நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 10
புதன்கிழமை
குறளமுதம்
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. 45
அருளமுதம்
ஸ்ரீ ஆண்டாள்
அருளிச்செய்த
திருப்பாவை
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய.. 10
நன்றி
நாலாயிர திவ்யப்ரபந்தம்
ஸ்ரீ மாணிக்கவாசகர்
அருளிச்செய்த
திருப்பள்ளியெழுச்சி
புவனியிற் போய்ப்பிற வாமையில் நாள்நாம்
போக்குகின் றோம்அவ மேஇந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமு தேபள்ளி எழுந்தருளாயே.. 10
திருப்பள்ளி எழுச்சி நிறைவு பெற்றது..
ஸ்ரீ திருநாவுக்கரசர்
அருளிச்செய்த
திருத்தாண்டகம்
நெடிய விசும்பொடு கண்ணே போற்றி
நீள அகல முடையாய் போற்றி
அடியும் முடியும் இகலி போற்றி
அங்கொன் றறியாமை நின்றாய் போற்றி
கொடிய வன் கூற்றம் உதைத்தாய் போற்றி
கோயிலா என் சிந்தை கொண்டாய் போற்றி
கடிய உருமொடு மின்னே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.. 10
உண்ணா துறங்காது இருந்தாய் போற்றி
ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி
எண்ணா இலங்கைக் கோன் தன்னைப் போற்றி
இறைவிரலால் வைத்துகந்த ஈசா போற்றி
பண்ணார் இசையின்சொற் கேட்டாய் போற்றி
பண்டே என் சிந்தை புகுந்தாய் போற்றி
கண்ணாய் உலகுக்கு நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.. 11
திருத்தாண்டகம் நிறைவு பெற்றது..
நன்றி
பன்னிரு திருமுறை
தருமபுர ஆதீனம்
ஃ
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
அழகான தமிழ் அள்ளிப்பருகி, ஆண்டாளையும், ஆதி சிவனையும் வணங்கி கொண்டேன்.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும்
நீக்குமகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்
ஓம் ஹரி ஓம்
பாடல்களை பாடி இறைவனை வணங்கி கொண்டேன்
பதிலளிநீக்குபடங்கள் நன்றாக இருக்கிறது.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
நீக்குமகிழ்ச்சி
நன்றி
ஓம் ஹரி ஓம்
நலம் வாழ்க
ஓம் நம சிவாய...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன் அவர்களுக்கு நல்வரவு..
நீக்குநலம் தானே
வருகையும் கருத்தும்
மகிழ்ச்சி
நன்றி
ஓம் ஹரி ஓம்
நலம் வாழ்க
திருப்பாவை ,திருப்பள்ளி எழுச்சி பாடல்கள் கண்டோம்.
பதிலளிநீக்குசிவாய நமக.
அன்பின்
நீக்குவருகையும் கருத்தும்
மகிழ்ச்சி
நன்றி மாதேவி
ஓம் ஹரி ஓம்
நலம் வாழ்க