நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 17
திங்கட்கிழமை
வதக்கிய வெங்காயச் சட்னி
பல்லாரி வெங்காயம் நல்லது என்றாலும்,
சாம்பார்
வெங்காயம் மிக மிக நல்லது..
தேவையானவை :
சாம்பார் வெங்காயம் 200 gr
பச்சை மிளகாய் 2
மஞ்சள் தூள் சிறிது
தேங்காய் ஒருமூடி
கறிவேப்பிலை 3 இணுக்கு
கல் உப்பு தேவைக்கு
தாளிப்பதற்கு :
கடலை எண்ணெய்
பால் பெருங்காயத் தூள்
கடுகு - உளுத்தம் பருப்பு சிறிதளவு
கறிவேப்பிலை ஒரு இணுக்கு
செய்முறை :
வெங்காயத்தைச் சுத்தம் செய்து நீளவாக்கில் சன்னமாக நறுக்கிக் கொள்ளவும்..
பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்..
தேங்காய் மூடியில் பாதியளவு துருவிக் கொள்ளவும்..
கறிவேப்பிலையைக் கழுவி விட்டு உருவிக் கொள்ளவும்..
அகலமான வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் - அதில் வெங்காயத்தை இட்டு வதக்கவும். அடுத்ததாக பச்சை மிளகாய் கறிவேப்பிலை மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
வெங்காயம் கறிவேப்பிலை
சற்று வதங்கியதும் தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். .
வதக்கிய இந்த பொருட்களை சூடு தணிந்ததும் மிக்ஸியில் இட்டு உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு -
நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
வாணலியில்
எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து - வெங்காய விழுதில் கலந்து கொள்ளவும்.
வதக்கிய வெங்காயச் சட்னி தயார்.
வயிற்றில் உபாதை உடையவர்கள் பச்சை மிளகாயை ஒதுக்கி விட்டு சிறிதளவு இஞ்சியை
சேர்த்துக் கொள்ளலாம்..
கார சாரம் தான் விருப்பம் எனில், விழுது அரைக்கின்ற போது வறுத்த உலர் மிளகாயைச் சேர்த்துக் கொள்ளலாம்.
நெசவாளிக்கு குரங்குக் குட்டி எதற்கு?. - என்றொரு பழமொழியும் இருக்கின்றது..
***
தரமான சமையல்
தருமே மகிழ்ச்சி
நம்முடைய நலம்
நம்முடைய கையில்
ஓம் சிவாய நம ஓம்
***
அருமை. வெங்காயத்தோடு பச்சை மிளகாய் சேர்க்காமல், பட்டை மிளகாய் சேர்த்து செய்ததுண்டு. ஆனால் இப்படி வெங்காயம் மட்டும் தனியாக செய்த அனுபவம் மிகச்சிறிது. தக்காளி சேர்த்தே செய்திருக்கிறோம்!
பதிலளிநீக்குஅப்படியும் இப்படியுமாக மாற்றினால் இதற்குள்ளேயே வேறொரு செய்முறை கிடைத்து விடும்..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
மிக்சியில் இட்டு அரைக்கப் போகிறோம் என்னும்போது சாதாரணமாக நறுக்கிக் கொள்ளலாமே... ஏன் சன்னமாக நறுக்கவேண்டும்? சீக்கிரம், நன்றாக வதங்குவதற்கா?
பதிலளிநீக்குசில மிக்ஸிகள் சொதப்பி விடுகின்றன..
நீக்குஎனவே தான் நறுக்கிக் கொள்வது...
வேறொரு ரகசியம் இல்லை..
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
நாங்களும் வரமிளகாய் சேர்த்துதான் செய்வதுண்டு பச்சைமிளகாய் சேர்த்ததில்லை செய்து பார்க்கிறேன்.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி மாதேவி
அருமையான செய்முறை.... இப்போ தமிழ்நாடு ரவாதோசை டிபன் சாம்பார் தேங்காய் சட்னி சாப்பிட ஆசை... இந்தச் சட்னியும் நல்லா இருக்கும்.
பதிலளிநீக்கு
நீக்கு///ரவா தோசை டிபன் சாம்பார் தேங்காய் சட்னி சாப்பிட ஆசை...///
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. வெங்காய சட்னி செய்முறை நன்றாக உள்ளது. சின்ன வெங்காய சட்னி என்றால் அதன் ருசியே தனிதான்..! நானும் இப்படித்தான் செய்வேன். ஆனால், தேங்காய் துருவி இதனுடன் சேர்த்ததில்லை. ஒரு முறை இப்படியும் செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
ஒருமுறை செய்து பாருங்கள்..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி