஒரு குருக்கள் இருப்பார், அவர் வரும் நேரம் பூஜை ஆகும்.
    நன்றாக இருக்கிறது கோவில்.
    சித்தர் வாக்கும் கோவில் விவரமும் அருமை.
    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..