நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஏப்ரல் 28, 2024

சப்த ஸ்தானம் 3


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 15
ஞாயிற்றுக்கிழமை


சித்திரை 13 வெள்ளிக்கிழமை
அன்று (26/4) திரு ஐயாறு சப்த ஸ்தானப் பெருவிழாவின் இரண்டாம் நாள்.. திரு நெய்த்தானத்தில் தரிசனம்..

மேலை வானில் இறங்குகின்ற வரையில் தகித்துக் கொண்டிருந்தது வெயில்.. நிழல் மரங்கள் அகற்றப்பட்டுவிட்ட
சூழ்நிலையை அனுசரித்து முன்னிரவுப் போதில் பல்லக்குகள் அனைத்தும் சிவாலய தீப ஆராதனைக்குப் பின் திரு ஐயாறு நோக்கிப் புறப்பட்டன.. 

வழி நெடுக எட்டுப் பல்லக்குகளுக்கும் அர்ச்சனை ஆராதனை செய்து மகிழ்ந்தனர் மக்கள்..

பல்லக்குகளின் தரிசனம் இன்றைய பதிவில்..

படங்கள் : தஞ்சையம்பதி

காணொளி:
ஸ்ரீ கோரக்கர் வழிபாட்டு மன்றம், தஞ்சாவூர்..

















காணொளி வழங்கியவர் தமக்கு 
நெஞ்சார்ந்த நன்றி..

மையாடிய கண்டன்மலை மகள்பாகம துடையான்
கையாடிய கேடில்கரி உரிமூடிய ஒருவன்
செய்யாடிய குவளை மலர் நயனத்தவ ளோடும்
நெய்யாடிய பெருமான் இடம் நெய்த்தானம் எனீரே.. 1/15/1
-: திருஞானசம்பந்தர் :-
*

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

5 கருத்துகள்:

  1. தேர்த்திருவிழா படங்கள் சிறப்பு. காணக் கொடுத்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. பல்லக்கு தரிசனம் அருமை.
    படங்கள் எல்லாம் அருமை.
    சப்தஸ்தானம் விழா படங்களை வழங்கிய ஸ்ரீ கோரக்கர் வழிபாட்டு மன்றத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    அருமையான பதிவு. திரு. நெய்தான கோவில் கோபுர தரிசனமும், பல்லக்குகளின் தரிசனமும் பெற்று மகிழ்ந்தேன். பல்லக்கு படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. இறைவன் அனைவரையும் நலமுடன் காக்க வேண்டிக் கொள்கிறேன். இந்த இனிய பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. பல்லக்கு தரிசனங்கள் கண்டு வணங்கினோம்.
    " நெய்யுடன் பெருமான் இடம் நெய்தானம் எனீரே"

    பதிலளிநீக்கு
  5. ஓம் நமசிவாய
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..