நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஏப்ரல் 10, 2024

வயல் 2

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 28
புதன்கிழமை


வயல் என்ற வார்த்தை மங்கலத்துடன் தேவாரத்தில் பொதிந்திருக்கும் பற்பல பாடல்களுள்  ஞானசம்பந்தப் பெருமான் அருளிச்செய்த சில பாடல்களை நேற்று சிந்தித்தோம்..


அந்த வழியில் -  திருநாவுக்கரசர் அருளிச்செய்த சில பாடல்களை இன்று சிந்திப்போம்..

தில்லை


பாளையுடைக் கமுகு ஓங்கிப்பன் மாடம் நெருங்கி எங்கும்
வாளையுடைப்புனல் வந்தெறி வாழ்வயல் தில்லைதன்னுள்
ஆளவுடைக்கழற் சிற்றம் பலத்தரன் ஆடல்கண்டாற்
பீளையுடைக்கண்க ளாற்பின்னைப் போய்த் தொண்டர் காண்பதென்னே. 4/80/1

திரு அதிகை
வீரட்டானம்

ஆரட்டதேனும் இரந்துண்டு அகம் அகவன் திரிந்து
வேரட்ட நிற்பித் திடுகின்றதால் விரி நீர்பரவைச்
சூரட்ட வேலவன் தாதையைச் சூழ் வயலார் அதிகை
வீரட்டத்தானை விரும்பா வரும்பாவ வேதனையே. 4/104/5

திருக்கோழம்பம்

முன்னை நான்செய்த பாவ முதலறப்
பின்னை நான் பெரிதும் அருள் பெற்றது
அன்னமார் வயல் கோழம்பத்துள் அமர்
பின்னல் வார் சடையானைப் பிதற்றியே.  5/64/7

திருமணஞ்சேரி

துள்ளு மான் மறி தூமழு வாளினர்
வெள்ள நீர் கரந்தார் சடை மேலவர்
அள்ளலார் வயல்சூழ் மணஞ்சேரி எம்
வள்ளலார் கழல் வாழ்த்தல் வாழ்வாவதே.. 5/87/5

திருவலம்புரம்


மண்ணளந்த மணிவண்ணர் தாமும் மற்றை
மறையவனும் வானவரும் சூழ நின்று
கண்மலிந்த திருநெற்றி யுடையார் ஒற்றை
கதநாகங் கையுடையார் காணீரன்றே
பண்மலிந்த மொழியவரும் யானுமெல்லாம்
பணிந்திறைஞ்சித் தம்முடைய பின்பின் செல்ல
மண்மலிந்த வயல்புடைசூழ் மாடவீதி
வலம்புரமே புக்கங்கே மன்னினாரே.. 6/58/1

திருப்புன்கூர்

கையுலாம் மூவிலை வேல் ஏந்தினாருங்
கரிகாட்டில் எரியாடுங் கடவுளாரும்
பையுலாம் நாகங்கொண்டு ஆட்டுவாரும்
பரவுவார் பாவங்கள் பாற்றுவாரும்
செய்யுலாங் கயல்பாய வயல்கள் சூழ்ந்த
திருப்புன்கூர் மேவிய செல்வனாரும்
மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்தாரும்
வெண்ணியமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.. 6/59/3
**
தேடலில் துணை
பன்னிரு திருமுறை
தருமபுர ஆதீனம்

இத்தகைய வளங்கள் தான்
நிறைவும் நிம்மதியும்..

வயலே வாழ்வு
வாழ்வே வயல்!..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

6 கருத்துகள்:

  1. அருமை.  எப்படி இவற்றைத் தொகுக்கிறீர்கள்?  நினைவிலிருந்தா?  இத்தனை பாடல்களில் வயல் சார்ந்த பாடல்கள் என்பதை  எப்படிப் பிரிக்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தருமபுர ஆதீன பதிப்பில் இருந்தே தகவல்களை சேகரிக்கின்றேன்..

      ஒரு சில மட்டுமே நினைவில்..

      தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. திருநாவுக்கரசர் பாடல்களில் வபல் தொகுப்பு படித்து அறிந்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. ஒவ்வொரு ஊர் சிவாலயங்களுக்கேற்ப வயல் பற்றி வரும் தேவார பாடல்களின் தொகுப்பு நன்றாக உள்ளது. பாடல்களை தேடி கண்டு பிடித்து தரும் தங்கள் உழைப்பு கண்டு பிரமிக்கிறேன். உங்கள் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள். . பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// உங்கள் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள்.///

      தங்களது அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி..
      நன்றி ....

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..