நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
புரட்டாசி முதல் நாள்
வெள்ளிக்கிழமை
திருநாவுக்கரசர் அருளிச் செய்த தேவாரம்..
தலம் - திருநள்ளாறு
பூவிரியும் மலர்க்கொன்றைச் சடையி னானைப்
புறம்பயத்தெம் பெருமானைப் புகலூ ரானை
மாவிரியக் களிறுரித்த மைந்தன் தன்னை
மறைக்காடும் வலிவலமும் மன்னி னானைத்
தேவிரியத் திகழ்தக்கன் வேள்வி யெல்லாஞ்
சிதைத்தானை உதைத்து அவன்தன் சிரங்கொண்டானை
நாவிரிய மறைநவின்ற நள்ளாற்றானை
நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்தவாறே.. 6/20/7
ஓம் நம சிவாய
***

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
பதிலளிநீக்குஇமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
நீக்குமகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்
'கஜசம்கார மூர்த்தி ' படம் அழகாக இருக்கிறது.
பதிலளிநீக்குதிருநல்லாறு இறைவனை வணங்கிக் கொண்டோம்.
ஓம் சிவாய நமக.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றியம்மா