நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், டிசம்பர் 11, 2023

கார்த்திகை 4


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 
திங்கட்கிழமை
நான்காவது 
சோம வாரம்

திருத்தல தரிசனம்

திருக்கடவூர்


இறைவன்
ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர்
கால சம்ஹாரமூர்த்தி


அம்பிகை
ஸ்ரீ அபிராமவல்லி
பாலாம்பிகை

தல விருட்சம்
வில்வம் கொடி முல்லை
தீர்த்தம்
சூர்ய தீர்த்தம்

மார்க்கண்டேயர் வழிபட்டு என்றும் பதினாறு என வரம் பெற்ற திருத்தலம்..

வீரட்டானத் தலம்..
கால சம்ஹாரம் நிகழ்ந்ததால் யம பயம் நீங்குகின்ற தலம்..

அம்பிகை தனது தாடங்கத்தை - சுப்ரமணிய குருக்களுக்காக -  வானில் எறிந்து நிலவு என, ஒளிரச் செய்து அவரது உயிர் காத்த பெருமை உடையவள்..


ஏழாம் திருமுறை
 திருப்பதிக எண் 28

பொடியார் மேனியனே புரி
நூலொரு பாற்பொருந்த
வடியார் மூவிலைவேல் வள
ரங்கையின் மங்கையொடும்
கடியார் கொன்றையனே கட
வூர்தனுள் வீரட்டத்தெம்
அடிகேள் என்னமுதே எனக்
கார்துணை நீயலதே.. 1

பிறையா ருஞ்சடையாய் பிர
மன்தலை யிற்பலிகொள்
மறையார் வானவனே மறை
யின்பொரு ளானவனே
கறையா ரும்மிடற்றாய் கட
வூர்தனுள் வீரட்டத்தெம்
இறைவா என்னமுதே எனக்
கார்துணை நீயலதே.. 2

அன்றாலின் நிழற்கீழ் அறம் நால்வர்க் கருள்புரிந்து
கொன்றாய் காலனுயிர் கொடுத்தாய் மறை யோனுக்கு மான்
கன்றா ருங்கரவா கட
வூர்த்திரு வீரட்டத்துள்
என் தாதைபெருமான் எனக்
கார்துணை நீயலதே.. 3

போராருங் கரியின் உரி போர்த்துப் பொன் மேனியின்மேல்
வாரா ரும்முலையாள் ஒருபாக மகிழ்ந்தவனே
காரா ரும்மிடற்றாய் கடவூர்தனுள் வீரட்டானத்
தாரா என்னமுதே எனக்கார் துணை நீயலதே.. 4

மையார் கண்டத்தினாய் மதமா
உரி போர்த்தவனே
பொய்யா தென்னுயிருட் புகுந்
தாய் இன்னம் போந்தறியாய்
கையார் ஆடரவா கட
வூர்தனுள் வீரட்டத்தெம்
ஐயா என்னமுதே எனக்
கார்துணை நீயலதே.. 5

மண்ணீர் தீவெளிகால் வரு
பூதங்கள் ஆகிமற்றும்
பெண்ணோடாண் அலியாய்ப் பிறவா உரு ஆனவனே
கண்ணார் உண் மணியே கட
வூர்தனுள் வீரட்டத்தெம்
அண்ணா என்னமுதே
எனக் கார்துணை நீயலதே.. 6

எரியார் புன்சடைமேல் இளநாகம் அணிந்தவனே
நரியா ருஞ்சுடலை நகு
வெண்தலை கொண்டவனே
கரியார் ஈருரியாய் கட
வூர்தனுள் வீரட்டத்தெம்
அரியாய் என்னமுதே எனக்
கார்துணை நீயலதே.. 7

வேறா உன்னடியேன் விளங்குங் குழைக் காதுடையாய்
தேறேன் உன்னை அல்லாற் சிவனே என் செழுஞ்சுடரே
காறார் வெண்மருப்பா கடவூர்த் திரு வீரட்டத்துள்
ஆறார் செஞ்சடையாய் எனக்
கார்துணை நீயலதே.. 8

அயனோ டன்றியும் அடியும்முடி காண்பரிய
பயனே எம்பரனே பர
மாய பரஞ்சுடரே
கயமா ருஞ்சடையாய் கடவூர்த் திரு வீரட்டத்துள்
அயனே என்னமுதே எனக்
கார்துணை நீயலதே.. 9

காரா ரும்பொழில்சூழ் கடவூர்த் திரு வீரட்டத்துள்
ஏராரும் இறையைத் துணையா எழில் நாவலர்கோன்
ஆரூரன் அடியான் அடித்தொண்டன் உரைத்த தமிழ்
பாரோர் ஏத்தவல்லார் பரலோகத் திருப்பாரே.. 10
 -: சுந்தரர் :-


சுந்தரர்
திருவடிகள் போற்றி..

**

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

5 கருத்துகள்:

  1. அபிராமவல்லி தாயார் நம் அனைவரையும் காக்க பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  2. பதிகங்களை மிகவும் ரசித்துப் படித்தேன். என்ன தமிழ் என்ன தமிழ்.

    வீரட்டானம் என்றதும் என்னவோ கோமதி அரசு மேடம் நினைவு வந்துபோனது.

    பதிலளிநீக்கு
  3. சுந்தரர் தேவாரம் படித்து அபிராமிவல்லி, அமிர்தகட்டேஸ்வரரை வணங்கி கொண்டேன். நெல்லைக்கு என் நினைவு வந்தது போல எனக்கும் திருக்கடையூர் நினைவுகள் வந்தது.

    திருக்கடையூர் பல நினைவுகளை அள்ளி வழங்கிய இடம்.
    அடிக்கடி தரிசனம் செய்த கோவில்.

    பதிலளிநீக்கு
  4. ஓம் நம சிவாய
    சிவாய நம ஓம்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..