நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், செப்டம்பர் 05, 2024

வன்னியடி சாஸ்தா


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 20
வியாழக்கிழமை


உவரியில் ஸ்ரீ கோயிலின் நிருதி மூலையில் விநாயகர் கோயில்.. 




இக்கோயிலுக்குப் பின் புறத்தில் ஸ்ரீ பூர்ணகலா பொற்கலா சமேத ஸ்ரீ வன்னியடி சாஸ்தா திருக்கோயில்..

அமைதியான சூழல்.. 

மூலஸ்தானத்தின் எதிர்ப்புறம்  வேட்டைக்குச் சென்று திரும்பும் பாவனையில் ஐயனாரின் பிரம்மாண்ட சுதை சிற்பம்.. 

பரிவார தேவதைகள் என எந்தச் சந்நிதியும் கிடையாது.. 

அரச மரத்தின் கீழ் நாக பிரதிஷ்டை மட்டுமே..

ஐயனார் கோயிலில் பதிவு செய்யப்பட்ட சில காட்சிகள்..












பையரா அமளியானும் பரம்பொருள் முதலும் நல்கும்
ஐயனே ஓலம் விண்ணோர் ஆதியே ஓலம் செண்டார்
கையனே ஓலம் எங்கள் கடவுளே ஓலம் மெய்யர்
மெய்யனே ஓலம் தொல்சீர் வீரனே ஓலம் ஓலம்..
-: கந்த புராணம் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

10 கருத்துகள்:

  1. படங்கள் அழகு.  எங்கள் குலதெய்வத்தை தரிசித்துக் கொண்டேன்.  வரும் ஞாயிறு அவரை தரிசிக்கச் செல்கிறோம்.  இந்தக் கோவில் பிரம்மாண்டமாய் இருக்கிறது.  எங்கள் கோவில் சிறிய கோவில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்களுடன் வாயிலாக தெய்வங்களை தரிசித்துக் கொண்டேன். படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. விபரங்களும் அருமை. எங்கள் அம்மா வீட்டு குலதெய்வமும் அருள்மிகு ஸ்ரீ சாஸ்தான். ஸ்ரீ வன்னயடி சாஸ்தா அனைவருக்கும் நல்லதையே தர வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி. ..

      நீக்கு
  3. படங்கள் அழகு. வன்னியடி சாஸ்தா அனைவருக்கும் அருள் புரியட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வன்னியடி சாஸ்தா அனைவருக்கும் அருள் புரியட்டும்...

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்

      நீக்கு
  4. குலதெய்வ கோவில் மிக அருமையாக இருக்கிறது.
    வன்னியடி சாஸ்தாவை கந்தபுராண பாடலை பாடி வேண்டிக் கொண்டேன்.
    அனைவருக்கும் உடல் நலத்தை தரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் உடல் நலத்தை தரட்டும்.

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி

      நீக்கு
  5. குலதெய்வ வழிபாடு படங்கள் நன்றாக இருக்கின்றன.

    வன்னியடி சாஸ்தாவை வணங்குகின்றோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..