நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூலை 09, 2023

திருவிண்ணகர் 2

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 24
ஞாயிற்றுக்கிழமை

ஒப்பிலியப்பன் கோயில் தரிசனம் இன்றும் தொடர்கின்றது..













உள் பிரகாரத்தின்
வடபுறம் ஸ்வாமியின் தசாவதார - ஆழ்வார் தரிசன ஓவியங்கள் கண்களில் நிறைகின்றன..

திருமதிலை ஒட்டியபடி கம்பிகளைப் பதித்து நடைவழி அமைக்கப்பட்டிருப்பதால் சற்று விலகி வந்த பிறகே படங்கள் எடுக்க முடிந்தது..

வெளிப் பிரகாரத்தில் மேற்தளத்தின் கீழாக இரு புறங்களிலும் அழகழகான சுதை சிற்பங்கள்..







 கோயில் பற்றிய விவரங்களில்
ஸ்ரீ கோமளவல்லி 
என்பது பிழையாக எழுதப்பட்டுள்ளது..

இன்னும் எத்தனை எழுத்துப் பிழைகளோ.. கவனிக்கவில்லை..








நூற்றெட்டு திவ்ய தேசங்களில் ஸ்வாமி
எழுந்தருளியிருக்கும் திருக்கோலங்களைக் காட்டும் அந்தச் சிற்பங்கள் கண்கொள்ளாக் காட்சியாக விளங்குகின்றன.

நின்று தரிசித்து ஒவ்வொன்றையும் நமஸ்கரிக்கும் போது திவ்ய தேசங்கள் நூற்றெட்டினையும் தரிசித்த பரவசம் ஏற்படுகின்றது..

இந்த அளவில்
தஞ்சை  திரும்புதற்கு நேரம் ஆனபடியால் தண்டனிட்டு வணங்கி விட்டு அங்கிருந்து புறப்பட்டோம்..
**
சாந்தேந்து மென் முலையார் தடந்தோள் புணர் இன்ப வெள்ளத்து 
ஆழ்ந்தேன் அருநரகத்து அழுந்தும் பயன் படைத்தேன்
போந்தேன் புண்ணியனே உன்னை எய்தி என் தீவினைகள் 
தீர்ந்தேன் நின் அடைந்தேன் திருவிண்ணகரானே.. 1471
-: திருமங்கையாழ்வார் :-
 (நன்றி ஆழ்வார் அமுதம்)

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
***


10 கருத்துகள்:

  1. தரிசனம் சிறப்பு. இன்று என் சகோதரி . அங்கு சென்றிருக்கிறார். என்னால் உடன் செல்ல முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  2. படங்கள் அத்தனையும் அழகு, துரை அண்ணா. அதுவும் சிற்பங்களாக உள்ளவை அனைத்தும் நீங்கள் சொல்லியிருப்பது போல் கண்கொள்ளாக் காட்சி. ரசித்துப் பார்த்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. கோமளவல்லி என்பதில் எழுத்துப் பிழையா? அண்ணா? அப்படித்தானே எழுதுவதுண்டு. எங்கள் வீட்டில் இப்பெயரில் பெரியவர்கள் உண்டு என்பதால் எழுந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. படங்கள் அனைத்தும் மிக அழகு!

    பதிலளிநீக்கு
  5. அனைத்து படங்களும் மிக அருமையாக இருக்கிறது.
    திவ்ய தேசபடங்களை தரிசனம் செய்தது மனதுக்கு மகிழ்ச்சி.
    கண் கொள்ளா காட்சிதான் அற்புதமாக இருக்கிறது.
    ஆழவார் அமுதம் பாடி தரிசனம் செய்து கொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  6. படங்கள் மிக அழகு. நான் பல முறை இந்தக் கோவிலுக்குச் சென்றிருக்கிறேன், சமீபத்தில்கூட. மனைவிக்கு இது குலதெய்வம். மகளுக்கும் மிகவும் பிடித்த தலம்

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. ஒப்பிலியப்பன் கோவில் படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. ஓவியங்களும், சுதை சிற்பங்களும் பார்க்கவே அவ்வளவு அழகாக உள்ளது. மனம் நிறைந்து பார்த்து ரசித்தேன். இந்தக் கோவிலுக்கு நாங்கள் சென்றதில்லை. உங்கள் பதிவின் மூலம் சிறப்பான தரிசனம் பெற்றுக் கொண்டேன். ஓம் நமோ நாராயணா.. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன். .

    பதிலளிநீக்கு
  8. சின்ன வயசில் இருந்தே பலமுறை போன கோயில் இது. ஒப்பில்லா அப்பன் அனைவருக்கும் அருளாசி புரியட்டும்.

    பதிலளிநீக்கு
  9. சிறப்பான படங்கள். கும்பகோணம் வந்தபோது என்னால் இந்தக் கோயிலுக்குச் செல்ல முடியவில்லை. சிறுவயதில் இங்கே சென்று வந்ததோடு சரி. அடுத்த தமிழகப் பயணத்தில் செல்ல எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..