நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, செப்டம்பர் 23, 2022

ஊதி மலை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி வெள்ளிக் கிழமை


வழக்கம் போல திருப்புகழ் தரிசனம்...

பொன்னூதி மலை என்னும் ஊதிமலை

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் இருந்து 14 கிமீ.,

ஈரோடு - பழனி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது..

சித்தர் கொங்கணர் வடித்த திருமேனி..

இங்கே சித்தர் பெருமான்
இருந்து ரசவாதத்தில் மூட்டம் இட்டு ஊதித் தணல் உண்டாக்கி தங்கம் விளைவித்து ஏழைகளுக்கு உதவியதாக ஐதீகம்..  

காலம் கடந்த நிலையில் அப்படி உருவாக்கிய தங்கப் பாளங்களை இங்கே தான் சித்தர் ஒளித்து வைத்திருக்கின்றார் என்று எண்ணிய சமூக விரோதிகள் சுற்றுப் புறத்து குகைகளை சேதப்படுத்தியிருக்கின்றனர்..

பொன்னாசை கொண்ட திப்பு சுல்தான் - இதைக் கேள்வியுற்று பெரும் படையுடன் வந்து கோயிலைத் தாக்கினான். தகர்த்தான்.. 

ஒன்றும் கிடைக்காததால் விக்ரகத்தை சிதைத்து காட்டுக்குள் எறிந்து விட்டான் என்றும் அடுத்த சில மாதங்களில் நடந்த போரில்  கொல்லப்பட்டான் என்றும் சொல்லப்படுகின்றது..

பின்னர் மூலஸ்தானத்தில் வேறொரு விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில் ஆதி திருமேனியும் காட்டுக்குள் இருந்து மீட்கப்பட்டு தற்போது மகா மண்டபத்தில் வைத்து வணங்கப்படுகின்றது..

ஊதியூர் என்பது இப்போது வழங்கப்படும் பெயர்.. 


தலம்
ஊதி மலை

ஸ்ரீ உத்தண்ட வேலாயுத மூர்த்தி

தானதன தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த ... தனதான

ஆதிமக மாயி யம்பை தேவிசிவ னார்ம கிழ்ந்த
ஆவுடைய மாது தந்த ... குமரேசா

ஆதரவ தாய்வ ருந்தி யாதியரு ணேச ரென்று
ஆளுமுனை யேவ ணங்க ... அருள்வாயே

பூதமது வான வைந்து பேதமிட வேய லைந்து
பூரணசி வாக மங்க ... ளறியாதே

பூணுமுலை மாதர் தங்கள் ஆசைவகை யேநி னைந்து
போகமுற வேவி ரும்பு ... மடியேனை

நீதயவ தாயி ரங்கி நேசவரு ளேபு ரிந்து
நீதிநெறி யேவி ளங்க ... வுபதேச

நேர்மைசிவ னார்தி கழ்ந்த காதிலுரை வேத மந்த்ர
நீலமயி லேறி வந்த ... வடிவேலா

ஓதுமறை யாக மஞ்சொல் யோகமது வேபு ரிந்து
ஊழியுணர் வார்கள் தங்கள் ... வினைதீர

ஊனுமுயி ராய்வ ளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த
ஊதிமலை மீது கந்த ...  பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
( நன்றி : கௌமாரம்)


மகமாயி எனும் ஆதியாக விளங்குபவள் அம்பாள்..
ஆவுடையாள் எனும் பெயரையும் உடைய உமாதேவியவள் - சிவபிரானுடன் மகிழ்ந்து அளித்த
குமரேசா!.. 

உன் மீது அன்பு கொண்டு மனம் கசிந்துருகி,
முழுமுதலாகிய அருணாசலப் பெருமானே!.. - என்று
உன்னையே வணங்கி நிற்கும்படிக்கு ஆட்கொண்டு அருள் புரிவாய்!..

ஐம்பூதங்களின் செயல்களால்
மாறுபட்டு விளங்கும் இந்த உடம்புடன் எங்கெல்லாமோ
அலைந்தேன்!..

பூரணமாகிய சிவ ஆகமங்களைத் தெரிந்து கொள்ளாமல்,

பொன்னகை பொலிகின்ற மங்கையர் தம் கொங்கைகளில்
ஆசை வைத்து  பலவிதமாக நினைந்து,

ஒவ்வொரு நாளும்
சுக போகங்களிலேயே ஆழ்ந்திருப்பதற்கு
விரும்பிய என்னை (த் தடுத்து)

(என்மீது)
கருணையும் இரக்கமும் கொண்டு அன்புடன் 
திருவருள் புரிந்து,

சைவ நீதியும் சன்மார்க்க நெறியும் (என்னுள்) விளங்குமாறு செய்த உபதேச மூர்த்தி!..

நேர்மை மிகுந்த நெஞ்சினில் விளங்கும்
சிவ பெருமானின்  செவியில் ஓம் என்னும் பிரணவத்தினை உரைத்த மந்திர மூர்த்தி!..

நீலமயிலில் ஏறி வருகின்ற வடிவேலவனே!..

ஓதுகின்ற வேதங்களும் ஆகமங்களும் கூறுகின்ற -
சிவயோகத்தை மேற்கொண்டு
விதியின் வழியை நன்கு உணர்ந்து கொண்டு வாழ்பவர்களின் வினைகள் தீருமாறு -

அவர்களது உடலோடும் உயிரோடும் கலந்து 
வளர்ந்து கீர்த்தி மிகும் சிவானந்த வாழ்வினைத் தந்தவனே!..

ஊதி மலையின் மீது 
உள்ளம் உவந்து உறைகின்ற பெருமாளே!..

இன்றைய பதிவில்
நிலவினும் குளிர்ந்து
தேனினும் தித்திக்கும்
தீந்தமிழ்ப் பாடல்..

கந்தன் கருணை 
திரைப்படத்தில் 
கவியரசரின் பாடல்..

திரு K.V. மகாதேவன் 
அவர்களது 
இசையமைப்பில் 
பாடியிருப்பவர்கள்
S. ஜானகி
சூலமங்கலம் 
S.ராஜலக்ஷ்மி..


ஓங்காரப் பொருளோனே
போற்றி..  போற்றி..
ஊதி மலை ஆண்டவனே
போற்றி.. போற்றி!..
***

17 கருத்துகள்:

  1. பொன்னைத் தூக்கி காட்டில் எறிந்துவிட்டு எதைத் தேடினார்களோ மூடர்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூடர்கள்..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்....

      நீக்கு
  2. ஊதிமலை பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. இம்மாதிரி எத்தனை எத்தனை கோயில்கள்? மக்கள் அறியாமல் ஆங்காங்கே இருக்கின்றன. அழகான முருகன். எப்போதுமே அழகுதானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகன் எப்போதும் அழகன் தான்..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றியக்கா..

      நீக்கு
  3. காணொளி திறக்க நேரம் எடுத்தது எனக்கு! மற்றபடி பலமுறை கண்டு ரசித்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றியக்கா..

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    அருமையான பதிவு
    வழக்கப்படி வெள்ளியில் முருக தரிசனம் மனதிற்கு மகிழ்வை தந்தது. ஊதிமலை பற்றி கேள்விப்பட்டதில்லை. பெயர் காரண விபரங்கள் அறிந்து கொண்டேன். பொன்னால் தெய்வங்களுக்கும் சோதனை வருகிறதே.. நல்லவேளை ஆதி திருமேனி மீட்கப்பட்ட விபரம் மகிழ்ச்சியை தருகிறது. திருப்புகழ் பாடலும் பொருளும் அருமை. காணொளி எனக்கு வரவில்லை. வந்தவுடன் பிறகு பார்த்து கேட்டு ரசிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி வராதது ஏன் என்று தெரியவில்லையே ..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  5. தாராபுரம் சாலையில் உள்ள ஊர்தானே ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த ஊர் தான்..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  6. ஊதிமலை ...ஆஹா அற்புத தரிசனம் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  7. அழகான முருகன் கோயில் ஊதிமலை.
    ஊதிமலை கோயில் திருப்புகழும், அதன் விளக்கமும் பகிர்வு அருமை.
    அடுத்த பாடல் மிகவும் பிடித்த பாடல்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. ஊதி மலை.. திருப்புகழ் அழகு..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  8. ஊதி மலை பற்றி அறிந்ததில்லை துரை அண்ணா...திருப்புகழ் அதன் விளக்கம் அருமை.

    அவருக்கு முருகன் இப்படி மனதை நல்லதாக மாற்றியது போல நம்மை எல்லாம் மாற்றினால் எப்படி இருக்கும்!!!

    பாடல் இப்போதுதான் கேட்கிறேன் அண்ணா. பாடல் ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..