நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், டிசம்பர் 20, 2023

தமிழமுதம் 4

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 4
புதன்கிழமை

 குறளமுதம்

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.. 5
*

ஸ்ரீ கோதை நாச்சியார்
அருளிச் செய்த
திருப்பாவை


ஆழி மழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகர்ந்து கொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!..4
**

திருப்பாசுரம்


குடதிசை முடியை வைத்துக்  குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித்  தென்திசை இலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுள் எந்தை  அரவணைத் துயிலுமா கண்டு
உடல்எனக்கு உருகுமாலோ  என்செய்கேன் உலகத்தீரே!.. 890
-: தொண்டரடிப்பொடியாழ்வார் :-
**

சிவதரிசனம்

திருத்தாண்டகம்


கற்பொலிதோள் சலந்தரனைப் பிளந்த ஆழி
கருமாலுக் கருள்செய்த கருணை யான்காண்
விற்பொலிதோள் விசயன்வலி தேய்வித் தான்காண்
வேடுவனாய்ப் போர்பொருது காட்டி னான்காண்
தற்பரமாந் தற்பரமாய் நிற்கின் றான்காண்
சதாசிவன்காண் தன்னொப்பா ரில்லா தான்காண்
வெற்பரையன் பாவை விருப்பு ளான்காண்
விண்ணிழி தண்வீழி மிழலை யானே.. 6/52/7
-: திருநாவுக்கரசர் :-
**

திருப்பள்ளியெழுச்சி

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.. 4
-: மாணிக்கவாசகர் :-
**

திருவெம்பாவை 
திருப்பாடல்கள் 5 - 6


மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்.. 5

மானேநீ நென்னலை நாளைவந் துங்களை
நானே யெழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்.. 6
-: மாணிக்கவாசகர் :-
**

தொகுப்பிற்குத் துணை

நாலாயிர திவ்யப்ரபந்தம்
பன்னிரு திருமுறை,
தருமபுரம் ஆதீனம்..
**

ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

12 கருத்துகள்:

  1. தமிழமுதை காபி குடித்த படியே பருகினேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தூய அமுதைப் பருகிப் பருகி, என் மாயப் பிறவி மயர்வறுத்தேனே என்ற பிரபந்தப் பாடல் நினைவுக்கு வந்தது

      நீக்கு
    2. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நெல்லை அவர்களுக்கு நன்றி..

      நீக்கு
    3. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. பாசுரங்களும் பதிகங்களும் அருமை. நீங்கள் சுருக்கமான அர்த்தத்தையும் பதிவு செய்யணும். உங்களுக்கும் அது நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முயற்சிக்கின்றேன்..

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி நெல்லை..

      நீக்கு
  3. இன்றைய தமிழமுதம் சிறப்பு.

    ஆழி மழைக்கண்ணா!! தெற்கு நிஜமாகவே தன் கையில் எதையும் ஒளித்து வைத்துக் கொள்ளாமல் ஊழி முதல்வனாகப் பொழிந்துவிட்டான்!! ஆழியில் புகுந்துவிட்டது போல ஆகியிருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// ஆழி மழைக் கண்ணன் நிஜமாகவே தன் கையில் எதையும் ஒளித்து வைத்துக் கொள்ளாமல் ஊழி முதல்வனாகப் பொழிந்துவிட்டான்.. ///

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  4. பிரபந்த பாடல்கள் , திருமுறைகள் படித்து இறைவனை வணங்கி கொண்டேன். மக்களை காப்பாற்ற வேண்டும் இயற்கையின் சீற்றத்திலிருந்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// மக்களை காப்பாற்ற வேண்டும் இயற்கையின் சீற்றத்திலிருந்து.///

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  5. ஆழிமலைக் கண்ணா படித்து இன்புற்று வணங்கினோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..