நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, செப்டம்பர் 03, 2022

திருச்செந்தூர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

கடந்த ஞாயிறன்று (28/8) புறப்பட்ட நாங்கள் வியாழனன்று(1/9) தான் தஞ்சைக்குத் திரும்பினோம்.. 


திங்கட்கிழமை காலையில்
திருச்செந்தூர் கடலிலும் நாழிக் கிணற்றிலும் குளித்த பின் ஆங்குள்ள நீர்த் தொட்டியில் மேலிருக்கும் மணலைக் கழுவிக் குளித்து விட்டு உடை மாற்றிக் கொண்டோம்..

வெள்ளையர் ஆட்சியில் சிதைந்து கிடந்த இத்திருக் கோயிலை - மீட்டு திருப்பணிகளைச் செய்த புண்ணியர்கள் ஐவர்..

ஸ்ரீ மௌன ஸ்வாமிகள், ஸ்ரீ காசி ஸ்வாமிகள், ஸ்ரீ ஆறுமுக ஸ்வாமிகள். ஸ்ரீ ஞானானந்த தேசிக ஸ்வாமிகள், ஸ்ரீ வள்ளி நாயக ஸ்வாமிகள்.. 

ஸ்ரீ மௌன ஸ்வாமிகள், ஸ்ரீ காசி ஸ்வாமிகள், ஸ்ரீ ஆறுமுக ஸ்வாமிகள் - ஆகியோரது ஜீவ சமாதிகள் கடற்கரையில் தென்புறமாக அமைந்திருக்கின்றன.. இம் மூவரது சமாதிகளை தரிசனம் செய்தோம்..








ஸ்ரீ தேசிக ஸ்வாமிகள் ஆழ்வார் திருநகரியில் சமாதி அடைந்துள்ளார்.. ஸ்ரீ வள்ளி நாயக ஸ்வாமிகளது சமாதி கோயிலின் அருகில் வடமேற்காக அமைந்துள்ளது..


மூவர் சமாதிகளை வணங்கிய பின்
அடுத்திருக்கும்,
ஐயா வைகுண்டர் அவதார பதியில் தரிசனம் செய்தோம்..




அந்த நேரத்தில் வாழைப்பழம்
பிரசாதமாக வழங்கப்பட்டது.. 

அங்கிருந்து அலைகளின் ஊடாக நடந்தபடியே திருக்கோயில் வளாகத்தில்  அன்னதானக் கூடத்துக்கு வந்து விட்டோம்.. 100/150 அன்பர்கள் தான் இருந்தார்கள்.. 

பீட்ருட் பொரியல், பறங்கிக்காய் சாம்பாருடன் ரசம் மோர், ஊறுகாய், அப்பளம் பாயசம்.. 
அன்புடன் பரிமாறினார்கள்..

முற்பகல் 11:30 மணியளவில் ஸ்வாமி தரிசனம்.. மிகமிக மகிழ்ச்சியாக இருந்தது..

கம்பிக் கூண்டுக்குள் நுழைந்த நாங்கள் சந்நிதி வாசலுக்குச் சென்று தான் நின்றோம்.. அங்கே பத்துபேர் மட்டுமே இருந்தார்கள்..

இருந்தாலும் அங்கிருந்த காவல் பணியாளர் சப்தமிட்டுக் கொண்டே இருந்தார்..

செந்தில் நாதனையும்  ஜெயந்தி நாதனையும் கண் குளிரக் கண்டு மகிழ்ந்தோம்.. 

அடுத்து
சூரசங்கார மூர்த்தி தரிசனம்.. பிரகாரத்தில் வைத்து அபிஷேகப் பால் கொடுத்தார்கள்..

தெற்கு திருச்சுற்று மண்டபத்தில்,
ஸ்ரீ மௌனகுரு ஸ்வாமிகள், ஸ்ரீ காசி ஸ்வாமிகள், ஸ்ரீ தேசிக ஸ்வாமிகள் ஆகியோரின் சிலாரூபங்கள் அமைக்கப்பட்டுள்ளன..

ஸ்ரீ ஆறுமுக ஸ்வாமிகள், ஸ்ரீ வள்ளி நாயக ஸ்வாமிகள் ஆகியோருக்கும் சிலா ரூபங்கள் உள்ளதாகச் சொல்கின்றனர்.. எங்கே என்று தெரியவில்லை..

அடுத்து, வள்ளிநாயகி, தேவகுஞ்சரி சந்நிதிகளில் வணங்கி விட்டுபள்ளி கொண்டிருக்கும் பெருமாளையும் சேவித்து விட்டு கொடிமரத்தின் அருகில்  தண்டனிட்டோம்... 

திருக்கோயிலில் இருந்து வெளியேறும் வழியில் தொன்னையில் சர்க்கரைப் பொங்கல் வழங்கினார்கள்..

மேலைக் கோபுர வாசல் அருகில் ஸ்ரீ சங்கிலி பூத ஸ்வாமியையும்
வள்ளிநாயகி குகையிலும் தரிசனம் செய்தோம்..









இப்போது நாழிக் கிணற்றில் குளிப்பதற்கும் வள்ளிக் குகைக்குள் நுழைவதற்கும் கட்டணம் இல்லை..

கோயிலுக்கு அருகில் ஸ்ரீ வள்ளி நாயக ஸ்வாமிகள் தவயோக சமாதியிலும் தரிசனம் செய்து விட்டு,



நிறைவான மனதுடன் 
மூன்று மணியளவில் உடன்குடிக்குப் புறப்பட்டோம்..

மறுநாள் உவரியில்
மழையின் காரணமாக அடிக்கடி மின்தடை..

தொலைபேசியைப் புதுப்பிக்கவும் முடிய வில்லை.. வலைத் தளங்களுக்கு வருவதற்கும் இயலவில்லை..

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..
வீரவேல் முருகனுக்கு அரோகரா..
***

19 கருத்துகள்:

  1. திருச்செந்தூர் முருகனை இதுவரை தரிசித்ததில்லை.  பல தளங்களிலும் புகைப்படங்கள் வழியே அந்தத் தலத்தின் அழகை ரசித்ததுண்டு.  முருகா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் இன்னும் திருச்செந்தூர் தரிசனம் செய்ததில்லை என்பதை அறியும் போது மிகவும் சங்கடமாக இருக்கின்றது..

      அவனுக்குத் தெரியும் தங்களுக்கு எப்போது தரிசனம் தரவேண்டும் என்று!..

      முருகா.. முருகா!..

      நீக்கு
  2. காலை ஒருவேளை போஜனமே நாள் முழுவதும் தாங்கிற்று போலும்.  இடையில் அந்த சர்க்கரைப் போங்க பிரசாதம் கைகொடுத்ததோ..  ஸ்வாமிகள் சமாதி பற்றிய விவரங்கள் எல்லாம் புதுசு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலையில் மிதமான சிற்றுண்டி.. பதினொரு மணியளவில் மதியச் சாப்பாடு.. யாதொரு குறையும் இல்லை..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் கண்களுக்கு நிறைவாக உள்ளது. உங்கள் புண்ணியத்தில் நானும் செந்தூர் ஆண்டவனை மனம் குளிர தரிசித்துக் கொண்டேன்.

    ஸ்வாமிகளின் ஜீவ சமாதி தலங்கள் பற்றி அறிந்து கொண்டேன். நாங்களும் இதையெல்லாம் பார்த்ததில்லை. இனியொரு முறை திருச்செந்தூர் செல்லும் போது இவையனைத்தையும் காணும் சந்தர்ப்பத்தை இறைவன் அருள வேண்டும். படங்கள், மற்றும் பகிர்வுக்கும் நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்களும் இன்னும் திருச்செந்தூர் தரிசனம் செய்ததில்லை என்பதை அறியும் போது மிகவும் சங்கடமாக இருக்கின்றது..

      அவன் நல்ல வழி காட்டுவான்..
      நம்பிக்கை.. நம்பிக்கை..

      வெற்றிவேல்!..

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      நாங்கள் இரு தடவைகள் திருச்செந்தூருக்கு சென்றிருக்கிறோம் அழகன் முருகனின் தரிசனமும் பெற்றிருக்கிறோம் . ஆனால் நீங்கள் சொன்ன ஸ்வாமிகளின் ஜீவ சமாதிகளுக்கு .சென்று தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என குறிப்பிட்டேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. தங்கள் அன்பின் வருகையும் விளக்கமான கருத்துரையும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  4. பத்து நாட்களுக்கு முன் நாங்களும் சென்று வந்தோம்... முருகா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி தனபாலன்..

      நீக்கு
  5. தரிசனம் நன்று வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஜி..

      நீக்கு
  6. கோவிலைத் தவிர வேறு எங்கும் சென்றதில்லை. நீங்கள் எடுத்த படங்கள் அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி நெல்லை..

      நீக்கு
  7. நாங்களும் பல வருடங்களுக்கு முன் நீங்கள் சென்று வந்த இடங்களுக்கு சென்று தரிசனம் செய்து ஐயா வைகுண்டரையும் தரிசனம் செய்தோம். கோவிலில் கூட்டம் இல்லாமல் தரிசனம் செய்து வந்தது அறிந்து மகிழ்ச்சி. இப்போது கூட்டம் அதிகமாக இருக்கிறது என்று என் உறவுகள் போய் வந்தவர்கள் சொன்னார்கள்.

    படங்கள் எல்லாம் மிக அருமையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த 15 வருடங்களில் இப்படியான தரிசனம் இது இரண்டாவது முறை..

      தங்கள் அன்பின் வருகையும் விவரமான கருத்துரையும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  8. கோயிலுக்குச் சென்றிருக்கிறேன் துரை அண்ணா. ஆனால் நீங்கள் சொல்லியிருக்கும் சுவாமிகள் பற்றி எல்லாம் புதிய தகவல்கள். அந்த இடங்களுக்குச் சென்றதுமில்லை.

    அலைகளின் ஊடாக நடந்து// ஆஹா என்ன இதமாக இருந்திருக்கும். மிகவும் பிடித்த விஷயம்.

    படங்கள் எல்லாமே மிக அழகு.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. கோயிலின் அருகில் கடல் என்ன அழகு இல்லையா....எனக்கு ரொம்பவும் பிடித்த கோயில் கடல்...

    உடன்குடி - கருப்பட்டிக்கு புகழ்பெற்றது. என் அத்தை அங்குதான் ஹெல்த் இன்ஸ்பெகடராக வேலைபார்த்தார்கள். அங்கு வரச் சொல்லிக் கூப்பிட்டுக் கொண்டே இருந்தார்கள்...அப்போது போகவே முடியவில்லை. இப்போது களக்காடு அருகில் கடம்போடுவாழ்வில் குடியேறி அங்குதான் இருக்காங்க.

    உவரி கடற்கரை கண்டதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. திருச்செந்தூர் முருகன் தரிசனம் பல வருடங்கள் முன் கிடைக்கப் பெற்று மகிழ்ந்திருக்கிறேன். கடலோரத்தில் அருமையான அழகிய தலம்.

    உங்கள் பதிவில் கண்டது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..