நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜூலை 12, 2023

பிள்ளையார்பட்டி 2

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 27
 புதன் கிழமை

நேற்றைய பதிவின் தொடர்ச்சி..



மாமன்னன் ராஜராஜன் - தான் எழுப்புகின்ற கோயிலுக்கு என, விநாயகர் சிலை செய்து தஞ்சைக்குக் கொண்டு வரும் வழியில் விநாயகர் சிலை வைக்கப் பட்டிருந்த தேரின் அச்சு முறிந்ததால் தேர் நின்று விட்டது. 

தச்சர்கள் கூடி தேரின் அச்சை சரி செய்த பின்னும் தேரை அந்த இடத்தில் இருந்து நகர்த்த முடியவில்லை.

இதைக் கண்ட  மன்னன் - இந்த இடத்தில் தான் விநாயகர் கோயில் கொள்ள  விரும்புகிறார் - எனக் கருதி, விநாயகர் சிலையை தஞ்சைக்கு  எடுத்துச் செல்ல வேண்டாம் - என முடிவு செய்து அச்சு முறிந்து தேர் நின்ற இடத்திலேயே விநாயகரை பிரதிஷ்டை செய்தார்  - என்றும்
சொல்லப்படுகின்றது..


தஞ்சையில் இருந்து வல்லம் செல்லும் வழியில் உள்ள பிள்ளையார்பட்டி  கிராமத்தில் ஹரித்ரா கணபதி எனும் பெயருடன் கோயில் கொண்டு விளங்குகின்ற இந்தப் பிள்ளையார் - பதினோரு அடி உயரமும் ஐந்தடி அடி அகலமும் உடையவர்..





ஸ்ரீ முருகன்
மூலஸ்தானத்தில்
இவருக்கு இடப்புறமாக சிவலிங்கப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது..
வலப்புறத்தில் சந்நிதி விநாயகர்.. ஸ்ரீ வள்ளி  தேவயானையுடன் முருகன்..



பிள்ளையாருக்கு எதிரே நந்தி வாகனம் அமையப் பெற்றிருப்பது சிறப்பு.. 


விநாயகர் மூலஸ்தானத்திற்குத் தென்புறத்தில் புதிதாக ஐயப்பன் சந்நிதி..





வடபுறத்தில் ஸ்ரீ வைத்தியநாதர் தையல்நாயகி சந்நதிகள்..


ஸ்ரீ பூர்ணா புஷ்கலையுடன் கூடிய ஐயனாருடன் விளங்கும்  பழைமையான வயிரவர் சந்நதி..


சந்நதக்கு நேர் எதிராக நவக்கிரக மண்டபம்..


வைரவர் சந்நதிக்குத் தென்புறத்தில் அகத்தியர் லோபாமுத்ரை சந்நதியும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன்..

கும்பாபிஷேக தினத்தன்று காலையில் செல்வதற்கு இயலாத நிலையில் மாலைப் பொழுதில் சென்று தரிசனம் செய்து வலம் வந்தேன்..









காலையில் கும்பாபிஷேக விழாவிற்கு கலந்து கொள்ளாதவர்களுக்காக  இரவு எட்டரை மணியளவில்  பூந்தூறலாக மழை பெய்து மனதைக் குளிர்வித்தது..




பிள்ளையார் கோயிலின் வாசலிலேயே ஸ்ரீ கிருஷ்ண பஜனை மண்டலியும் அமைந்துள்ளது..


தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வல்லத்துக்கு செல்லும் பேருந்துகள் பிள்ளையார்பட்டி  கோயில் வழியாகச்  செல்கின்றன.. 

மருத்துவக் கல்லூரியில் இருந்து இரண்டு கிமீ., தொலைவு..

இந்தப் பதிவில் உள்ள படங்கள் எனது கை வண்ணம்..

திருவையாறு.in 
காணொளிக்கு நெஞ்சார்ந்த நன்றி..


ஓரானைக் கன்றை உமையாள் திருமகனைப்
பேரானைக் கற்பகத்தைப் பேணினால் - வாராத
புத்தி வரும் வித்தை வரும் புத்திர சம்பத்து வரும்
சத்திதருஞ் சித்திதருந் தான்..
-: பழந் தமிழ்ப் பாடல் :-

ஓம் கம் கணபதயே நம:
***

6 கருத்துகள்:

  1. படங்கள் சிறப்பு.  காணொலி கண்டு மகிழ்ந்தேன்.  விநாயகர் தரிசனம் காலையில்.

    பதிலளிநீக்கு
  2. மருத்துவக்கல்லூரி குடியிருப்பில் குடியிருந்த நாட்கள் நினைவில் நிழலாடுகின்றன.  முன்பெல்லாம் வெள்ளத்துக்கு 11 ஆம் நம்பர் பஸ் போகும்.  இப்போது எப்படியோ.. !  எப்போதும் படி தாண்டி தொங்கும் கூட்டமாகவே இருக்கும்!

    பதிலளிநீக்கு
  3. காணொளி மூலம் கும்பாபிஷேகம் பார்த்தேன், நன்றி.
    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. ஓவியங்கள் அழகு.
    நேரில் பார்த்த உணர்வு.

    பதிலளிநீக்கு
  4. படங்கள் மிக நன்றாக இருக்கின்றன துரை அண்ணா, காணொலியும் கண்டு தரிசனம் ஆனது.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. இந்தத் தகவல்கள் அனைத்தும் இன்றே தெரிந்து கொண்டேன். இது வேறே கோயில் என்றே நினைக்கிறேன். மிக்க நன்றி அறியத் தந்தமைக்கு.

    பதிலளிநீக்கு
  6. காணொளி வழியாக கும்பாபிஷேகம் கண்டு கொண்டேன் மகிழ்ச்சி ஜி

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..