நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜூன் 13, 2024

நிறங்கள்


நாடும்  வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 31
வியாழக்கிழமை



" நிறங்களோர் ஐந்துடையாய் எம்பெருமான்.. " - என்று மாணிக்கவாசகர் போற்றுகின்றார்..

நாம் வாழ்கின்ற
வாழ்க்கையும் வண்ணங்களை உடையது.. 

இப்படியான வாழ்க்கையின்
வண்ணங்களுக்குள் இன்றைய அறிவியல் 
உணவின் வழியாக 
நுழைந்து அவற்றை ஆபத்தானவைகளாக மாற்றி விட்டது..


நம் நாட்டில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்ட  மசாலா பொருட்களுக்கு ஏதேதோ காரணங்களால் -

சிங்கப்பூர், ஹாங்காங்  
மற்றும் சில ஐரோப்பிய  நாடுகள் தடை விதித்துள்ளதெல்லாம் பழைய கதை.. 

அவற்றைப் பற்றி விவரமாக அறிந்திருப்பீர்கள்..


சர்வதேச அளவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிறங்கள் - brilliant blue, indigo, green, erithroclne, red, tartrazine, sunset yellow, citrus red, orange..

வெளிநாடுகளில்  - இவை பல்வேறு நிலைகளில் தரப் பரிசோதனைக்கு உள்ளாகின்றன.. 

இவற்றுக்கும் பயன்பாட்டிற்கான கால அளவு நிர்ணயிக்கப்பட்டு  முழுமையாகக் கண்காணிக்கப்படுகின்றது.. 

நடைமுறை மீறப்படும் போது - மிகக் கடுமையான தண்டனைகள்..


இங்கே இப்படியெல்லாம் இருக்கின்றதா.. 
தெரியவில்லை.. 

தெருவோர உணவுக் 
கடைகளையும் -

Preservatives 
Bread Improvers, Artificial color, Smell & Essence நிறைந்த உணவுகளையும்,


பல்வேறு ரசாயன மூலக்கூறுகள் கலந்துள்ள உணவுகளையும்
சாப்பிடுவதை முழுதாக மறந்து விடுவதே சாலச் சிறந்தது..


Preservatives
Bread Improver
Artificial flavour (Aroma)
Synthetic food colours

- என்றெல்லாம் கூகிளில் தேடிப் பார்த்தால் நிறைய விஷயங்கள் காத்திருக்கின்றன..

பதிவில் சொல்வதற்கு மிகவும் தயக்கமாக இருக்கின்றது..

விரும்பினால் - அவரவரும் தேடித் தெரிந்து கொள்ளுங்கள்..



பாமரர்களும் உழைப்பாளிகளும் பசிக்கொடுமைக்காக உண்ணுகின்ற உணவுகளுக்குள் கெட்டுப் போன இறைச்சிகளையும் ஆபத்தை விளைவிக்கின்ற மசாலாக்களையும் கலக்கின்ற உள்ளூர் விஞ்ஞானிகள் நிறைந்த நாடு நம்முடையது..

இப்படியானவைகளில் இருந்து தெளிவு பெற்று,
உங்களை - நீங்களே காத்துக் கொள்ளுங்கள்.. 

இந்தப் பதிவு தொகுக்கப்பட்ட பின்னர் கிடைத்த காணொளி இது..


அனுப்பியவர்
திரு. நவநீதன்
ஸ்ரீ கோரக்கர் வழிபாட்டுக் குழு

உங்கள் நலம்
உங்கள் கையில்!..

இயற்கையே இறைவன்
இறைவனே இயற்கை..
***

10 கருத்துகள்:

  1. நேற்று என் பழைய பள்ளி நண்பன் பேசிக் கொண்டிருந்தான்.  பெண் அமையாததால் இன்றும் அவன் பிரம்மச்சாரி!  தனிமையில் இருப்பவன்,  நாங்கள் பேசிய (நான் எங்கே பேசினேன்?  வெறும் உம...  உம தான்!) பல விஷயங்களுக்கிடையே அவனும் உணவு முறை பற்றியும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தான்.

    பதிலளிநீக்கு
  2. அடுத்த தலைமுறையினர் எதிர் காலத்தை கடப்பது கஷ்டம்தான் ஜி

    பதிலளிநீக்கு
  3. சமீபத்தில் சந்தித்த சிலரது உணவு பழக்க வழக்கங்கள் பயமுறுத்தின! பெரும்பாலான நாட்கள் வெளியில் தான் சாப்பாடு என்று பெருமையோடு சொன்னார்கள் - எங்கே சென்று கொண்டிருக்கிறோம் என்று தோன்றியது.

    பதிலளிநீக்கு
  4. 'காத்துக் கொள்வது நம்கையில்"

    உணவும் கலரும் கலப்படமும் நல்ல அறிவுறுத்தல்.

    பதிலளிநீக்கு
  5. 'காத்துக் கொள்வது நம்கையில்"

    உணவும் கலரும் கலப்படமும் நல்ல அறிவுறுத்தல்.

    பதிலளிநீக்கு
  6. ஆமாம் முன்பெல்லாம் நாம் குடித்த தண்ணீரிலும், உண்ட உணவிலும் விஷப் பதார்த்தங்கள் இருந்தது என்பது அரிது. நம் உடலில் இருந்த விஷத்தை முறியடிக்கக் கூடிய மருந்தாய் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் நாம் பெரும்பாலும் ருசியுள்ள உணவு, இனிப்புப் பண்டங்கள் நிறமுள்ள உணவுகள் போன்றவற்றை நாடிச் செல்வதால் அஜினோமோட்டோ போன்றவைகள், நிறமிகள் எல்லாமே நம் உடலுறுப்புகளை குறிப்பாகக் கிட்னியை கூடுதலாகப் பாதிக்கிறது. கான்சர் வருகிறது. இதைப் பற்றி எல்லாம் தெரிந்த நாமே பல நேரங்களில் இது போன்ற உணவுகளைக் காணும் போது கொஞ்சம் நப்பாசையில் ஈர்க்கப்பட்டு எடுத்துக் கொள்கிறோம். அதுதான் இதில் சோகம். நல்ல பதிவு

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  7. துரை அண்ணா வெளிநாட்டைப் போல இங் கே உணவுத் தரக் கட்டுப்பாடு என்பது சுத்தம்!

    ஒரு படம் கூட வந்தது. படம் பெயர் நினைவில்லை. நான் பார்த்ததில்லை ஆனால் படம் எதைப்பற்றி என்பது தெரியும். ஆனால் அப்படித் தரம் ஆய்வதில் மிகவும் நேர்மையாக இருக்கும் அதிகாரி எப்படியான துன்பத்திற்குள்ளாகிறார் அரசியலால் என்று காட்டும் படம்.

    சமீபத்தில் ஃப்ரெஷ் பழ ரசங்கள் தயாரிப்பு எப்படியான பழங்களில் தண்ணீரில் தயாரிக்கப்படுகின்றன என்பதை தமிழ்நாட்டு உணவுத்தரக்கட்டுப்பாட்டு அதிகாரி காணொளி காண நேர்ந்தது. அதுவும் ஒரு அமைச்சருக்குத் தீராத வயிற்றுத் தொந்தரவு வந்தப்ப எதனாலன்னு பார்த்தா தர்பூஸ் ஜூஸ் குடித்ததால்னு தெரிய வர உடனே நடவடிக்கை….அப்பதான் தெரிந்தது தர்பூஸ் பழங்கள் எப்படி எங்கு சுகாதாரமுறையற்ற இடங்களில் எலிகள் புகுந்து விளையாடும் சாக்கடைப் பகுதிகளில் வைப்பதும் தெரியவந்து நடவடிக்கை எடுத்தாங்களாம் பலர் பிடிபட்டாங்களாம்.

    இவ்வளவு நாள் சாதாரண மக்கள் அவதி தெரியவில்லை அமைச்சரின் உடல்நலம் கெட்டதும் நடவடிக்கை!! இதுதான் இங்கு நிலை!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. வெளிநாட்டில் தடைசெய்யப்பட்டிருக்கும் மசாலா பொருட்கள் இஙு பல சூப்பர் மார்க்கெட்டுகளிலும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அதுவும் பெரிய ராக்குகளில் என் கண்ணின் வேகமான கணக்கெடுப்பிலேயே 100 தேறியிருக்கும்!

    புதிதாகத் திற ந் திருக்கும் ஹைப்பர் மார்க்கெட்டில் இங்கு. அசு போனேன். தடை செய்யப்பட்டவையாச்சே என்று தோன்றியது.

    ஆனா அதுக்குக் காரணம் சொல்லப்பட்டது, நான் கேட்டப்ப... போட்டி அரசியல் என்று!!!! இவை நல்லவைதான் என்று...என்ன சொல்வீ ங க? நாமதான் கவனமாக இருக்க வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. விழிப்புணர்வு பதிவு.
    காணொளி எனக்கும் வாடஸ் அப்பில் வந்தது.
    உணவு பழக்க வழக்கம், உண்ணும் நேரம் எல்லாம் மாறி விட்டது.
    வேலை நேரம் மாறி விட்டது. என்ன செய்வது நாம் கவனமாக இருக்க வேண்டும். கூடுமானவரை வீட்டில் உணவு தயாரித்து உண்பது நல்லது.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. பதிவின் வழி செய்திகள் தீமைகள் எவையென்பதை உணர்த்துகின்றன. சிறப்பான கட்டுரை. நல்ல உணவை தேர்ந்தெடுத்து உண்போம். நலம் பெற வாழ்வோம் . நலம் நம் கையில்தான் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..