நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், டிசம்பர் 19, 2023

தமிழமுதம் 3

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 3
செவ்வாய்க்கிழமை

 குறளமுதம்

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.. 4
*
ஸ்ரீ கோதை நாச்சியார்
அருளிச் செய்த
திருப்பாவை


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
        நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
        தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
        ஓங்குபெருஞ் செந்நெல் ஊடுகயல் உகள
        பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
        தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
        வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
        நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்!.. 3
**
திருப்பாசுரம்


விரும்பி நின் றேத்த மாட்டேன் விதியிலேன் மதியொன்றில்லை 
இரும்புபோல் வலிய நெஞ்சம் இறையிறை உருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டென் கண்ணினை களிக்கு மாறே!.. 888
-: தொண்டரடிப்பொடியாழ்வார்:-
**

சிவதரிசனம்

திருத்தாண்டகம்


பேராயிரம்பரவி வானோர் ஏத்தும்   
    பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்  
வாராத செல்வம் வருவிப் பானை  
    மந்திரமுந் தந்திரமும் மருந்தும் ஆகித்  
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்  
    திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைக் கொண்ட  
போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்  
    போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.. 6.54.8  
-: திருநாவுக்கரசர் :-
**

திருப்பள்ளியெழுச்சி


கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை யொளிஒளி உதயத்
தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.. 3
-: மாணிக்கவாசகர் :-
**

திருவெம்பாவை
திருப்பாடல்கள் 3 - 4


முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன்என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.. 3

ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.. 4
-: மாணிக்கவாசகர் :-
**

தொகுப்பிற்குத் துணை

நாலாயிர திவ்யப்ரபந்தம்
பன்னிரு திருமுறை,
தருமபுரம் ஆதீனம்..
**

ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

6 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ஓம் ஹரி ஓம்
      நம சிவாய..

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. பாசுரங்கள் , திரித்தாண்டகம், திருப்பள்ளியெழுச்சி பாடல்களை பாடி இறைவனை வணங்கி கொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  3. இன்றைய தமிழமுதம் குறளமுதம், பாசுரங்கள் அனைத்தும் சிறப்பு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..