நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 11
செவ்வாய்க்கிழமை
திருச்செந்தூரில் தரிசனம்..
செந்தில் நாதன் வழிகாட்டுகின்றான்...
ஊருக்குத் திரும்பிய பிறகே திருச்செந்தூர் காட்சிகள்...
அதுவரையிலும் திருப்புகழ் கந்தர் அலங்காரம், அநுபூதிப் பாடல்களில் மகிழ்ந்திருங்கள்..
தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந்
தந்ததன தந்தனந் ... தந்ததானா
தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
தண்கழல்சி லம்புடன் ... கொஞ்சவேநின்
தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
சந்தொடம ணைந்துநின் ... றன்புபோலக்
கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்
கஞ்சமலர் செங்கையுஞ் ... சிந்துவேலும்
கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்
கண்குளிர என்றன்முன் ... சந்தியாவோ..
புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்
பொங்கியெழ வெங்களங் ... கொண்டபோது
பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்
புண்டரிகர் தந்தையுஞ் ... சிந்தைகூரக்
கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்
கொஞ்சிநட னங்கொளுங் ... கந்தவேளே
கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்
கும்பமுநி கும்பிடுந் ... தம்பிரானே..
-: அருணகிரிநாதர் :-
சேல் பட்டழிந்தது செந்தூர் வயற் பொழில் தேங் கடம்பின்
மால் பட்டழிந்தது பூங்கொடியார் மனம் மா மயிலோன்
வேல் பட்டழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
கால் பட்டழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே.. 40
ஆலுக் கணிகலம் வெண்டலை மாலை அகிலமுண்ட
மாலுக் கணிகலந் தண்ணந் துழாய்மயி லேறுமையன்
காலுக் கணிகலம் வானோர் முடியுங் கடம்புங்கையில்
வேலுக் கணிகலம் வேலையுஞ் சூரனும் மேருவுமே.. 62
கந்தர் அலங்காரம்
கார்மா மிசை காலன் வரில் கலபத்
தேர்மா மிசை வந்தெ திர்ப் படுவாய்
தார் மார்ப வலாரி தலாரி எனும்
சூர்மா மடியத் தொடுவே லவனே.. 10
முருகன் குமரன் குகன் என்று மொழிந்து
உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய்
பொரு புங்கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண் குண பஞ்சரனே.. 15
உதியா மரியா உணரா மறவா,
விதி மால் அறியா விமலன் புதல்வா
அதிகா அநகா அபயா அமரா
பதி காவல சூர பயங்கரனே.. 18
-: கந்தர் அனுபூதி :-
முருகனை வணங்கி மகிழ்கிறேன்.
பதிலளிநீக்குதிருச்செந்தூர் முருகன் அனைவருக்கும் நல்லதையே நல்கட்டும்.
பதிலளிநீக்குதிருப்புகழ் கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி படித்து முருகனை வணங்கி கொண்டேன்.
பதிலளிநீக்குஉங்களுக்கு திருச்செந்தூர் , உவரி தரிசனம் நல்லபடியாக நடந்து இருக்கும்.
கடலோரம் அழகிய ஆலயத்தில் அமர்ந்து அருளும் , முருகா அனைவரையும் காக்க வேண்டுகிறோம்.
பதிலளிநீக்கு