நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூலை 23, 2023

நாகத்தின் பூஜை

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி  7
 ஞாயிற்றுக்கிழமை



2010 ஜனவரி 16 அன்று தேப்பெருமாநல்லூரில் உள்ள ஸ்ரீ வேதாந்த நாயகி உடனாகிய ஸ்ரீ விஸ்வநாத ஸ்வாமி திருக்கோயிலில் சூரிய கிரகணத்தின் போது நாகம் ஒன்று வில்வ இலைகளைக் கொண்டு சிவலிங்கத்தை வழிபட்டது.. 

சந்நிதிக்குள் வந்த நாகம் லிங்கத்தின் மேலேறி பின்  மெதுவாக இறங்கி, அபிஷேக நீர் வெளியேறும் கோமுகத்தின் வழியாக வெளியேறி ஸ்தல விருட்சமான வில்வ மரத்தை நோக்கிச் சென்று  அந்த மரத்தின் மீது ஊர்ந்து  சில வில்வ இலைகளைப் பறித்துக் கொண்டு மீண்டும் சிவசந்நிதிக்கு வந்த வழியே திரும்பியது. வில்வ தளங்களை சிவலிங்கத்தின் மீது சாற்றியது.. 


கோமுகத்தினுள் நாகம்


உச்சியில் நாகம்
நாகம் - இவ்வாறு சில முறை  செய்ததாக அப்போது பரபரப்பான செய்தி படங்களுடன் வெளியானது.. வெளியுலகிற்கு இந்தத் திருக்கோயில் தெரிய வந்ததும் அப்போது தான்...

நாகம் வாயில் வில்வத்துடன் ஊர்ந்து செல்கின்ற படங்களை அப்போது சேர்த்து வைத்திருந்தேன்..

அடுத்த சில மாதங்களில் குவைத்திற்கு வந்து விட்டதால் அந்தக் கணினி பயன்படுத்தப்படாமல் செயலிழந்து விட்டது..

சென்ற மாதம் இறைவன் அருளால் தேப்பெருமாநல்லூரில் தரிசனம் செய்து பதிவில் இட்ட பின்
அன்புக்குரிய கீதாக்கா, ஸ்ரீராம், கீதாரங்கன் மற்றும் கமலா ஹரிஹரன் ஆகியோரது விருப்பத்தினால் திரும்பவும் இணையத்தில் இருந்து இந்தப் படங்களைத் தேடி எடுத்து பதிவில் சேர்த்திருக்கின்றேன்..

அனைவருக்கும்  நன்றி..
**
திருக்கண்டியூர் 
திவ்யதேசத்தில் திரு 
ஆடிப்பூர தரிசனம்..




விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை ஒன்றும் இல்லையாம்
பண்ணிய உலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நம சிவாயவே..
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

8 கருத்துகள்:

  1. வியக்க வைக்கும் நிகழ்வு.  கோவிலை பிரபலப்படுத்த யாரும் பழக்கி படம் எடுத்து வெளியிட்டிருப்பார்களோ என்னும் குறுக்கு புத்தியையும் கட்டுப்படுத்த முடியவில்லை!

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை.படங்கள் அருமை. நாகம் சிவபெருமானுக்கு பக்தியுடன் பூஜை செய்யும் படங்களைப்பார்த்து மெய் சிலிர்த்து விட்டேன். இது பூர்வஜென்மத்தின் தொடர்பா? இந்தப்பிறவியில் அது ஏன் ஒரு நாகமாக மீண்டும் ஜனித்து தன் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்கிறது?இறைவனின் அற்புதங்களில் இதையெல்லாம் நினைத்து மனது விடை காணாது மிகவும் தவிக்கிறது. நீங்கள் எங்களுக்காக அந்த இப்படங்களை சேகரித்து எங்களுக்கு காணக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

    திருக்கண்டியூர் திரு ஆடிப்பூர விழாவை கண்டு எம்பெருமானின் தரிசனம் பெற்றுக் கொண்டேன். ஸ்ரீ ஆண்டாள் தாயார் அனைவரையும் காத்தருள வேண்டிக் கொள்கிறேன்.

    ஓம் நமசிவாய... ஓம் நமோ நாராயணா... இறைவன் அனைவரையும் நல்லபடியாக காத்தருள வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. நாகம் வில்வ இலைகளை கொண்டு பூஜை செய்யும் படங்கள், மற்றும் விவரங்கள் படித்து மனம் மகிழ்ச்சி அடைகிறது.
    பழைய சினிமா பாடங்களில், புராண படங்களில் இப்படி பட்ட காட்சிகளை காட்டுவார்கள்.நிறைய அற்புதங்கள் இப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
    அப்பர் பதிகத்தை பாடி தரிசனம் செய்து கொண்டேன்.

    படங்கள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
  4. நாகத்தின் பூசை மெய்சிலிர்க்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. ஆச்சரியமான நிகழ்வு துரை அண்ணா. படங்களைத் தேடி எடுத்துப் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி.

    படங்கள் எல்லாம் அழகு.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. முற்றிலும் புதிய செய்தி. விரிவாகத் தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..