நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூன் 28, 2024

திருப்புகழ்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 14  
வெள்ளிக்கிழமை

திருப்புகழ்
-: பொது :-


தன்னன தனதன தன்னன தனதன
தன்னன தனதன ... தனதான

கன்னியர் கடுவிட மன்னிய கயலன
கண்ணிலு மிருகன ... தனமீதுங்

கன்மைகள் மருவிய மன்மத னுருவிலி
மென்மைகொ ளுருவிலு ... மயலாகி

இன்னல்செய் குடிலுட னின்னமு முலகினி
லிந்நிலை பெறவிங ... னுதியாதே

யெண்ணுமு னடியவர் நண்ணிய பதமிசை
யென்னையும் வழிபட ... விடவேணும்

பொன்னவ மணிபயில் மன்னவ புனமற
மின்முலை தழுவிய ... புயவீரா

புண்ணிய முளபல விண்ணவர் தொழுமுதல்
எண்மலை யொடுபொரு  ... கதிர்வேலா

தன்னிறை சடையிறை யென்முனி பரவரு
இன்னிசை யுறுதமிழ் ... தெரிவோனே

தண்ணளி தருமொரு பன்னிரு விழிபயில்
சண்முக மழகிய ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


நஞ்சுடைய மங்கையரின்
கயற் கண்களிலும் தனங்களிலும்

கல் மனத்தனும் உருவமிலாதவனும் ஆகிய  
மன்மதனின் மலரம்புகளினால்

காமம் கொண்டு துன்பப்படுகின்ற 
அவல நிலையில் மீண்டும் நான் பிறவாமல்,

உன்னைத் தியானித்து உனது திருவடியில் 
வழிபாடு செய்கின்ற அடியார்களைப் போல 
என்னையும்  நன்னெறியில் 
செலுத்த வேண்டுகிறேன்...

பொன் முதலாய நவ மணிகளையும் அணிந்துள்ள மன்னவனே.. 
தினைப் புனத்தில்  வேடர் குலக்கொடி 
வள்ளி நாயகியின் தனங்களைத் 
தழுவிய மாவீரனே...

புண்ணியத்துடன் சுவர்க்கத்தில் 
தேவர்கள் பலரும் தொழுது நிற்கின்ற 
முதல்வனே..

கிரவுஞ்ச மலையொடு
அசுரர்க்கு அரணான நின்ற 
ஏழு மலைகளையும் தூளடித்த 
கதிர்வேலவனே..

 தனக்குத் தானே தலைவன் ஆகி - 
சடா முடியுடைய சிவபெருமானின் 
புகழினைப் பாடுதற்கு இன்னிசை தந்த 
ஞானசம்பந்தப் பெருமானாக 
வந்தருள் செய்தவனே..

தண்னருள் புரிகின்ற 
பன்னிரு திருவிழிகளை உடையவனே.. 
எங்கள்  பெருமானே!..
**

முருகா முருகா
முருகா முருகா

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

4 கருத்துகள்:

  1. மயில்வாகனனே..  எண்களைக் காத்தருள மனமுருகி வேண்டுகிறோம். 

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் நல்லதையே அருளட்டும்.

    திருப்புகழ் இனிமை.

    பதிலளிநீக்கு
  3. ஓம் நமசிவாய
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  4. திருப்புகழ் பாடி பன்னிரு கையானை வணங்கினோம்.
    முருகா சரணம்.

    நேற்று பேரன் முருகன் மாம்பழம் பெற்ற காட்சி பார்க்கக் கேட்டு "திருவிளையாடல் படத்தில் அக் காட்சி காட்டினோம் பார்த்தார் படம் முழுவதும் பார்க்க பொறுமை இல்லை. இதுவாவது பார்த்தாரே என மகிழ்ந்தோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..