நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மே 14, 2024

வைகாசி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி முதல் நாள் 
செவ்வாய்க்கிழமை


மாதங்களின் சுழற்சியில் இரண்டாவது மாதம் வைகாசி. இம் மாதத்தின் சிறப்பு விசாக நட்சத்திரம்..

விசாகத்தின் பெயரை ஒட்டியே வைகாசி என அமைந்தது.. . 

மேஷ ராசியில் இருந்த சூரியன் ரிஷப ராசிக்குள் 
சஞ்சரிக்கும் காலம் - வைகாசி..

சுப முகூர்த்த நாட்கள் நிறைந்த மாதம் வைகாசி..

சிவபெருமானின் நெற்றி விழிகளில் இருந்து வெளிப்பட்ட  தீப்பொறிகள் சரவணத் திருக்குளத்தில் குழந்தைகளானது விசாகத்தில் தான்..  (வைகாசி விசாகம் 9,10  22, 23/5)

எனவே முருகப்பெருமானுக்கு விசாகன் என்ற திருப்பெயரும் உண்டு..


வைகாசி  சுக்ல பட்ச  சதுர்தசி சுவாதியில் ( 22/5) அந்தி வேளையில் தூணில் இருந்து ஸ்ரீ நரசிம்மர்
தோன்றினார்..

சித்தார்த்தனுக்கு போதி மரத்தடியில் ஞானம் விளைந்த நாள்  வைகாசி பௌர்ணமியே..

வைகாசி மாதத்தின் மூல நட்சத்திர நாளில் தான் திருஞானசம்பந்தப் பெருமான் சிவசாயுஜ்யம் பெற்றார்.. 

வைகாசி விசாகத்தை ஒட்டி சிவாலயங்கள் பலவற்றில் வசந்த உற்சவங்கள் நிகழ்கின்றன...



வைகாசி 16 புதன் (29/4)  திருவோண நட்சத்திர நாளில் - தஞ்சை மாநகரின் ராஜ வீதிகளில் 25 கருடசேவை நடைபெற உள்ளது..


மனை மங்கலங்கள் விமரிசையாக நிகழ்வுறுகின்ற மாதம் வைகாசி..

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல வைகாசியிலும் வழி பிறக்கும்..
 

வைகாசி பொறந்தாச்சு.. என்று அந்த நாட்களில் மக்கள் மனங்களில் மகிழ்ச்சி பெருகிடும்... 

ஏனெனில் அடுத்தடுத்து வேளாண் பணிகளும் ஆரம்பமாகி விடும்..

அன்றைய விலைவாசி விவரங்கள்..
1950. 5. 14


 சுதேசமித்திரன்
நன்றி Fb

வருகவே  வருகவே
வடிவேலன் வருகவே
வளர்நலம் வாழ்க என
வரமெலாம் தருகவே..

திருமுருகன் வேல் நின்று
திசையெலாம் காக்கவே
தீப ஒளி என வந்து
இருள் எலாம் களைகவே!..
**

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

12 கருத்துகள்:

  1. வைகாசிக்குதான் எவ்வளவு சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. வைகாசியின் சிறப்புக்களை தெரிந்து கொண்டேன். அழகாக சொல்லியுள்ளீர்கள் படங்கள் அனைத்தும் மிக அழகு. அழகான விசாகனை வழிபட்டு கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    வைகாசி சிறப்புக்கள் சிறப்பு. வைகாசி பொறந்தாச்சு என்ற தலைப்பில் ஒரு திரைப்படம் வந்த நினைவு உள்ளது. இதைச் சொல்ல விட்டுப் போய் விட்டது.

    இரண்டாவதாக அன்றைய விலைப்பட்டியலை பெரிதாக்கி படித்தறிந்து வந்தேன். "அன்றைய காலம் போல் வருமா.?" என எங்கள் அம்மா நாங்கள் வளரும் பருவத்தில் அடிக்கடி சொல்லும் வாசகம் நினைவுக்கு வந்தது. எவ்வளவு மலிவான விலைகளுடன் தரமான பொருட்களை பெற்று வந்தோம். பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எவ்வளவு மலிவான விலைகளுடன் தரமான பொருட்களை பெற்று வந்தோம்..

      அதெல்லாம் கனாக் காலமாகி விட்டது..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. வைகாசி மாதம் சிறப்பான மாதம் . முருகனின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.

    விலைவாசி விவரங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. விலைப்பட்டியல் பிரமிக்க வைக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரமிப்பு இன்னும் இருக்கின்றது..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  6. வைகாசி மாதத்தின் சிறப்புகள் பலவும் கண்டோம்.

    விசாகனைவணங்கி அருள் பெறுவோம்.

    வைகாசி பெளர்ணமி நமது நாட்டின் பெளத்தர்களின் "வெசாக்' பண்டிகை சிறப்பானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி மாதேவி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..