நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஆகஸ்ட் 09, 2024

ஆடி வெள்ளி 4


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி வெள்ளி
நான்காம் கிழமை

மயிலை
ஸ்ரீ கற்பகவல்லி கீர்த்தனம்



பூரணி மனோன்மணி தயாபரி பராபரி
புராதனி தராதலம் எலாம்
பொற்புடன் அளித்த சிவசக்தி இமவானுதவு
புத்ரி மகமாயி என்றே
சீரணி தமிழ்க்கவிதை பாடி முறையிடுவதுன்
செவிதனிற் கேறவிலையோ?
தேஹி என்றாலுனக்கு ஈயவழி இல்லையோ
தீனரக்ஷகி அல்லையோ..
ஆருலகினிற் பெற்ற தாயன்றி மக்கள்தமை
ஆதரிப்பவர் சொல்லுவாய்..
அன்னையே இன்னமும் பராமுகம் பண்ணாமல்
அடியனை ரக்ஷி கண்டாய்..
மேருவை வளைத்தவனிடத்தில் வளரமுதமே
விரிபொழிற் திருமயிலை வாழ்
விரைமலர்க்குழல் வல்லி மறைமலர்ப்பத வல்லி
விமலி கற்பகவல்லியே.. 1/10
**



Fb Reel வழியாக இப்பாடல் கிடைத்தது.. 

மேலும் தேடியபோது கற்பகவல்லி  பதிகம் என்று பனுவல் ஒன்று திருமயிலை கோயிலில் அம்மன் திருச்சுற்றில் பதிக்கப்பட்டுள்ளதாக விவரங்கள் கிடைத்தன.. இப்பதிகத்தினை இயற்றிய புண்ணியர் யாரென்று 
தெரியவில்லை..

ஓம் சக்தி ஓம் 
ஓம் சிவாய நம ஓம்
***

8 கருத்துகள்:

  1. கற்பகவல்லியை வணங்கி கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கற்பகமே போற்றி..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. பதில்கள்
    1. ஓம் சக்தி ஓம்

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
      நன்றி வெங்கட்..

      நீக்கு
  3. ஆடி வெள்ளிநாளில் மயிலை கற்பகவல்லி பதிகப் பகிர்வு நன்று.

    கற்பகாம்பாள் அருளை வேண்டுகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓம் சக்தி ஓம்

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
      நன்றி மாதேவி..

      நீக்கு
  4. கற்பகவல்லி கீர்த்தனம் பாடுவது சற்குரு ஓதுவார். மயிலை கோவிலில் பணிபுரிபவர்.
    கற்பகவல்லி பதிகம் பாடலை இயற்றிய பெண்மணியை பற்றி காஞ்சி பெரியவர் பேசிய காணொளி கேட்டேன், அவர் பெயர் மறந்து விட்டது. அந்த அம்மாவுக்கு அவர் ஒரு பெயர் சூட்டினார். மீண்டும் கிடைத்தால் சொல்கிறேன். அவர் நீண்ட காலம் அருள்மிகு கற்பகாம்பாள் திருக்கோயிலில் தொண்டாற்றிய பெண்மணி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேல் விவரங்கள் சிறப்பு..
      ஓம் சக்தி ஓம்

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
      நன்றி ..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..