நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, செப்டம்பர் 18, 2026

தமிழமுது

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
புரட்டாசி முதல் நாள்
 வெள்ளிக்கிழமை


திருநாவுக்கரசர்  அருளிச் செய்த தேவாரம்..

தலம் - திருநள்ளாறு

பூவிரியும் மலர்க்கொன்றைச் சடையி னானைப்
புறம்பயத்தெம் பெருமானைப் புகலூ ரானை
மாவிரியக் களிறுரித்த மைந்தன் தன்னை
மறைக்காடும் வலிவலமும் மன்னி னானைத்
தேவிரியத் திகழ்தக்கன் வேள்வி யெல்லாஞ்
சிதைத்தானை உதைத்து அவன்தன் சிரங்கொண்டானை
நாவிரிய மறைநவின்ற நள்ளாற்றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்தவாறே.. 6/20/7

ஓம் நம சிவாய
***

4 கருத்துகள்:

  1. ​நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
    கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
    ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
    ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க

      மகிழ்ச்சி
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. 'கஜசம்கார மூர்த்தி ' படம் அழகாக இருக்கிறது.

    திருநல்லாறு இறைவனை வணங்கிக் கொண்டோம்.

    ஓம் சிவாய நமக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றியம்மா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..