நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி
செவ்வாய்க்கிழமை
நவீன கல்வி முறையினால்
நாம் இழந்த நலங்கள்
**
கொன்றைவேந்தன்
கொன்றை வேந்தன் செல்வன் அடிஇணை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே..
1.அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று
3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று
4. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்
[ஈயார் = பிறக்குக் கொடாதவர்]
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
[உண்டி = உணவு]
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
7. எண்ணும் எழுத்தும் கண்எனத் தகும்
[எண் = கணிதம்; எழுத்து = மொழி]
8. ஏவா மக்கள் மூவா மருந்து
[ஏவு = வேலை செய்யென்று கட்டளையிடுதல்;
மூவா = மூப்படையாத ., வயதாகாத பெற்றோர் ]
9. ஐயம் புகினும் செய்வன செய்
[ஐயம் = பிச்சை]
10. ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்
12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு
[ஔவியம் = பொறாமை]
13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு
[அஃகம் = தானியம்; சிக்கென = சிக்கனமாக; வீண்செய்யாமல் தக்க வைக்குமாறு]
ஆத்திசூடி
ஆத்திசூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே
1. அறம் செய்ய விரும்பு
2. ஆறுவது சினம்
3. இயல்வது கரவேல்
4. ஈவது விலக்கேல்
5. உடையது விளம்பேல்
6. ஊக்கமது கைவிடேல்
7. எண் எழுத்து இகழேல்
8. ஏற்பது இகழ்ச்சி
9. ஐயம் இட்டு உண்
10. ஒப்புர வொழுகு
11. ஓதுவது ஒழியேல்
12. ஒளவியம் பேசேல்
13. அஃகம் சுருக்கேல்
நன்றி
விக்கி
ஔவையார் திருவடிகள் போற்றி
***


சின்ன வயதில் படித்தது நினைவுபடுத்தி விட்டீர்கள்.
பதிலளிநீக்குஆத்தி சூடியும் கொன்றை வேந்தனும் இப்போது சொல்லித் தரப்படுகின்றதா தெரியவில்லை...
நீக்குநெல்லை அவர்களுக்கு நன்றி
இளமையான அவ்வையார்! சிறுவயதில் திண்ணையில் அமர்ந்து மனப்பாடம் செய்யும் குழந்தைகள் மனக்கண்ணில் தெரிகிறார்கள். "அந்த நாளும் வந்திடாதோ"
பதிலளிநீக்குதமிழாய்ந்த தமிழர்களால் அந்த நாளும் வந்திடும்....
நீக்குமகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்
சமீபத்தில் அதாவது சுமார் இரண்டு மாதங்களுக்கு முன் என் தங்கை பெண் இதையெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது.
பதிலளிநீக்குதமிழ் வாழும்...
நீக்குவாழ வைக்கும்...
மகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. அழகான, அருமையான கொன்றைவேந்தன், ஆத்திச்சூடி பாடல்கள். இந்த கருத்துள்ள பாடல்களின் அர்த்தங்கள் நம் நினைவுக்குள் இருக்கிறது.
நீங்கள் சொல்வது போல இப்போது இதையெல்லாம் பள்ளிகளில் சொல்லிக்குடுக்கப் படுகிறதா என்பதுதான் தெரியவில்லை. .பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பின் வருகைக்கு
நீக்குமகிழ்ச்சி
நன்றியம்மா...
கொன்றைவேந்தன்,ஆத்திசூடி பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஅவ்வை என்றால் கே,பி . சுந்தராம்பாள் தான் நினைவுக்கு வரும் பகிர்ந்த படமும் அதை சொல்கிறது.
உண்மை தான்...
நீக்குமகிழ்ச்சி..
நன்றியம்மா..
நினைவுக்கு வருவார்கள்.
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றியம்மா
பேரனின் பள்ளிப் பாடத்தில் இருந்தது கொன்றை வேந்தன் , ஆத்திசூடி பேரனுடன் சேர்ந்து சென்ற வருடம் மீண்டும் நாம் படித்தோம்.
பதிலளிநீக்குஈழத்தில் தமிழின் நிலை வேறு....
நீக்குஇங்கு தான் பிரச்னை
அன்பின் வருகைக்கு
மகிழ்ச்சி..
நன்றியம்மா