நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
பார்த்தனுக் கருளும் வைத்தார்
பாம்பரை ஆட வைத்தார்
சாத்தனை மகனா வைத்தார்
சாமுண்டி சாம வேதம்
கூத்தொடும் பாட வைத்தார்
கோளரா மதியம் நல்ல
தீர்த்தமும் சடைமேல் வைத்தார்
திருப்பயற்றூர னாரே.. 4/32/4
பஞ்ச பாண்டவருள் பார்த்தனுக்கு அருள் புரிந்து பாசுபதம் நல்கிய
திருப்பயற்றூர் ஈசன் , இடுப்பில் ஆடுமாறு பாம்பினை
இறுகக் கட்டியவர்
சாத்தன் ஆகிய ஐயனாரை மகனாகக் கொண்டவர்..
காளிக்காகச் சாம வேதம் பாடியவாறு கூத்து நிகழ்த்தி -
கொடிய பாம்பு , பிறை , கங்கை ஆகியவற்றைச் சடையில் தரித்தவர் ஆவார்..
நன்றி
பன்னிரு திருமுறை
ஓம் நம சிவாய
***


வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடிவெல்க!
பதிலளிநீக்குபிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க!
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!
அனைவருக்கும் அருள் புரிவாய் இறைவா.....
நீக்குமகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இது மீள் பதிவோ.? புரட்டாசி வெள்ளிக்குப் பதிலாக ஆவணி வியாழன் என்று வந்துள்ளது. அதனால் கேட்டேன்.
திருநாவுகரசரின் தேவாரம் பாடி எம்பெருமான் இறைவனை வணங்கி கொண்டேன். விளக்கமும் அருமை.
சிவாய நம ஓம். சிவாய நம ஓம் என எப்போதும் சிந்தையில் இருத்திக் கொள்ள என்றும் "அவன்" அருள் புரிய வேண்டும். 🙏. பிரார்த்தித்துக் கொள்கிறேன்.🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே .
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
புதிய பதிவு தான்... ஒழுங்கமைவில் தவறு நேர்ந்து விட்டது
நீக்குஅனைவருக்கும் நல்லருள் புரிவாய் இறைவா.....
மகிழ்ச்சி..
நன்றியம்மா
பார்த்தனுக்கு அருள் புரிந்து பாசுரம் நல்கியவர்." இன்றைய இரண்டு படங்களுமே அழகாக உள்ளன.
பதிலளிநீக்குஓம் சிவாய நமக.
அனைவருக்கும் நல்லருள் புரிவாய் இறைவா.....
நீக்குமகிழ்ச்சி..
நன்றியம்மா