நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, செப்டம்பர் 21, 2024

தரிசனம் 1


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 
முதல் சனிக்கிழமை


நின்ற மா மருது இற்று வீழ  நடந்த நின்மலன் நேமியான்
என்றும் வானவர் கைதொழும்இணைத் தாமரை அடி எம்பிரான்
கன்றி மாரி பொழிந்திட  கடிது ஆநிரைக்கு இடர் நீக்குவான்
சென்று குன்றம் எடுத்தவன் திரு வேங்கடம் அடை நெஞ்சமே.. 1020



எண் திசைகளும் ஏழ் உலகமும் வாங்கி பொன் வயிற்றில் பெய்து
பண்டு ஓர் ஆல் இலைப் பள்ளி கொண்டவன் பால் மதிக்கு இடர் தீர்த்தவன்
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன்  ஒள் எயிற்றொடு
திண் திறல் அரியாயவன்  திருவேங்கடம் அடை நெஞ்சமே.. 1023



பாரும் நீர் எரி காற்றினோடு  ஆகாசமும் இவை ஆயினான்
பேரும் ஆயிரம் பேச நின்ற   பிறப்பிலி பெருகும் இடம் 
காரும் வார் பனி நீள் விசும்பிடைச் சோரும் மா முகில் தோய்தர
சேரும் வார் பொழில் சூழ் எழில் திருவேங்கடம் அடை நெஞ்சமே.. 1024
-: திருமங்கையாழ்வார் ;-

காணொளிக்கு  நன்றி

ஓம் ஹரி ஓம்
***

10 கருத்துகள்:

  1. வெங்கட்ராமா கோவிந்தா.... வெங்கட்ராமா கோவிந்தா... வெங்கட்ராமா கோவிந்தா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவிந்த
      கோவிந்த

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. புரட்டாசி சனிக்கிழமை பதிவு அருமை.
    காணொளி அருமை.
    கோவிந்தன் கடையேற்றுவான்.
    திருமங்கையாழ்வார் பாடலை பாடி வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவிந்த
      கோவிந்த

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி

      நீக்கு
  3. புரட்டாசி சனி நாளில் நல்ல பகிர்வு. திருவேங்கடம் பெருமாளே சரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவிந்த
      கோவிந்த
      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இம்மாதத்திய புரட்டாசி சனியன்று அருமையான திருப்பதி கோவில் தரிசனம் பெற்றுக் கொண்டேன். ஸ்ரீ வெங்கடேச பெருமாள் அனைவரையும் காத்தருளட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவிந்த
      கோவிந்த

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி

      நீக்கு
  5. புரட்டாசி சனிக்கிழமை பதிவு சிறப்பு. அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..