நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், டிசம்பர் 25, 2023

தமிழமுதம் 9

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 9
திங்கட்கிழமை

 குறளமுதம்

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.. 33
**

ஸ்ரீ கோதை நாச்சியார்
அருளிச் செய்த
திருப்பாவை


தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கு எரியத் தூமம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே மணிக் கதவம் தாள் திறவாய் மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மா மாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று  நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.. 9
**


தூய மணிமாடங்களில் விளக்குகள் ஒளியுடன் திகழ அத்துடன்,  தூபங்களும் நறுமணம் கமழ - படுக்கையில் கிடந்து
கண்களை மூடிக் கொண்டிருக்கும் எனது மாமன் மகளே!..
(சயன அறையின்)
 மணிக் கதவுகளைத் திறப்பாய்!..

மாமீ! அவளை எழுப்புங்களேன்.. உங்கள் மகள் ஊமையா? அல்லது செவிடா?.. 

மயக்கம் அடைந்திருப்பாளோ?.. அல்லது  நீண்ட நேரத்திற்கு உறங்கும்படி எவராவது மந்திரம் போட்டு விட்டார்களா?..

மாயனே, மாதவனே,
வைகுந்தனே என்று  இறைவனின் திருப்பெயர்கள் பலவற்றையும் சொல்லித் துதிப்பதற்கு அவளை எழுப்பி விடுவீர்களாக!..
**

திருப்பாசுரம்


ஊரிலேன் காணி இல்லை உறவு மற்றொருவர் இல்லை
பாரில்நின் பாத மூலம்  பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ணனே கண்ணனே கதறு கின்றேன்
ஆருளர்க் களைக ணம்மா அரங்கமா நகரு ளானே.. 900
-: தொண்டரடிப்பொடியாழ்வார் :-
**

சிவதரிசனம்
திருத்தாண்டகம்


நில்லாத நீர்சடைமேல் நிற்பித் தானை
    நினையாவென் நெஞ்சை நினைவித் தானைக்
கல்லா தனவெல்லாங் கற்பித் தானைக்
    காணா தனவெல்லாங் காட்டி னானைச்
சொல்லா தனவெல்லாஞ் சொல்லி யென்னைத்
    தொடர்ந்திங் கடியேனை யாளாக் கொண்டு
பொல்லாவென் நோய்தீர்த்த புனிதன் தன்னைப்
    புண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.. 6/43/1
-: திருநாவுக்கரசர் :-
**

திருப்பள்ளியெழுச்சி


விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே
கடலமுதே கரும்பே விரும் படியார்
எண்ணகத்தாய் உலகுக்கு உயிரானாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.. 9
-: மாணிக்கவாசகர் :-
**

திருவெம்பாவை
திருப்பாடல்கள் 15 - 16


ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்..

முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்.. 16
-: மாணிக்கவாசகர் :-
**

தொகுப்பிற்குத் துணை

நாலாயிர திவ்யப்ரபந்தம்
பன்னிரு திருமுறை,
தருமபுரம் ஆதீனம்..
**

ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

4 கருத்துகள்:

  1. "காரொளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன்... "   மனதைப் பிடிக்கும் வரி.  

    "ஆருளர்க் களைக ணம்மா அரங்கமா நகருளானே.."  கம்ப்ளீட் சரண்டர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.. இதற்கு மேல் வேறொன்றும் இல்லை..

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. தமிழமுதம் அருமை. பாசுரங்கள் மற்றும் அனைத்து பதிகம் பாடல்களை பாடி இறைவனை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..