தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டொழிந்தேன் நுன்னைக் காண்பதோர் ஆசையினால்
வேயேய் பூம்பொழில் சூழ் விரையார் திருவேங்கடவா
நாயேன் வந்தடைந்தேன் நல்கி ஆள் என்னைக் கொண்டருளே..1028
மானேய் கண் மடவார் மயக்கில் பட்டு மா நிலத்து
நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்
தேனேய் பூம்பொழில் சூழ் திருவேங்கட மா மலை
என் ஆனாய் வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே.. 1029
குலம் தான் எத்தனையும் பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன்
நலம் தான் ஒன்றுமிலேன் நல்லதோர் அறம் செய்துமிலேன்
நிலம் தோய் நீள் முகில் சேர் நெறியார் திருவேங்கடவா
அலந்தேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே.. 1031
தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்துமிட்டேன்
பெரியேன் ஆயினபின் பிறர்க்கே உழைத்து ஏழை ஆனேன்
கரிசேர் பூம்பொழில் சூழ் கனமா மலை வேங்கடவா
அரியே வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே.. 1034
-: திருமங்கையாழ்வார் :-
நன்றி
நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்
பெருமாளே ஏன்னை மட்டுமல்ல, எல்லோரையும் காப்பாத்து.
பதிலளிநீக்குபெருமாளே..
நீக்குகோவிந்தா..
மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
வெங்கடேசா சரணம்.
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி மாதேவி..
பிரபந்த பாடலை பாடி வேங்கடவனை வணங்கி கொண்டேன்.
பதிலளிநீக்குகாணொளி வரவில்லை எனக்கு.
மகிழ்ச்சி..
பதிலளிநீக்குநன்றி..
எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் நல்லதையே நல்க எனது பிரார்த்தனைகளும். காணொளி மெதுவாக பார்க்கிறேன்.
பதிலளிநீக்கு