நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜூன் 01, 2024

நவநீத சேவை 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 19  
சனிக்கிழமை


திவய தேசமாகிய தஞ்சை மாமணிக் கோயிலில் திருமங்கை ஆழ்வாருக்கு ஸ்ரீமந் நாராயணன் கருட வாகனத்தில் ப்ரத்யட்சமாகிய நாள் வைகாசி திரு ஓணம்.. 

அந்த வைபவத்தை  அனுசரித்து  தஞ்சை திவ்ய தேசத்தில் ஆதி நாளில் நிகழ்ந்த கருட வாகன சேவை கால சூழ்நிலையில் தடைபட்டுப் போனது.. 

தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன் கருடாழ்வார் எனப்பட்ட மகான் ஒருவரால் இவ்வைபவம் மீட்டெடுக்கப்பட்டது... 

அப்போது பன்னிரு கருட சேவை என நிகழ்ந்ததால் துவாதச கருடாழ்வார் எனப்பட்டார்..

அந்த வைபவம் பின் நாட்களில் சிறிது சிறிதாக விரிவடைந்து இன்றைக்கு இருபத்தைந்து திருக்கோயில்களின் ஒருங்கிணைந்த விழாவாக பரிணமித்துள்ளது...  

கடந்த புதனன்று (வைகாசி 16) தஞ்சையில் இருபத்தைந்து 
கருடசேவை மகோன்னதமாக நடைபெற்றது..

இவ்விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அன்பர்கள் கலந்து கொண்டு இருபத்தைந்து கருட வாகனங்களைத் தரிசித்து அக மகிழ்ந்தனர்..

தொடர்ந்து வியாழனன்று ( வைகாசி 17) அன்று பதினைந்து நவநீத சேவை ராஜ வீதிகளில் நிகழ்ந்தது.. 

வைபவத்தின் சில காட்சிகள் இன்றைய பதிவில்..



ஸ்ரீ நீலமேகப்பெருமாள்






















மேலும் படங்கள் அடுத்தடுத்த பதிவுகளில்

கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்  
கருத்துளே திருத்தினேன் மனத்தை
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை 
பெரு நிலத்து ஆருயிர்க்கு எல்லாம்
செற்றமே வேண்டித் திரிதர்வேன் தவிர்ந்தேன்  
செல்கதிக்கு உய்யுமாறு எண்ணி
நற்றுணை ஆகப் பற்றினேன் அடியேன்  
நாராயணா என்னும் நாமம்.. 955 
-: திருமங்கையாழ்வார் :+

ஓம் ஹரி ஓம்
 நமோ நாராயணாய
***

2 கருத்துகள்:

  1. மீட்டெடுக்கப்பட்ட விழாவின் படங்களை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. நவநீத சேவை காட்சிகள் அனைத்தும் நன்று.

    ஓம் ஹரி ஓம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..