நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஆகஸ்ட் 28, 2024

திருச்செந்தில்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 12 
புதன் கிழமை

திங்கள் பிற்பகல் மூன்றரை மணியளவில் திருச்செந்தூர் சந்நிதி தரிசனம்..

செவ்வாயன்று
உவரியில் குல தெய்வத்தின் தரிசனம்.. 
இவ்வருடமும் திருவிழா நடத்தப் பெறவில்லை..

குடும்ப விசேஷமாக
அபிஷேக அலங்கார ஆராதனைகள்..
***

தலம்
திருச்செந்தூர்


தானத் தானன தானத் தானன 
தானத் தானன ... தந்ததான

சேமக் கோமள பாதத் தாமரை
சேர்தற் கோதும ... நந்தவேதா

தீதத் தேயவி ரோதத் தேகுண 
சீலத் தேமிக ... அன்புறாதே

காமக் ரோதவு லோபப் பூதவி
காரத் தேயழி ... கின்றமாயா

காயத் தேபசு பாசத் தேசிலர்
காமுற் றேயும ... தென்கொலோதான்

நேமிச் சூரொடு மேருத் தூளெழ 
நீளக் காளபு ... யங்ககால

நீலக் ரீபக லாபத் தேர்விடு 
நீபச் சேவக ... செந்தில்வாழ்வே

ஓமத் தீவழு வார்கட் கூர்சிவ 
லோகத் தேதரு ... மங்கைபாலா

யோகத் தாறுப தேசத் தேசிக 
வூமைத் தேவர்கள் ... தம்பிரானே..
-: அருணகிரிநாதர் :-


மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
   வைதாரையும் அங்கு வாழ வைப்போன் வெய்ய வாரணம் போல்
      கைதான் இருப துடையான் தலைப்பத்துங் கத்தரிக்க
         எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே.. 22

பால் என்பதுமொழி பஞ்சென் பதுபதம் பாவையற்கண்
சேல் என்பதாகத் திரிகின்ற நீ செந்திலோன் திருக்கை வேல் என்கிலை கொற்ற மயூரம்  என்கிலை வெட்சித்தண்டைக்
கால் என்கிலை மனமே எங்ஙனே முத்தி காண்பதுவே.. 30
-: கந்தர் அலங்காரம் :-


காளைக் குமரேசன் எனக் கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளைச் சுர பூபதி, மேருவையே.. 22

எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்
கந்தா கதிர் வேலவனே உமையாள்
மைந்தா குமரா மறை நாயகனே.. 46

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.. 51
 -: கந்தர் அனுபூதி :-


முருகா முருகா
முருகா முருகா

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

4 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. அழகான படங்கள். தங்களுக்கு திருச்செந்தூர், மற்றும் குலதெய்வ வழிபாடு கிடைத்தது குறித்து மகிழ்வடைந்தேன். உங்களால் எங்களுக்கும் திருச்செந்திலாண்டவன் தரிசனம் கிடைக்கப் பெற்றது.
    முருகா சரணம்.
    முத்துக் குமரா சரணம். சரணம். என்றுக்கூறி பாடல்களை பாடி அவனை சரணடைகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. நான் இன்னும் திருச்செந்தூர் சென்றதில்லை.  முற்றிய வினைகள் தீர முருகனைக் கும்பிட்டு முறையிடவேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. திருச்செந்தூர் மற்றும் உவரியில் தரிசனம்... ஆஹா... மகிழ்ச்சி. எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் நல்லதையே அளிக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  4. திருச்செந்தூர் தரிசனம் பெற்றோம்.
    முருகா சரணம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..