நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், டிசம்பர் 02, 2024

சோம வாரம் 3

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
திங்கட்கிழமை

மூன்றாவது சோம வாரம்


இன்றைய தரிசனம்
திரு ஐயாறு

இறைவன்
ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர்
அம்பிகை
ஸ்ரீ தர்மசம்வர்த்தனி

தலவிருட்சம்
வில்வம்
தீர்த்தம் காவிரி

அம்மையப்பன் -
ஐயாறப்பர் எனவும் அறம் வளர்த்த நாயகி எனவும் வழங்கப்படுகின்ற இத்தலம் காசிக்கு நிகரானது..

திருநாவுக்கரசருக்கு கயிலாய மலையாய் 
திருக்காட்சி நல்கிய திருத்தலம்..

தெற்கு கோபுரத்தின் வாயிற்காவலர் யம தர்மராஜனை விரட்டியடித்ததால் சிவாம்சம் பெற்று ஸ்ரீ ஆட்கொண்டார் எனத் திகழ்கின்றார்.. அவர் முன்பாக  நந்தீசர் சேவை சாதிக்கின்றார்..

இவரது சந்நிதிக்கு முன்பாகத்தான்  கலய நாயனார் ஏற்படுத்திய குங்கிலியக் குண்டம் இருக்கின்றது..

குங்கிலியக் குண்டம்








சித்திரை விசாகத்தன்று ஸ்வாமியும் அம்பாளும் நந்தீசன் சுயம்பிரகாஷிணி தேவி  தம்பதியருடன் -  திருப்பழனம், 
திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி,திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி , திருநெய்த்தானம் ஆகிய தலங்களுக்கு எழுந்தருளும் சப்த ஸ்தானம் எனும் கோலாகலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிகழ்ந்து வருகின்றது..





















அன்னை பராசக்தி - அறம் வளர்த்த நாயகி என, இத்தலத்தில் முப்பத்திரண்டு அறங்களைச் செய்தனள் என்பது தலபுராணம்..



அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரது திருவாக்கிலும் இடம் பெற்ற திருத்தலம்..

ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே
உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலாம்  ஆனாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலாம் ஆனாய் நீயே
திரு ஐயாறு அகலாத செம்பொற் சோதீ.. 6/38/1
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

10 கருத்துகள்:

  1. எப்பொழுதோ பதின்ம வயதில் சென்றது...  ஆற்றங்கரையோரம் கச்சேரி   நடக்குமிடம் நினைவில் இருக்கிறதே தவிர, கோவில் நினைவில் இல்லை.  பார்க்கும் ஆவல் வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரைவில் வந்து தரிசனம் செய்யுங்கள்.

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. அப்பர் தேவராத்தை படித்து இறைவனை தரிசனம் செய்து கொண்டேன்.
    படங்களும் செய்திகளும் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கு நல்வரவு..

      அன்பு மகன், மருமகள், கவின் - அனைவரும் நலமா..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ..
      நலம் வாழ்க..

      நீக்கு
  3. எல்லோரும் நலம் . மகன் ஊருக்கு போய் கொண்டு இருக்கிறான்.
    நாளை அங்கு இருப்பான்.
    பேரன் கவின், மருமகள் இங்கு வரவில்லை ஊருக்கு முன்பே போய் விட்டார்கள். கவின் 10 வது படிப்பதால் விடுமுறை இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவரது நலத்திற்கும் நல்வாழ்த்துகள்..

      மகிழ்ச்சி..
      நன்றி...

      நீக்கு
  4. "திரு ஐயாறு அகலாத செம்பொற் சோதி.... படங்கள் அனைத்தும் கண்டு வணங்கினோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..