நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜூன் 27, 2024

பெரிதினும் பெரிது..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 13  
வியாழக்கிழமை


தஞ்சை ராஜராஜேஸ்வரத்தின் இரண்டாவது ராஜ கோபுரமாகிய ராஜராஜன் திருவாயிலில் வழக்கம் போல வட, தென் புறங்களில் பிரம்மாண்டமான துவாரபாலகர்கள்.. 
இப்படி - தென்புறத்தில்
அமைந்துள்ள துவார பாலகருடைய கதாயுதத்தைக் கவனியுங்கள்..


இரு நான்கு திசைகளிலும் தேடிப் பார்த்தாயிற்று.. இறைவனை விடப் பெரியவன் என்று எவரையும் காணோம்!... - என்று சொல்லாமல் சொல்லுரைக்கும் துவாரபாலகர்.


வலிமையுடையது யானை.. அந்த யானையை அதை விட வலிமையுள்ள பாம்பு ஒன்று விழுங்க - அந்தப் பாம்பினை இவர் தனது கதாயுதத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறார்... இப்படி ஆனை விழுங்கியைக் கையாளும் இவரது பராக்கிரமம் தான் என்ன?... இத்தகைய துவாரபாலகரைப் பராமரிக்கும் இவரது தலைவனாகிய இறைவனின் கீர்த்திதான் என்ன!?..


இப்படியாகிய இறைவன் தான் அங்கே திரு மூலத்தானத்தில் குடி கொண்டுள்ளார்...


இறைவனை விடப் பெரியவர் எவரும் இல்லை என்ற ஒன்றினை மட்டும் மனதில் வைத்து நடந்து கொள்ளுங்கள்!.. 
- என்று அறிவுடன் அறமும் உரைத்து நிற்கின்றார்...

நமது பதிவு 2019 ல்..

தொடர்ந்து -
சிவத்திரு சிவாக்கர தேசிக ஸ்வாமிகளின் அருளுரையைக் கேளுங்கள்..


 நன்றி.. நன்றி..
**

அரியானை அந்தணர்தம் சிந்தை யானை
 அருமறையின் அகத்தானை அணுவை யார்க்குந்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
 திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
 கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
 பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.. 6/1/1
-: திருநாவுக்கரசர் :- 

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

12 கருத்துகள்:

  1. ப்ரம்ம முராரி சுரார்ச்சித லிங்கம் 
    நிர்மல பாஷித சோபித லிங்கம் 
    ஜன்மஜ  துக்க விநாசக லிங்கம் 
    தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓம் நம சிவாய
      சிவாய நம ஓம்..

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. துரை அண்ணா, படங்கள் மிக அருமையாக வந்திருக்கு. ரொம்ப அழகா எடுத்திருக்கீங்க! ரசித்தேன்

    ஆம் அந்த மாபெரும் சக்தியை விடப் பெரிது எதுவுமே இல்லை!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓம் நம சிவாய
      சிவாய நம ஓம்..

      மகிழ்ச்சி..
      நன்றி சகோ...

      நீக்கு
  3. படங்களும் தகவல்களும் சிறப்பு. எல்லாம் வல்லவன் இறைவன் மட்டுமே என்பதை உணர்ந்தால் அனைவருக்கும் நல்லதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி வெங்கட்

      நீக்கு
  4. ஓம் நமசிவாய
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓம் நமசிவாய
      வாழ்க வையகம்

      மகிழ்ச்சி..
      நன்றி ஜி..

      நீக்கு
  5. துவாரபாலகர்களின் படங்கள் மற்றும் எல்லாப் படங்களும் தகவல்களும் சிறப்பு. துவாரபாலகர்களின் படத்துடனான கருத்தும் மிக அருமை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி துளசி

      நீக்கு
  6. பதிவும் , காணொளியும் அருமை. அருளரை நன்றாக இருக்கிறது.
    நாவுக்கரசர் பாடலை பாடி எல்லாம் வல்ல இறைவனை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  7. அற்புதமான சிலைகளும் இறை விளக்கமும்.

    இந்த துவாரகாபாலர்கள் படங்கள் நாங்களும் தஞ்சை வந்திருந்தபோது எடுத்திருந்தோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..